வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
சூப்பர் ஸ்டார் என்றால் உங்கள் நினைவுக்கு உடனே வருவது? ஸ்டைல்... வேகம்... நடிப்பு... எளிமை... அவரது நகைச்சுவைத்திறன், இப்படி நிறைய வரலாம், ஆனால் அதில் நிச்சயம் அவரது மேடைப்பேச்சு இருக்கும்.. அந்த மேடைப் பேச்சில் அவர் சொன்ன குட்டி கதைகள், பெரும்பாலான சமயங்களில் நாம் இருக்கும் சூழலை அழகாய் பிரதிபலிக்கும்.

ரஜினிகாந்த் அடிப்படையில் புத்தகப் பிரியர். இதை அவரே பலமுறை பல பேட்டிகளில் சொல்லி இருக்கிறார். தரமான நூல்கள், இதிகாசங்கள், உலக தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகள், மற்றும் அமரர் கல்கியின் நாவல்கள் உட்பட ஏராளமான நூல்களை ரெகுலராக படித்து வருபவர். புதிதாக ஏதாவது ஒரு நல்ல நூல் வந்தால் நிச்சயம் அடுத்த நாள் அவரின் மேஜையில் அந்த புத்தகம் இருக்குமாம். இப்படி ஏராளமான விஷயங்களை படிப்பதால் தான் அர்த்தமுள்ள குட்டி கதைகள் நிறைய தெரிந்து வைத்திருக்கிறார்.
சூப்பர் ஸ்டார் ரஜினி தனதுமேடை பேச்சினூடே ஆங்காங்கே அவற்றை கூறி, தான் சொல்ல வரும் விஷயத்தை சாமானியரும் புரிந்து கொள்ளும்வண்ணம் அழகாக சொல்வதுஅவரது சிறப்புகளில் ஒன்று.
அவர் பல சமயங்களில் பல மேடைகளில் கூறிய குட்டி கதைகள் சிலவற்றை தொகுத்து .. அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லலாம் என்று நினைத்ததன் விளைவே இந்த பதிவு.
*அனாவசிய விமர்சனங்கள் தேவையில்லை..
எதற்கெடுத்தாலும் எதையாவது சொல்லி விமர்சனம் செய்பவர்களுக்கு தனது பாணியில் (ஒரு கருத்தை) சுவாரஸ்யமாக கூறிய குட்டிக்கதை..
ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார் அவருக்கு நீண்ட நாட்களாக குழந்தை பிறக்கவில்லை. அதனால் பல கோயில்கள் படியேறி வேண்டிய பின்னர் அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையின் ஜாதகத்தை தெரிந்து கொள்ள ஒரு ஜோசியரை அழைத்தார் அவர் அந்தக் குழந்தையை பார்த்துவிட்டு இந்த குழந்தையால் உங்களுக்கு ஒரு மரணம் ஏற்படும் என்று கூறினார் இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜா அந்த ஜோசியரை ஜெயிலில்போட சொல்லி உத்தரவிட்டாராம்.

பின்னர் இன்னொரு ஜோசியரை அழைத்து அவரிடம் குழந்தையின் ஜாதகத்தை கணிக்கச் சொன்னாராம் அவர் குழந்தையின் ஜாதகத்தில் முன்னர் கூறிய ஜோசியர் கூறியது உண்மை என்பதை கண்டறிந்தாலும் ,அதை கூறாமல், அந்த குழந்தையின் எதிர்காலம் நன்றாக இருப்பதை அறிந்து அவர் ராஜாவிடம் இந்த குழந்தை உங்களை விட 100 மடங்கு புகழ்பெறுவார் என்று கூறினார். இதனால் மன்னர் மகிழ்ச்சி அடைந்து உங்களுக்கு என்ன வேண்டும்? என்று கேட்டார். அதற்கு அவர் ஜெயிலில் உள்ள ஜோசியரை விடுதலை செய்யுங்கள் அது போதும் என்று கூறினாராம்.
எனவே ஒருவரிடத்தில் என்ன சொல்ல வேண்டும் எதை மறைக்க வேண்டும் என்பதை அறிந்து இரண்டாவது ஜோசியர் கூறியது போல் யார் மனதையும் புண்படுத்தாமல் விமர்சனம் செய்யுங்கள்.
இதைத்தான் திருவள்ளுவர்..
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லின் பயனிலாச் சொல்
என்று சொல்கிறார்.

