Published:Updated:

மகிழ்ச்சி அன்லிமிடெட் 2023! - சில டிப்ஸ் | My Vikatan

Representational Image

ஒரு நிமிடம் நம்மிடம் உள்ள குறைகளைப் பட்டியல் போடுங்கள் பிறகு இந்த வருடம் முதல் எந்த குறையை நிறையாக்க வேண்டும் என்று எண்ணுங்கள். இதோ சில விஷயங்களை கடைப்பிடித்தால் இந்த வருடம் நிச்சயமாக உங்களுக்கு 'ஹாப்பி நியூ இயரா'கத்தான் இருக்கும்...

Published:Updated:

மகிழ்ச்சி அன்லிமிடெட் 2023! - சில டிப்ஸ் | My Vikatan

ஒரு நிமிடம் நம்மிடம் உள்ள குறைகளைப் பட்டியல் போடுங்கள் பிறகு இந்த வருடம் முதல் எந்த குறையை நிறையாக்க வேண்டும் என்று எண்ணுங்கள். இதோ சில விஷயங்களை கடைப்பிடித்தால் இந்த வருடம் நிச்சயமாக உங்களுக்கு 'ஹாப்பி நியூ இயரா'கத்தான் இருக்கும்...

Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

எப்படியோ ஒரு வருடம் முடிந்துவிட்டது 365 நாட்களும் எப்படி நகர்ந்தது என்றே தெரியவில்லை. கண்ணிமைக்கும் நேரத்தில் இந்த ஆண்டு அதாவது 2023 வந்துவிட்டது. நாமும் வருடம் பிறந்தால் ஏதாவது தீர்மானம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்போம். நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும்.. பொய் சொல்லக்கூடாது.. அலுவலகத்திற்கு குறித்து நேரத்தில் செல்ல வேண்டும் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

கல்லூரி பிள்ளைகள் என்றால் இனி 'ரூமை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். தன் துணியை நானே வாஷ் செய்து கொள்ள வேண்டும்' இல்லத்தரசியாக இருந்தால் இந்த வருட முதல் நாம் சிக்கனமாக இருக்க வேண்டும். நகைச்சீட்டு சேர்க்க வேண்டும் என்று புத்தாண்டு தீர்மானங்களை எடுப்பர். புத்தாண்டு தீர்மானம் என்பது ஒரு மனிதன் தனது உள்ளுணர்வுக்கு உணர்த்துவது போல் தான்.

Representational Image
Representational Image

ஆண்டின் முதல் நாள் என்ன செய்கிறோமோ, என்ன நடக்கிறதோ, அதேபோல் ஆண்டு முழுவதும் நடக்கும் என்பது பொதுவான எண்ணம். நம்மில் பலர் புத்தாண்டு தீர்மானத்தை அன்றைய தினம் கடைப்பிடிப்பதோடு சரி, பிறகு காற்றில் பறக்க விட்டுவிடுவர். ஆனால் யார் ஒருவர் அந்த தீர்மானத்தை ஆண்டு முழுவதும் பின்பற்றுகிறாரோ, அவரை வாழ்வின் லட்சியத்தை அடைய முடியும். நம்மால் இந்த தீர்மானத்தை பின்பற்ற முடியும், பின்பற்றியே தீர வேண்டும் என்ற உத்வேகம் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும்.

ஒரு நிமிடம் நம்மிடம் உள்ள குறைகளைப் பட்டியல் போடுங்கள் பிறகு இந்த வருடம் முதல் எந்த குறையை நிறையாக்க வேண்டும் என்று எண்ணுங்கள்.

இதோ சில விஷயங்களை கடைப்பிடித்தால் இந்த வருடம் நிச்சயமாக உங்களுக்கு 'ஹாப்பி நியூ இயரா'கத்தான் இருக்கும்...

அது என்ன விஷயம்னு கேக்குறீங்களா? சொல்லிட்டா போச்சு...

