வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
டிஜிட்டல் யுகத்தின் வளர்ச்சியால் மொழிபெயர்ப்பு என்னும் பணிக்கு மவுசு கூடியிருக்கிறது. குறிப்பாக ஊடகத்துறையில் பணியாற்றியவர்களுக்கு தெரியும். மொழிப்பெயர்ப்பு எவ்வளவு முக்கியம் என்று. நாம் ஒரு பத்திரிகைக்கு அல்லது தொலைக்காட்சி சேனலுக்கு சென்றாலோ, முதலில் முக்கியமான மூன்று கேள்விகள் இருக்கும்..
ஒன்று. இதற்கு முன்பு எந்த அலுவலகத்தில் வேலை செய்தீர்கள், இரண்டாவது என்ன பணியில் இருந்தீர்கள்? மூன்றாவது உங்களுக்கு translation செய்ய தெரியுமா? இந்த மூன்று முக்கியமான அடிப்படை கேள்விகள் தான் இருக்கும்.
முதல் இரண்டு கேள்விகள் நமக்கு பெரிதாக இல்லாவிட்டலும், மூன்றாவது கேள்வி தான், நம்மை ஊடகத்தில் தனித்து காட்டும். அது தான் மொழிபெயர்ப்பு.

மொழி பெயர்ப்பு திறன் இருந்தால், தமிழ் ஊடகங்களில் நம்மால் சிறப்பான பங்களிப்பு செய்ய முடியும். ஏனென்றால் தமிழ் ஊடகங்கள் பொதுவாக ஆங்கில ஊடகங்களை சார்ந்து தங்களுடைய செய்திகளையும் நிகழ்ச்சிகளையும் அமைத்துக் கொள்கின்றனர்.
இது தமிழ் தொலைக்காட்சி ஊடகங்களை குறைத்து மதிப்பிடுவதாக எண்ணிவிட வேண்டாம். பொதுவாகவே, தமிழ் ஊடகங்கள் ஒரு ஆங்கில ஊடகத்தை சார்ந்து இருப்பது, செய்திகளை அதிகமாக வழங்குவதற்காக தான், அவ்வாறு ஆங்கில ஊடகங்களை முக்கியமாக பின்பற்றுகின்றனர்.
அதனால் தமிழ் ஊடகங்களில் பணியாற்றுபவர்களுக்கு மொழிபெயர்ப்பு திறன் மிகவும் அவசியமானதாகும். ஊடகப்பணியில் இருந்த எனக்கும் அது மிகவும் அவசியமாக இருந்தது. கூடுதலாக சொல்ல வேண்டும் என்றால், மொழிபெயர்ப்பு செய்து பார்ப்பதில் எனக்கு அதீத ஆர்வம் இருந்தது. நான் எப்படி மொழிபெயர்ப்பு செய்ய கற்று கொண்டேன் என்பதை இங்கே பகிர்கிறேன். கண்டிப்பாக பலருக்கு உதவியாக இருக்கும்.
தினசரி தமிழ் நாளிதழை படிக்கின்ற அளவுக்கு, ஆங்கில நாளிதழ்களையும் படிப்பேன். அதேபோல், நான் படித்த ஆங்கில செய்தி, தமிழில் வந்திருந்தால், ஒப்பிட்டு பார்த்து என்னுடைய புரிதல் திறனை அதிகப்படுத்துவேன். எந்த ஒரு நாளும் நாளிதழை படிக்காமல் இருக்க மாட்டேன். தினமும் படித்துக் கொண்டும் எழுதிக் கொண்டும் குறிப்பெடுத்துக் கொண்டும் இருப்பேன்.

பொதுவாகவே பத்திரிக்கையாளர்கள் குறிப்பிட்ட நாளிதழ் ஒன்றை படித்தால், ஆங்கிலம் புரிய ஈசியாக இருக்கும் என்று சொல்வார்கள். அந்த நாளிதழை தொடர்ந்து வாசித்துக் கொண்டே இருப்பேன். குறிப்பாக வாசிக்கின்ற செய்திகள் கட்டுரைகளில் முக்கியமான வார்த்தைகளை சிகப்பு மையால் அடையாளம் இட்டுக் கொள்வேன்.
பின்னர் டிக்ஷனரியை வைத்து அந்த வார்த்தையின் அர்த்தத்தை பார்க்கும் பொழுது, நமக்கு ஓரளவு அந்த செய்தியுடைய உள்ளுணர்வு நமக்கு புரியும். ஏனென்றால் ஆங்கிலம் என்பது நமக்கு தாய் மொழி அல்ல, தமிழ் மொழி தான் தாய்மொழி ஆங்கிலம் இரண்டாம் மொழி என்பதால், எனக்கு ஆங்கிலத்தில் புரிதல் உணர்வு குறைவு தான். இது போன்று டிக்ஷனரி வைத்து பார்க்கும் பொழுது, நமக்கு ஒரு செய்தியின் சாராம்சத்தை முழுமையாக உள்வாங்கிக் கொள்ள முடியும்.
இப்பொழுதுதான் google ட்ரான்ஸ்லேட் வந்து மக்களுடைய தேவையை இன்னும் எளிமையாக்கி இருக்கின்றது இப்படி தினசரி பகுதி செய்திகள், மாவட்ட செய்திகள், அதேபோல் விபத்து, பட்டமளிப்பு விழா, அதே போல் இன்னும் சின்ன சின்ன செய்திகளை தொடர்ந்து வாசித்து விடுவேன்.
இதனால் ஓரளவுக்கு என்னால் ஆங்கிலத்தை புரிந்து கொள்ள முடிந்தது. என்னுடைய ஆர்வத்தை பார்த்த பத்திரிகை ஆசிரியர் ஒருவர், ஆங்கிலம் இன்னும் உனக்கு நன்கு புலப்பட ஒரு சில நுணுக்கங்களை கற்றுக் கொடுத்தார். அது என்ன என்பதை நான் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

