வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றதும் உங்கள் நினைவுக்கு உடனே வருவது? ஸ்டைல்... வேகம்... நடிப்பு... எளிமை... அவரது நகைச்சுவைத்திறன்.... இப்படி நிறைய வரலாம் ஆனால் எனக்கு அவரின் மேடைப்பேச்சுமிகவும் பிடிக்கும்.. மேடைப்பேச்சில் அவர் சொன்ன குட்டி கதைகள் பெரும்பாலான சமயங்களில் நாம் இருக்கும் சூழலை அழகாய் பிரதிபலிக்கும் அந்தக் கதைகள்.
அர்த்தமுள்ள குட்டி கதைகளை, தனது மேடை பேச்சினூடே ஆங்காங்கே கூறி, தான் சொல்ல வரும் விஷயத்தை சாமானியரும் புரிந்து கொள்ளும் வண்ணம் அழகாக சொல்வது அவரது சிறப்புகளில் ஒன்று.

அப்படி அவர் பல சமயங்களில் பல மேடைகளில் கூறிய குட்டி கதைகள் சிலவற்றை தொகுத்து.. அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லலாம் என்று நினைத்ததன் விளைவே இந்த பதிவு.
நட்பை நேசியுங்கள்..!
நண்பனின் மகத்துவத்தை கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் தவறாமல் சொல்லி விடுவார் ரஜினிகாந்த். அதேபோல நட்புக்கு எந்த மேக்கப்பும் கூடாது என்பதிலும் கண்டிப்பாக இருப்பவர். நட்பின் மேன்மையை சொல்லும் ஒரு கதை இது...
``ஒரு பணக்காரனுக்கு ஏழை நண்பன் ஒருவன் இருந்தால் ஒரு சமயம் பணக்கார நண்பனுக்கு கொஞ்சம் பணத்தட்டுப்பாடு வந்துவிட்டது.
அந்த நேரத்தில் அங்கு வந்த ஏழை நண்பன் எரிச்சலும் கவலையோடு இருக்கும் தன் பணக்கார நண்பனை பார்த்து எப்படிடா இருக்கே?என்று வழக்கம்போல் கேட்டான்.
எரிச்சலான மனநிலையில் இருந்த பணக்கார நண்பன்," எனக்கு உடனே 20 லட்ச ரூபாய் தேவை உன்னால் முடியுமா?" என்று கோபமாக கேட்டுவிட்டுதன் அறைக்குள் சென்று விட்டான் . அவன் பின்னால் போன ஏழை நண்பன்
’’அரை மணி நேரத்தில் பணம் கிடைத்தால் பரவாயில்லையா?" என்று கேட்டான்.

பணக்கார நண்பனுக்கு ஒரே அதிர்ச்சி. ஏழை நண்பனை ஏளனமாக பார்த்தான். அரை மணி நேரத்தில் பணம் வந்தது. பணக்கார நண்பனுக்கு ஒன்றும் விளங்கவில்லை . பணத்தை கொடுத்தவாறு ஏழை நண்பன் சொன்னான்.
’’நீ எப்போ பார்த்தாலும் அதிகமாக பணத்தைத்தான் சேர்த்தாய் நண்பா... நல்ல நண்பர்களை சேர்க்க மறந்து விட்டாய் ."நான் அதை சம்பாதித்து வைத்திருக்கிறேன். எனக்கு என்ன உதவி தேவை என்றாலும் என் நண்பர்கள் தான் முன் வருவார்கள்!"என்றான்.
இருவரும் கட்டித் தழுவி கொண்டார்கள். இந்த உலகத்திலே எதை சேர்ப்பதைக் காட்டிலும் உண்மையான நண்பர்களை சேர்ப்பது தான் உயிருக்கு பலம் தரும் ஆகவே நட்பையும் நேசிப்போம் என்று முடித்தார் ரஜினி. இதைத்தான் திருவள்ளுவர்,
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு
என்கிறார்.
*பயந்தா ஜெயிக்கவே முடியாது!
எடுத்த காரியத்தை மட்டும் மனசுல வச்சுக்கிட்டு, வேண்டாத விஷயங்களை நம்ம காதுல போட்டுக்கவே கூடாது அதே சமயம் பயப்படவும் கூடாது என்பதை புரிய வைக்கும் ஒரு கதை இதோ..
மொத்தம் மூணு தவளைங்க ஒரு மலைக்கு மேலே இருந்த கோயிலுக்கு போக முடிவு பண்ணுச்சாம். மலைக்கு முன்னால் மூன்றும் ஒன்று கூடியதாம். பாம்பு, மிருகங்கள் பல ஆபத்துக்கள் நிறைந்த மலை அது. அதுவுமில்லாமல் தவளைங்க மலைக்கு மேலே போக விடாம சில சக்திகளும் தடுக்க நினைச்சுதாம்.
முதல்ல ஒரு தவளை மேல ஏறப்போச்சு பின்னால இருந்து போகாத.. போகாத..ன்னு ஒரு குரல் அதையும் கண்டுக்காம மலை ஏறின தவளைக்கு அடுத்த குரல் கேட்டுச்சு , 'உன் பின்னால ஒரு பாம்பு படம் எடுக்குது பார்'ன்னு கேட்டதும் தவளை திரும்ப வந்துடுச்சு.

