Published:Updated:

சுதந்திர தேவி சிலையும் நம்மூர் சிற்றுண்டியும்! - நியூயார்க் டைரீஸ் | My Vikatan

Representational Image

அன்றைய Immigration நடைமுறைகளோடு ஒப்பிட்டால் இன்றைய நடைமுறைகள் எவ்வளவு எளிது என்பதையும், நான் எவ்வளவு வசதியாக விமானத்தில் வந்து நியூ யார்க்கில் இறங்கினேன் என்பதையும் எண்ணும் போது சற்று வியப்படைந்தேன்.

Published:Updated:

சுதந்திர தேவி சிலையும் நம்மூர் சிற்றுண்டியும்! - நியூயார்க் டைரீஸ் | My Vikatan

அன்றைய Immigration நடைமுறைகளோடு ஒப்பிட்டால் இன்றைய நடைமுறைகள் எவ்வளவு எளிது என்பதையும், நான் எவ்வளவு வசதியாக விமானத்தில் வந்து நியூ யார்க்கில் இறங்கினேன் என்பதையும் எண்ணும் போது சற்று வியப்படைந்தேன்.

Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

இந்தியாவிலிருந்து எனது முதன் முதல் வெளிநாட்டு பயணம் பலராலும் புகழப்படும் அமெரிக்காவுக்கு தான். எனது முதல் விமானப் பயணமும், நான் இறங்கிய JFK விமான நிலையமும் இன்றளவும் பசுமையான நினைவுகளாக என் மனதில் வேரூன்றி இருக்கிறது.

அமெரிக்காவில் கண்டுகளிக்க வேண்டிய இடங்கள் பல இருந்தாலும், நான் சென்று வந்ததில் என்னை கவர்ந்த இரு இடங்களை பற்றி மட்டும் இங்கு எழுத்தில் வடிக்கிறேன். அமெரிக்கா என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவதும், திரைப்படங்களில் கூட அமெரிக்கா என்றால் காட்சிப்படுத்துவதும் Statue of Liberty ஐ தானே! Statue of Liberty சென்று வந்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

 Statue of Liberty
Statue of Liberty

நியூ யார்க்கில் தான் Ellis Island மற்றும் Liberty Island போன்ற தீவுகள் உள்ளன. Statue of Liberty எனப்படும் சுதந்திர தேவி சிலை அமைந்திருப்பது Liberty Island என்ற தீவில் தான். இந்த இரு தீவுகளுக்கும் நியூ யார்க்கில் இருந்தும் செல்லலாம், நியூ ஜெர்ஸியில் இருந்தும் செல்லலாம்.

நான் நியூ ஜெர்ஸியில் இருந்து தான் படகு பயணம் மூலம் இந்த இரு தீவுகளுக்கும் சென்றேன். நியூ ஜெர்ஸியில் இருந்து Ferry மூலம் சென்ற படியால் முதலில் Ellis Island க்கு தான் சென்றேன்.

Ellis Island
Ellis Island

பயணத்தின் போது அக்கரையில் அமைந்திருக்கும் நியூ யார்க்கின் வானுயர்ந்த கட்டிடங்களை கண்டு வியந்து கொண்டே சென்றேன். டொராண்டோ, மொன்றியால் போன்ற ஊர்களில் நகரத்தின் நடுவே Downtown ஒரு தீவு போல அமைந்திருக்கும். ஆனால் நியூ யார்க்கில் Manhattan என்ற தீவே Downtown ஆக அமைந்திருந்தது. Ferry யில் செல்லும் போது சொந்த படகில் பயணம் செய்பவர்களையும், பறவைகள் நீரில் நீந்தி செல்லும் காட்சிகளையும் கண் குளிர கண்டு மகிழலாம்.

Ferry-இல் செல்லும் போது அமெரிக்காவில் இடித்து தகர்க்கப்பட்ட Twin Tower க்கு இணையாகவும் அதன் நினைவாகவும் கட்டப்பட்ட Freedom Tower என்ற புதிய கட்டிடத்தையும் மற்றும் சுதந்திர தேவி சிலையையும் கண்டு களித்த வாறே சென்றதில் Ellis Island விரைவில் வந்து விட்டதாக தோன்றியதோடு மனதில் இனம் புரியாத மகிழ்ச்சியையும் இந்த படகு பயணம் அளிக்க தவறவில்லை என்பதே உண்மை.

Freedom Tower
Freedom Tower

Ellis Island ல் நுழையும் முன்பே விமான நிலையம் போல Security Check செய்த பின்பே உள்ளே செல்ல அனுமதித்தார்கள். இந்த தீவை ஆரம்ப காலத்தில் மக்களை தனிமை படுத்தி வைக்கவும் பயன்படுத்தி உள்ளார்கள். பல நாடுகளில் இருந்து புலம் பெயர்ந்து வந்த மக்களால் உருவாக்கப்பட்ட நாடு தான் அமெரிக்கா என்பதால் அனைவரையும் பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் தான் உள்ளே செல்ல அனுமதித்தார்கள்.

