வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
சிறுவயதில் எடப்பாடி சக்தி தியேட்டரில் நான் பார்த்த திகில் திரைப்படம் 'ஆயிரம் ஜென்மங்கள். 1978ல் துரை அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம். பத்ம பிரியாவும், விஜயகுமாரும் காதலர்கள் இருவருக்கும் திருமணம் நிச்சயமான நிலையில் வில்லன் ஒருவரின் குறுக்கிட்டால் பத்மபிரியா நீர்வீழ்ச்சி இருந்து குதித்து இறந்து விடுவார்.
சிறிது காலம் கழித்து விஜயகுமாருக்கும், லதாவுக்கும் திருமணம் நடக்கும் அப்பொழுது எதிர்பாராத ஒரு சமயத்தில் பத்மபிரியாவின் ஆவி லதாவின் உடலுக்குள் புகுந்துவிடும். அந்த வயதில் ஆவி ,பேய் இதெல்லாம் சுத்தமாக எதுவும் தெரியாது. ஆனால் இந்த படத்தைப் பார்த்தபோது பயந்து நடுங்கி சினிமாவைப் பார்த்தது நினைவில் அப்படியே உள்ளது.

பிறகு லதாவின் உடலில் இருந்து பத்மபிரியாவின் ஆவியை .. ரஜினிகாந்த் எப்படி மீட்டெடுக்கிறார் என்பதே மீதி திரைக்கதை. படம் அருமையாக இருக்கும். ரஜினி பின்னி பெடல் எடுத்து இருப்பார் இந்தப் படத்தில்.. ரஜினியைப் பிடிக்க இந்தப் படமும் ஒரு காரணம். அவரின் கருப்பு ஃ ப்ரேமிட்ட கண்ணாடி இன்னமும் கண்ணை மூடினால் கண்முன்னே வந்து நிழலாடுகிறது. அவரின் அழகே அழகு. இந்த படத்தில் ரஜினி வேற லெவலில் இருப்பார்.
பொதுவாகவே ரஜினி படத்தில் வரும் சவால் /மோதல் காட்சிகள் கலக்கல். தன்னை வம்பு இழுக்கும் ஆதிக்க சக்திகளை, அதிலும் திமிர் பிடித்த கதாதாயகியை ரஜினி என்னும் நாயகன் வேகம், விவேகம் என இரண்டும் கலந்து எதிர்கொள்ளும் விதம் அருமையாக இருக்கும்.
உழைப்பின் உயர்வையும் ஒருவன் தன் தீவிர உழைப்பினால் சுய அடையாளம் பெற்று இந்த உலகத்தில் தனக்கென ஒரு முகவரி பெற முடியும் என்பதையும் அழுத்தமாக சொன்னது 1984 ஆம் ஆண்டு வெளிவந்த "தம்பிக்கு எந்த ஊரு" .

ரஜினி அவர்கள் பாலு என்ற கதாபாத்திரத்தில்தூள் கிளப்பி இருப்பார். சுமதிக்கும் பாலுக்கும் எலி பூனையுமாக மோதல் விளையாட்டு .. அதில் பாலுவின் கையே ஓங்கி இருப்பது.. சுமதி, துணிவிருந்தால் தன் வீட்டிற்கு வந்து தன்னை சந்திக்குமாறு சவால் விட சவாலுக்குள் இன்னொரு சவால்.. அப்போது இளமையின் வேகத்தில் பாலு செய்யும் செயல் மோதலை முடித்து காதலுக்கு வழி ஏற்படுத்தும்..
'தம்பிக்கு எந்த ஊரு'... நம்ம ஊரு தாங்க!
"ஆகாயம் மேலே பாதாளம் கீழே ஆனந்த உலகம் நடுவினிலே ..ஆஹா நான் தான் மைக்கேல் அடி நீ என் மைகேர்ள்..." 1979 ஆம் ஆண்டு வெளிவந்த 'நான் வாழவைப்பேன்' திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்.

இசைஞானியின் ஆரம்பகால அட்டகாசம். ரஜினிக்காகவே ஓடிய படம்). "நில்லாமல் சூழலும் பூமி இது.. எல்லோரும் நடிக்கும் மேடை இது" என்ன ஒரு அழகிய தத்துவம். நம்ம ஊரில் 'கானா" பாடல்கள் போல் இலங்கையில் "பைலா"இசை பிரபலம். அதன் அடிப்படையில் இந்தப் பாடலை இசையமைத்திருப்பார் இசைஞானி. கிளாசிக்கல் குருவான ஜேசுதாஸை இந்த பாடலை பாட வைத்து புதுமை செய்திருப்பார் . "எல்லாமே புதுமை என் பாணியில் சொல்லாமல் தெரியும் என் பார்வையில்.. "தலைவருக்கு மிகவும் பொருத்தமான பாடலாக இந்த பாடல் அமைந்திருக்கும். தலைவரின் ஆட்டம் ஆர்ப்பாட்டமாக இருக்கும் .
வசனம் என்றாலே... அன்றும் இன்றும் என்றும் என் நினைவில் இருப்பது... 1980 ஆம் ஆண்டு வெளிவந்த 'ஜானி' திரைப்படத்தில் இடம் பெற்ற அருமையான ஒரு வசனம்தான்.படத்தில் ரஜினி' ஜானி' என்ற நூதனத் திருடனாகவும், 'வித்யாசாகர்' என்னும் முடி திருத்துபவராகவும் இரட்டை வேடத்தில் கலக்கியிருப்பார். வித்யாசாகர் தன் வேலைக்காரியான பாமாவை (தீபா)விரும்பி அவளை வீட்டுக்காரி ஆக்க முடிவு எடுக்கும் சமயத்தில் அவளை ஒரு துணிக் கடைக்கு அழைத்துச் செல்வார்.

அங்கே பாமாவிற்கு, தான் எடுக்கும் ஒவ்வொரு உடையை விட அங்கிருக்கும் மற்ற உடைகள் சிறப்பானதாக தோன்றும். அதைப் பார்க்கும் ரஜினி "ஒண்ணு மட்டும் தெரிஞ்சுக்கோ இந்த உலகத்துல எத எடுத்தாலும் ஒன்னை விட ஒண்ணு பெட்டரா தான் இருக்கும் .அதுக்கு ஒரு முடிவே இல்ல?! அதுக்காக நம்ம மனச மாத்திக்கிட்டே போக கூடாது "ன்னு சூப்பரா ஒரு வசனம் பேசுவார். இதை எப்பவுமே மனதில் கொண்டால், வாழ்க்கை மகிழ்ச்சியாகவே இருக்கும்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.