அடுத்து இரண்டாவது தவளை அதே குரல் ஆனா தவளை கண்டுக்கல. ஆனாலும் அடுத்தடுத்து ஆபத்துகளை அந்த குரல் சொல்லிக்கிட்டே இருந்துச்சு. ஒரு கட்டத்தில் அந்த தவளையும் திரும்ப வந்துடுச்சு இப்போ மூணாவது தவளை ஏறுச்சாம்.
எந்த குரலுக்குமே தவளை ரியாக்ட் பண்ணல. குரலும் நிக்கல. தவளை மலை ஏறிட்டே இருந்துச்சாம்.உச்சிக்கு போய் கோயிலுக்குள்ள போய் தான் நின்னுச்சாம். அதை சாதிச்ச தவளைக்கு ஒரே ஒரு வித்தியாசம் தான் 'காது கேட்காது 'எந்த பயமுறுத்தாலும் அதோட காதுல வேலை அதோட லட்சியம் மட்டும் தான் மனசுல இருந்துச்சு . அதனால தான் சாதிக்க முடிஞ்சது நாமளும் அப்படித்தான்... பக்தியாகட்டும், எடுத்த காரியம் ஆகட்டும் மனசுல ஒரு முடிவு எடுத்த பிறகு வேண்டாத மிரட்டல்களை காதில் போட்டுக்கவே கூடாது காது கேட்காத தவளைகளாகவே முன்னேற வேண்டும். பயந்தால் ஜெயிக்கிறது எப்படி ?
அடுத்தவங்க பேச்சை கேட்டு வீணா போனவர்கள் தான் இங்கு அதிகம். இதைத்தான் திருவள்ளுவர்,
எண்ணித் துணிக கருமம் துணிந்த பின்
எண்ணுவம் என்பது இழுக்கு
என்கிறார். ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா உங்க பேச்சை நீங்களே கேட்காதீங்க ன்னு கூட வைத்துக் கொள்ளலாம்.
*வாழ்க்கைய பக்காவா பிளான் பண்ணனும் திட்டமிடுதல் முக்கியம் பாஸ்!
ஒரு ஊர் அங்கு ராஜா அஞ்சு வருஷம் தான் ஆட்சி செய்ய முடியும் அஞ்சு வருஷம் முடிந்தவுடன் அவர் காட்டுக்கு அனுப்பப்படுவார் அங்குள்ள மிருகங்களுக்கு இணையாக நீரும் அதனால் யாரும் அஞ்சு வருஷம் ஆட்சி செய்ய மாட்டாங்க ஒரு வருஷம் இல்ல மிஞ்சி மிஞ்சி போனா ரெண்டு மூணு வருஷத்துல காட்டுக்கு போகணும்னு நினைச்சு உடம்பு சரியில்லாமல் இறந்துடுவாங்க!
ஒருத்தர் மட்டும் சந்தோஷமா அஞ்சு வருஷம் ஆட்சி செஞ்சார். அஞ்சு வருஷம் முடிஞ்சிடுச்சு. இப்போ அவரு காட்டுக்கு போகணும். எல்லோரும் ராஜாவை வழியனுப்ப வந்திருந்தாங்க. அப்போ அந்த ராஜா, "என்னை ராஜா மாதிரி அந்த காட்டுல விட்டுடுங்கன்னு" சொன்னாரு. யாருக்கும் ஒண்ணும்புரியல!

போகும் வழியில் ஒருவர் ராஜாவைப் பார்த்து நீங்க மட்டும் எப்படி சந்தோஷமா இருக்கீங்கன்னு? கேட்டார்.
அதற்கு ராஜா,"நான் ஆட்சி செய்த முதல் வருஷம் என் படையை அனுப்பி அந்த காட்டுல இருந்த கொடிய மிருகங்களை எல்லாம் கொன்று விட்டேன் இரண்டாவது வருஷம் அந்த காட்டுல ஒரு அரண்மனை கட்டி விட்டேன் இப்போ அங்க ஒரு சாம்ராஜ்யத்தையே உருவாக்கி விட்டேன் இப்போது நான் தான் அங்க ராஜா" என்றாராம்... வாழ்க்கையில் சமயோசித புத்தி வேண்டும் என்பதை அருமையாக உணர்த்தியிருப்பார் தலைவர்…
இதைத்தான் திருவள்ளுவர்
அழிவதூஉம் ஆவதூஉம்ஆகி வழிப்பயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்
என்கிறார்.
இப்படி ரஜினி சொன்ன குட்டி கதைகள் ஒவ்வொன்றிலும் ஆழமான கருத்து உள்ளது. இது போதனையோ உபதேசமோ அல்ல .. அழகான வாழ்வியல். அவர் சொல்லி எனக்கு பிடித்த/நான்கேட்ட சில கதைகளை உங்களிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். அவ்வளவுதான். குட்டிக்கதைகளை படிப்பதை விட பின்பற்றுவதில் தான் இதன் வெற்றி(யே) இருக்கிறது
என்றென்றும் அன்புடன்
ரஜினியின் தீவிர ரசிகை
ஆதிரை வேணுகோபால்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.