அதாவது முதலில் ஆங்கில நாளிதழினுடைய தலைப்புகளை வாசிக்க சொல்வார், அனைத்து தலைப்புகளையும் நீ வாசித்து விடு, அந்த நாளினுடைய முக்கியமான செய்திகள் என்னென்ன என்பதை பார், அதில் வரக்கூடிய முக்கியமான செய்திகளன் தலைப்பை நீ தமிழில் மொழிபெயர்த்து பார், அதன் பிறகு அந்த தலைப்புகள் தமிழ் நாளிதழ்களில் வந்திருந்தால் அதனோடு ஒப்பிட்டு பார் அதில் என்னென்ன தவறுகளை நீ செய்து இருக்கிறாய் என்பதை உன்னால் உணர்ந்து கொள்ள முடியும் என்றார் அது எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
அதன் பிறகு ஒவ்வொரு செய்தியின் உடைய விரிவான செய்தியை வாசி, அதே போன்று விளையாட்டு செய்திகள், உலகளாவிய செய்திகள் இதற்கெல்லாம் முக்கியத்துவத்துவம் கொடுத்து படிக்க ஆரம்பித்தால், உனக்கு செய்தியினுடைய தன்மைகள் முழுமையாக புரியும் என்று அறிவுறுத்தியதால், அவருடைய அறிவுரையில் இருந்து நான் தினமும் அந்த நுணுக்கங்களை பின்பற்றி வந்தேன்.
இதனால் என்னால் ஓரளவு செய்திகளை புரிந்து கொள்ளவும் சின்ன சின்ன செய்திகளை என்னால் மொழிபெயர்க்கவும் முடிந்தது. அதன் பிறகு ஒரு படி மேலே போய் வெப்சைட்டில் ஆங்கில கட்டுரைகளை வாசிக்க ஆரம்பித்தேன். இதனால் எனக்கு ஒரு பத்திரிகையாளருக்குண்டான மொழிபெயர்ப்பு தகுதியை ஓரளவு எனக்கு தந்தது என்று சொல்ல வேண்டும்.
அதன் பிறகு முக்கியமான கட்டுரைகளை மொழிபெயர்ப்பதற்கு உண்டான முயற்சிகளை எடுக்க ஆரம்பித்தேன். ஒரு சில கட்டுரைகள் எனக்கு புரியாவிட்டால் தெரிந்த நண்பர்களுக்கு அனுப்பி அதனுடைய சாராம்சத்தை தெரிந்து கொண்டு, அதன் பிறகு அந்த கட்டுரைகளையும் முழுமூச்சாக ஈடுபட்டு மொழிபெயர்ப்பு செய்ய ஆரம்பித்தேன்.

இதனால் எனக்கு பத்திரிகை தொலைக்காட்சிக்கு சென்றால் ஒரு சில சின்ன சின்ன செய்திகள் மொழிபெயர்ப்புக்கு கொடுத்தால் கூட, என்னால் மொழிபெயர்க்க முடியும் என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள முடிந்தது.
ஆனாலும் நாம் முறையான படிப்பில்லாததால் மொழிபெயர்ப்பு துறையில் கூடுதலாக அறிவுகளை என்னால் பெற முடியவில்லை. தொடர்ந்து இந்த மொழிபெயர்ப்பு துறையில் முயற்சி செய்தால் ஆங்கிலத்தில் இருந்து தமிழ் மொழிபெயர்ப்பாளராக நம்மால் உருவாக முடியும் என்பதை எனக்கு இந்த பத்திரிகை அனுபவங்கள் கற்றுக் கொடுத்தது.
இன்னும் சிறந்த மொழி பெயர்ப்பாளராக வர வேண்டும் என்ற கனவுகளோடு ஊடகப் பணியில் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.