Published:Updated:

சூடான சாதத்தில் கலந்து சாப்பிட வாசமான பொடிகள் இதோ! | My Vikatan

Representational Image

வேலைக்குச் சென்றபடி வீட்டு நிர்வாகத்தை கவனிக்கும் எனது மகளுக்காகவே வித்தியாசமான பொடிகளை தயார் செய்ய ஆரம்பித்தேன்.

Published:Updated:

சூடான சாதத்தில் கலந்து சாப்பிட வாசமான பொடிகள் இதோ! | My Vikatan

வேலைக்குச் சென்றபடி வீட்டு நிர்வாகத்தை கவனிக்கும் எனது மகளுக்காகவே வித்தியாசமான பொடிகளை தயார் செய்ய ஆரம்பித்தேன்.

Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

சமையல் மணக்க கண்டிப்பாக சில பொடிகள் தேவை. எனக்கு பொடி அரைப்பதும்.. அதை மற்றவர்களுக்கு கொடுப்பதும் மிகவும் பிடிக்கும். விதவிதமாய் வித்தியாசமாய் சில பல பொருட்களைச் சேர்த்து நான் செய்யும் பொடிக்கு எங்கள் வீட்டில் ஏராளமான விசிறிகள் உண்டு.

வேலைக்குச் சென்றபடி வீட்டு நிர்வாகத்தை கவனிக்கும் எனது மகளுக்காகவே வித்தியாசமான பொடிகளை தயார் செய்ய ஆரம்பித்தேன். அது மட்டுமல்லாமல் எனது நெருங்கிய உறவு மற்றும் நட்பு வட்டார வீட்டிற்கு நான் செல்வதாக இருந்தால் முதலில் கையில் எடுத்துச் செல்ல விரும்புவது நானே வீட்டில் தயாரித்த பொடிகளைத்தான்...

Representational Image
Representational Image

பொடிகளின் மேல் அலாதியான காதல் எனக்கு உண்டு.. பொடி வகையில் இரண்டு வகை உண்டு. ஒன்று பருப்பு பொடி, கருவேப்பிலை பொடி... போன்ற பொடிகளை சாதத்தோடு கலந்து சாப்பிடலாம். மற்றொன்று சாம்பார் பொடி, ரசப் பொடி,கரம் மசாலா பொடி... என்று சமையலில் சேர்க்கக்கூடிய பொடி வகைகள்.

இந்த வகை பொடிகள் நம் சமையலின் ருசியை மேம்படுத்த வல்லவை. அதுமட்டுமல்லாமல் கடைசி நேர அவசரத்தில் மிளகு, சீரகம் என ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து தேடி எடுத்து அரைக்கும் வேலையை மிச்சப்படுத்தி டென்ஷனை தவிர்க்கக் கூடியவை..

நான் செய்யும் சில வித்தியாசமான பொடிகள்.. இதோ உங்களுக்காக.

*வாசமான மோர் மிளகாய் பொடி

கறிவேப்பிலை- ஒரு கப்

மோர் மிளகாய்- 15

முந்திரி -20

பொட்டுக்கடலை- இரண்டு டேபிள் ஸ்பூன்

மிளகு, சீரகம்- ஒரு டேபிள் ஸ்பூன் மற்றும் தேவையான உப்பு இவற்றில் உப்பைத்தவிர மற்ற அனைத்து பொருட்களையும் வெறும் வாணலியில் சிவக்க வறுத்து நைசாக அரைத்து எடுக்கவும் .

சூடான சாதத்தில் இந்த பொடியை போட்டு நெய் விட்டு சாப்பிட எனர்ஜி லெவல் கூடும். காரம் மணம் , சுவை நிறைந்தது இந்தப் பொடி.

பச்சை மிளகாய் மோர் வற்றல்
பச்சை மிளகாய் மோர் வற்றல்

*தால் சுக்கு பொடி

துவரம் பருப்பு -200 கிராம்

கடலைப்பருப்பு -100 கிராம்

மிளகு -50 கிராம்

சுக்கு -இரண்டு துண்டு (சற்று பொடித்துக் கொள்ளவும்)

காய்ந்த மிளகாய்- ஐந்து

பெருங்காயம்- சிறு துண்டு, கறிவேப்பிலை- சிறிதளவு

அனைத்து பொருட்களையும் வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்தெடுத்து நைசாக அரைத்து எடுக்கவும். சூடான சோற்றில் நல்லெண்ணெய் விட்டு இந்த பொடியை போட்டு சாப்பிட அஜீரணம் சரியாகும்.

*பொட்டுக்கடலை பொடி

பொட்டுக்கடலை- ஒரு கப்

காய்ந்த மிளகாய் -10

மிளகு - அரை டீஸ்பூன்

பூண்டு- 4 பல்.

காய்ந்த மிளகாய், மிளகை வெறும் வாணலியில் வறுத்து , ஆறியதும் பொட்டுக்கடலை பூண்டு தேவையான உப்பு சேர்த்து நைசாக அரைத்து எடுக்கவும் . இந்தப் பொடியை சூடான சோற்றில் பிசைந்தும் சாப்பிடலாம். அல்லது இட்லி தோசைக்கு தொட்டுக் கொள்ளவும் செய்யலாம் .(எனது மகனுக்கு மிகவும் பிடித்த பொடி)(பள்ளிக்கு கொடுத்து விடும்போது அவன் நண்பர்கள் அனைவருக்கும் தனியாக ஒரு கிண்ணத்தில் போட்டு சூடான இட்லியுடன் கொடுத்ததெல்லாம் ஒரு அழகிய காலம்)

Representational Image
Representational Image

*ஹாட் சாட் பொடி

சீரகம், தனியா, மாங்காய் தூள்-தல அரை கப்

கருப்பு உப்பு, மிளகு- தல ஒரு டேபிள் ஸ்பூன்

காய்ந்த மிளகாய் -15 மற்றும் தேவையான உப்பு.