*கோபம் மனிதனுக்கு சத்ரு. தைரியம் இல்லாதவர் ,தாழ்வு மனப்பான்மை கொண்டவர், தவறுகள் செய்பவர், மனோதிடம் அற்றவர், இப்படிப்பட்டவர்கள் தங்கள் குறைகளை மறைத்து தங்களை காத்துக் கொள்ளவே கோபம் என்ற ஆயுதத்தை கையில் எடுப்பார்கள். (நீங்கள் இந்தலிஸ்டில் எதிலும் "நான் இல்லை" என்று உளமாற சொல்லிக்கொண்டு கோபத்தை விட்டு விலகி நில்லுங்க பாஸ்) கோபப்பட்டால் நஷ்டம் நமக்கே என்று சிந்தியுங்கள்.

*அன்பு , பாசம், நட்பு இவைகளுக்கு மட்டுமே தலை வணங்குங்கள்.

*மனம் விட்டு சிரிக்க கற்றுக் கொள்ளுங்கள். குழந்தையின் சிரிப்பை போல் கள்ளம் கபடம் இல்லாமல் சிரியுங்கள்.

*24 மணி நேரத்தில் தினமும் 10 நிமிடமாவது உங்களுக்கு மிகவும் பிடித்தவர்களிடம் ( இறைவனிடம்) இருந்தாலும் சரி ஜாலியாக பேசி வணங்குங்கள்.

மகிழ்ச்சி அன்லிமிடெட் 2023! - சில டிப்ஸ் | My Vikatan

*உங்கள் மனசாட்சி சொல்படி கேளுங்கள் மனசாட்சிக்கு பயந்து நடக்கக் கற்றுக் கொள்ளுங்கள். மனசாட்சி போல உற்ற நண்பன் ஒருவருக்கு யாருமேயில்லை.

*எதற்கெடுத்தாலும் டென்ஷன் ஆகாதீர்கள்.

*வீட்டில் பெரியவர்களின்/மற்றும் கணவரின் ஒவ்வொரு பேச்சுக்கும் இல்லை என்று சொல்லாமல்,' ஆம்' என்று சொல்ல பழகுங்கள்.

*பேசும்போது அடுத்தவர் கண்களைப் பார்த்து பேச கற்றுக் கொள்ளுங்கள்.

*ஆடாமல் நேராக நில்லுங்கள் அமரும்போது கால் ஆட்டாதீர்கள்.

*தயவுசெய்து அலைபேசியை தேவையான விஷயத்துக்கு மட்டும் உபயோகியுங்கள்.

*உடலை ஃபிட்டாக வைக்க உடற்பயிற்சி மற்றும் காலை நேர நடை பயிற்சிக்கு கண்டிப்பாக நேரம் ஒதுக்குங்கள்.

*செலவைவிட சேமிப்பை அதிகமாக்குங்கள்.

*நடந்ததை நினைத்து வருந்தாமல் நடக்கப் போவது நல்லதாக அமைய வேண்டும்.. அமையும் என்று மனதில் முதலில் நினையுங்கள்.

*உங்கள் வீட்டு பணிப்பெண்ணும் இன்னொருவர் வீட்டில் எஜமானி தான் என்பதை நினைவில் கொண்டு,  உங்களால் முடிந்த உதவியை கண்டிப்பாக செய்யுங்கள். (அவள் சந்தோஷமாக இருந்தால் உங்கள் வீடும் ஜொலிக்கும்)

*எல்லாவற்றிற்கும் மேலாக இத்தனை வருடம் சமைத்துக் களைத்து போய் உள்ள உங்கள் அம்மாவுக்கு முடிந்த போதெல்லாம் நீங்களே சமைத்து, பரிமாறித்தான் பாருங்களேன். வாழ்க்கை வண்ணமயமாக மாறும்.

இதையெல்லாம் கடைபிடித்தால் நிச்சயம் 2023... ஹேப்பி நியூ இயர் தான்!

விகடன் வாசக அன்பர்கள் அனைவருக்கும் அழகான ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

என்றென்றும் அன்புடன்

ஆதிரை வேணுகோபால்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.