*நம்மால் முடியும்... லட்சிய நோக்கம்!
ஒரு மகத்தான லட்சியத்துடன் ஒரு மிகப்பெரிய காரியத்திற்காக களம் இறங்குபவர்களுக்கு அந்த லட்சியம் தான் கண்களுக்கு தெரிய வேண்டுமே தவிர இடையில் ஏற்படும் இன்னல்களோ, சலசலப்புகளோ தெரியக்கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் ரஜினி சார் சொன்ன குட்டிக்கதை ...
ஒரு பெரிய கழுகு இருக்கு... ராட்சதக் கழுகு துரோணாச்சாரியார் சொல்றார், யாராலும் அந்த கழுகை வீழ்த்த முடியாது. அதை அழிக்க வேண்டும் என்றால் ஒரு பெரிய அஸ்திரம் இருக்கிறது.
அதாவது பிரம்மாஸ்திரம் அந்த பிரம்மாஸ்திரத்தை ஒரு முறை தான் உபயோகிக்க முடியும் . அதற்குப் பிறகு உபயோகிக்க முடியாது அது ஒரு அம்பு .
அந்த அம்பை வைத்துகொண்டு துரோணாச்சாரியார் ஒருவரை கூப்பிடுகிறார்.
'என்ன தெரிகிறது'? என்று கேட்கிறார். அவன் சொல்றான்,' ஒரு கிளை தெரிகிறது' அந்த கிளைக்கு மேலே ஒரு கழுகு உட்கார்ந்திருப்பது தெரிகிறது."
" நீ போ "என்று அவனை அனுப்பி விடுகிறார்.
அடுத்தவனை அழைக்கிறார் உனக்கு என்ன தெரிகிறது 'அந்த கழுகோட கண் மூக்கு எல்லாம் தெரிகிறது' என்கிறான் அவன்'
நீயும் வேண்டாம்..' அவனையும் அனுப்பி விடுகிறார் துரோணாச்சாரியார். அடுத்து ஒருவனை கூப்பிடுகிறார் அவனிடம் கேட்கிறார் .சரியாக குறி பார்த்து, எனக்கு கழுகோட கழுத்து தான் தெரியுது குருவே 'என்கிறான் அவன்.
"இப்போ விடுஅம்பை" என்கிறார் குரு. அவன் தான் அர்ஜுனன் .(சரித்திரத்தில் வில்வித்தைக்கு பெயர் பெற்றவன் அர்ஜுனன் .)
கழுகை வீழ்த்த ஒரு பிரம்மாஸ்திரம் தேவைப்பட்டது .அந்த பிரம்மாஸ்திரம் தான் நம்மிடம் இருக்கும் சக்தி. நாம் எந்த லட்சியத்தை அடைய வேண்டுமோ அதை மட்டுமே நோக்கத்தில் கொண்டு இருக்க வேண்டும் என்பதை இந்த கதை நமக்கு புரிய வைக்கிறது..
இதை திருவள்ளுவர் ,
அருமை உடைத்தென்று அசவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்
என்கிறார்.

*அடக்கம் எவ்வளவு அவசியம் என்பதை உணர்த்த ரஜினி சார் சொன்ன குட்டி கதை,
என்னுடைய சின்ன வயசுல ஒரு பெரியவர் என்னை கூப்பிட்டு, தம்பி வாழ்க்கையில் நீ எவ்வளவு தூரம் நடக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாய் ?என்று கேட்டார். 'ஐயா, நான் கடைசி வரை நடந்து கொண்டே இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்' என்றேன். 'அப்படியானால் தலையை மேலே தூக்கியபடி நட 'என்றார் அந்தப் பெரியவர்.
நானும் தலையை தூக்கிக்கிட்டு மேலே பார்த்தபடியே ஒரு பத்தடி நடந்திருப்பேன். அதற்குள் தடுக்கி கீழே விழுந்து விட்டேன். பிறகு அந்த பெரியவர் மறுபடியும் என்னை அழைத்து 'இப்ப தலையை குனிந்து நடந்து போ' என்றார். அவர் சொன்னபடி குனிந்து நடந்தேன் இன்று வரை கீழே விழாமல் நல்லபடி நடந்து கொண்டிருக்கிறேன் மனுஷனுக்கு எவ்வளவு அடக்கம் இருக்கோ அந்த அளவுக்கு வளர்ச்சியும் இருக்கும். இதைத்தான் திருவள்ளுவர்," நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது என்கிறார்.
சூப்பர் ஸ்டாரின் வளர்ச்சிக்கு இந்த அடக்கம் மட்டுமே காரணம் என்றால் மிகை என்று.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.