அனைத்து பொருட்களையும் நல்ல வெயிலில் நன்கு காய வைத்து நைசாக அரைத்து எடுக்க சாட் பொடி ரெடி. இந்தப் பொடியை தயிர் பச்சடியுடனோ, பானி பூரி செய்யும்போதோ,நறுக்கிய பழங்களின் மீது தூவியோ சாப்பிட சுவை அபாரமாக இருக்கும்.

க்யூட் கசகசா பொடி

கசகசா -ஒரு கப்

உளுந்து -அரை கப்

காய்ந்த மிளகாய்- 20

கொப்பரை தேங்காய் துருவல்- கால் கப் பெருங்காயம்- அரை டீஸ்பூன்

முந்திரி -பதினைந்து

உப்பு தேவையான அளவு

கசகசா கொப்பரை துருவல் இரண்டையும் தனித்தனியே வெறும் வாணலியில் சிவந்து வாசம் வரும் வரை வறுத்து எடுக்கவும். அடி கனமான வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு பெருங்காயத்தை பொறித்து, பிறகு காய்ந்த மிளகாயை சிவக்க வறுத்து எடுக்கவும். மீதமாகும் அதே எண்ணெயில் முந்திரியை லேசாக வறுத்து எடுக்கவும். கடைசியாக உளுந்தை வறுத்து எடுக்கவும். ஆறிய பின் அனைத்தையும் தேவையான உப்பு சேர்த்து கரகரப்பாக பொடித்து வைத்துக் கொள்ளவும் .சூடான சோற்றில் நல்லெண்ணெய் விட்டு இந்த பொடியை சேர்த்து சாப்பிட சுவை அபாரமாக இருக்கும்.

நான் செய்யும் இந்த பொடி எனது மாமாவிற்கு மிகவும் பிடிக்கும். (தொட்டுக்கொள்ள வாழைக்காய் பால் கறி /கத்தரிப்பால் கறி... சூப்பராக இருக்கும்)

Representational Image
Representational Image

தந்தூர் பொடி

தனி மிளகாய் தூள்- அரை கப் தனியாத்தூள், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள்,- தலா கால் கப்

ஆரஞ்சு ஃபுட் கலர் -கால் டீஸ்பூன் (தேவை எனில்)

கருப்பு உப்புத்தூள்- அரை டீஸ்பூன் லைன் சால்ட்- 2 டீஸ்பூன் அனைத்து பொருட்களையும் நான் ஒன்றாக கலந்தால்' தந்தூர் பொடி 'ரெடி .

காலிஃபிளவர் பனீர், உருளை ஆகியவற்றில் இந்த பொடியைத் தூவி தேவையான உப்பு சேர்த்து ஊற வைத்து எண்ணெயில் பொரித்து எடுத்தால் அருமையான மாலை நேர ஸ்நாக்ஸ் ரெடி.

கிரேவி செய்யும்போதும் இறக்கும் தருவாயில் சிறிதளவு இந்த பொடியைத் தூவி இறக்க கிரேவியின் சுவை கூடும்.

(திடீர் விருந்தினர்களையும் சுலபமாக சமாளிக்கலாம்)

வா (பா)சமாய் இனிப்பு பாக்குப்பொடி

உடைத்த கொட்டை பாக்கு- 100 கிராம் சர்க்கரை- அரைக்கப்

ஏலக்காய்- 10

பெருஞ்சீரகம்- ஒரு டேபிள் ஸ்பூன் கசகசா -1 டேபிள்ஸ்பூன்

கிராம்பு- எட்டு

சாரப்பருப்பு- 2 டேபிள் ஸ்பூன்

வெள்ளரி விதை- ஒரு டேபிள் ஸ்பூன் நெய் சிறிதளவு

பாக்கை ஒன்றிரண்டாக உடைத்துக் கொண்டு பாதி அளவு நெய்யை காய வைத்து அதில் பார்க்கை வறுத்துக் கொள்ளவும் மீதமுள்ள அணையில் சர்க்கரையைத் தவிர மற்ற அனைத்தையும் நன்கு வறுத்து ஆறியதும் பாக்குடன் சேர்த்து நொறுநூறவென்று பிடித்துக் கொள்ளவும் கடைசியில் சர்க்கரை சேர்த்து கலக்கினால், பீடா வெற்றிலை என எதனோடு வேண்டுமானாலும் போட்டு கலக்க வாசமான' இனிப்பு பாக்கு பொடி' ரெடி...

எங்கள் வீட்டு விருந்தில் தவறாமல் இடம்பெறும் பொடி இது.

சாப்பிட்டவர்களை திரும்பத் திரும்பக் கேட்கத் தூண்டும் இந்தப் பொடி.

.... இப்படி நிறைய நிறைய பொடிகள்

வா (பா)சமாய் மீண்டும் ஒரு பதிவில் சொல்லும் வரை உங்களிடமிருந்துவிடை பெறுவது உங்கள் அன்பு

-ஆதிரைவேணுகோபால்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.