அதற்காக உருவாக்கப்பட்ட Immigration அலுவலகம் Ellis Island ல் தான் முதன் முதலில் அமைக்கப்பட்டது. இங்கு தான் அயல் நாட்டு மக்களை தங்க வைத்து மருத்துவ பரிசோதனை செய்வார்கள். அதன் நினைவாக மருத்துவ பரிசோதனை மையமும், மருத்துவ கருவிகளும், பயணிகள் தங்கும் இடமும் உள்ளது. இவை அனைத்தையும் ஒரு அருங்காட்சியகத்தில் வைத்து பராமரித்து வருகிறார்கள்.

Liberty Island
Liberty Island

இது பற்றி ஒரு ஆவணப்படம் கூட நமக்காக திரையில் காட்டுகிறார்கள். அன்றைய Immigration நடைமுறைகளோடு ஒப்பிட்டால் இன்றைய நடைமுறைகள் எவ்வளவு எளிது என்பதையும், நான் எவ்வளவு வசதியாக விமானத்தில் வந்து நியூ யார்க்கில் இறங்கினேன் என்பதையும் எண்ணும் போது சற்று வியப்படைந்தேன்.

Ellis Island லிருந்து வேறொரு Ferry ஏறி Statue of Liberty அமைந்துள்ள Liberty Island ஐ சென்றடையலாம். அந்த காலத்தில் அயல் நாட்டிலிருந்து வருபவர்களை வரவேற்கும் விதமாக Statue of Liberty கிழக்கு நோக்கி நிறுவப்பட்டுள்ளது. இது இன்றைய காலத்திற்கும் பொருந்த கூடியதாகவே இருக்கிறது. இந்த சிலையை தொலைவிலிருந்து பார்க்கும் போது சிறிதாகவும், அருகிலிருந்து பார்க்கும் போது பெரிதாகவும் காட்சி அளிக்கும். நான் விமானத்தில் இருந்து பார்த்த போது கண்ணுக்கு சிறிதாகவே தெரிந்தது.

Liberty Island
Liberty Island

இந்த சிலை நமது கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையை விட சற்று சிறியது தான். ஆனால் பீடத்தில் அமர வைத்திருப்பதால் திருவள்ளுவர் சிலையை விட பெரிதாக நம் கண்களுக்கு தோற்றமளிக்கிறது. அமெரிக்கா சுதந்திரம் பெற்றதற்கு, பிரெஞ்சு நாட்டு மக்களால் நட்பை வலுப்படுத்தும் வகையில் நினைவு பரிசாக வழங்கப்பட்டது தான் இந்த Statue of Liberty. இந்த சிலை அதிக எடை உள்ளது என்பதால் தனித்தனி பாகங்களாக பிரான்சிலிருந்து கப்பலில் அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டது.

தாமிரமாக அனுப்பப்பட்ட இந்த சிலை காலப்போக்கில் காற்றிலும் நீரிலும் உள்ள ரசாயன மாற்றங்களால் தற்போது பச்சை நிறத்தில் தோற்றமளிக்கிறது. இந்த சிலையின் கால் பகுதியில் உடைந்த சங்கிலிகள் இருப்பது அமெரிக்காவின் சுதந்திரத்தை குறிப்பதாக உள்ளது. கையில் உள்ள புத்தகத்தில் அமெரிக்காவின் சுதந்திர தினம் July 4 என்பதை நினைவூட்டும் வகையில் அமைத்துள்ளார்கள்.

Liberty Island
Liberty Island

கையில் பிடித்திருக்கும் விளக்கு இரவில் ஒளி வீசி பிரகாசிக்கும். Liberty Island என்ற இந்த தீவிலிருந்து Manhattan எனப்படும் நியூ யார்க் நகரத்தின் Downtown ஐ காண கண் கோடி வேண்டும். இந்த இடத்தில் தான் அனைவரும் போட்டோ எடுத்துக் கொள்வார்கள். இந்த பயணத்தின் நினைவாக நாங்களும் போட்டோ ஒன்று எடுத்த பின்னர் நியூ ஜெர்ஸியை நோக்கி பொடிநடையாக சென்றோம்.

நியூ ஜெர்ஸி வந்த பிறகு அங்குள்ள எடிசனில் சரவண பவன் சென்று சிற்றுண்டி முடித்து விட்டு தான் வீடு சென்றோம். நியூ யார்க்கின் Statue of Liberty யிலிருந்து நியூ ஜெர்ஸியின் சரவண பவன் வந்தது வெளிநாடு சென்று இந்தியா திரும்பி வந்த உணர்வை ஏற்படுத்தி விட்டது என்று கூறவும் வேண்டுமா!

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.