Published:Updated:

அன்னை தெரேசா விட்டு சென்ற பொறுப்பை அழகாய் எடுத்து நடத்தும் அரசு! - அனுபவப் பகிர்வு | My Vikatan

leprosy awareness

ஜனவரி 30-ம் தேதி காந்தியடிகளின் நினைவு நாளைத் ‘தொழுநோய் ஒழிப்பு தினமாக’ அனுசரிக்கப் படுவதிலிருந்து இந்தப் ப்ரொக்ராம் துவங்குகிறது. கிராம சபைக் கூடுகிறது. சுகாதாரப் பணியாளர்கள் வந்து சேர்கிறார்கள்.

Published:Updated:

அன்னை தெரேசா விட்டு சென்ற பொறுப்பை அழகாய் எடுத்து நடத்தும் அரசு! - அனுபவப் பகிர்வு | My Vikatan

ஜனவரி 30-ம் தேதி காந்தியடிகளின் நினைவு நாளைத் ‘தொழுநோய் ஒழிப்பு தினமாக’ அனுசரிக்கப் படுவதிலிருந்து இந்தப் ப்ரொக்ராம் துவங்குகிறது. கிராம சபைக் கூடுகிறது. சுகாதாரப் பணியாளர்கள் வந்து சேர்கிறார்கள்.

leprosy awareness

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

The theme of World Leprosy Day 2023 is

“ 'Act Now: End Leprosy'..”

மூட நம்பிக்கை மிகுந்த, விஞ்ஞான வசதிக் குறைந்த, அந்தக் காலத்திலேயேத், தொழுநோய், சாபத்தால் வருவதல்ல; பாவத்தால் வருவதல்ல; பரம்பரை வியாதியல்ல, என்பதை உணர்ந்து, உரக்க ஒலித்தவர் தேசத் தந்தை மகாத்மா காந்தி.

வெறும் வாய்ச் சொல் வீரராக இல்லாமல், தொழுநோயால் பாதிக்கப்பட்ட ‘பர்ச்சூர் சாஸ்திரி’யைச் சபர்மதி ஆசிரமத்தில் தன்னுடனேத் தங்க வைத்து உணவும் உறைவிடமும் அளித்ததோடு, தொழுநோய்ப் புண்களைத் துடைத்து மருந்திட்டு, சேவைச் செய்தார் நமது தேசத் தந்தை என்பது வரலாற்றுப் பதிவு.

leprosy awareness
leprosy awareness

ஆண்டு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள், அனாதை விடுதிகள், அன்பாலயங்கள் எனப் பல்வேறு அமைப்பில் தொழுநோய் விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருகிறது மத்திய மாநில அரசுகள் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

தொழு நோய் ஒழிப்பில் தன்னை முழுமையாய் ஈடுபடுத்திக் கொண்டுள்ள மத்திய மாநில அரசுகள் இணைந்து, மகாத்மா காந்தியின் மகத்தானச் சேவையைப் போற்றும் வண்ணம், காந்தி நினைவு நாளான ஜனவரி 30 ல் ‘தொழுநோய் ஒழிப்பு தினமாகத் தொடங்கி பிப்ரவரி 13ம் நாள் முடிய நாடு முழுவதும், ஒவ்வோர் ஆண்டும் ‘ ஸ்பர்ஸ் ப்ரொக்ராம் ’ என்ற 15 நாட்கள் (Fortnight Programme) நடத்தப்படுவது நாம் அனைவரும் அறிந்ததே.

Sparsh leprosy awareness campaign (SLAC) will have an impact on stigma and discrimination against Persons Affected with Leprosy, through communicating the importance of early detection and treatment of leprosy.

leprosy awareness
leprosy awareness

இந்தப் பதினைந்து நாட்களும் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், கட்டுமான நிறுவனங்கள், மால்கள், ஐ டி அலுவலகங்கள், போக்குவரத்துத் கழகம், விமான நிலையங்கள், கடற்கரைகள், உழவர் சந்தைகள், பேருந்து நிலையம், ரயில் நிலையம், போன்ற மக்கள் கூடும் இடங்களில் தொழுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்துவது முக்கிய நோக்கமாகும்.

விழிப்புணர்வினை உறுதிப்படுத்தும் முகத்தான் உறுதிமொழி எடுத்துக் கொள்வது;

சிறப்புத் தோல் நோய் சிகிச்சை முகாம்கள் நடத்துவது;

மற்றும் நாடோடி மக்கள் எனப்படும் FLOATING POPULATION தங்கியுள்ள இடங்களில் கணக்கெடுப்பு நடத்தி அவர்களுக்குத் தொழுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்திப் பரிசோதனை செய்வது; போன்றப் பணிகள் திட்டமிட்டுச் செய்யப்படுகின்றன.

*****

ஸ்பர்ஸ் (Sparsh) ப்ரொக்ராம் என்கிறீர்களே? ஸ்பர்ஸ் என்றால் என்ன என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

இந்தியில், சம்ஸ்கிருதத்தில் ‘ஸ்பரிசம்’ என்பதை (Sparsh) என்று ஆங்கிலப்படுத்தியிருக்கிறார்கள் just (Transliteration).

ஸ்பரிசம் (Touching) என்பதன் தமிழ்ப் பொருள் ‘தொடுதல்’.

தொழுநோய் ஆய்வில் பயிற்சி பெற்ற நிபுணர்கள், ஜனங்களின், தழும்புகளைத் தொட்டுத், தடவி, சுரண்டி, கிள்ளி, ஊசிகுத்தி உணர்வு இருக்கிறதா என்பதைச் சோதித்து, அது தொழுநோய் அறிகுறியா? என்று உறுதிப்படுத்தி, வருமுன் காக்கும் வேலையைத்தான் இந்தப்பதினைந்து நாட்களும் செய்வதால் இதற்கு ‘ஸ்பர்ஸ் ப்ரொக்ராம்’ என்றே பெயர் வைத்துள்ளனர்.

leprosy awareness program
leprosy awareness program

ஜனவரி 30-ம் தேதி காந்தியடிகளின் நினைவு நாளைத் ‘தொழுநோய் ஒழிப்பு தினமாக’ அனுசரிக்கப்படுவதிலிருந்து இந்தப் ப்ரொக்ராம் துவங்குகிறது.

கிராம சபைக் கூடுகிறது.

சுகாதாரப் பணியாளர்கள் வந்து சேர்கிறார்கள்.

தொழுநோய் பற்றி அறிந்த நிபுணர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது.

“மக்களுக்குத் தொழுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்!” என்ற உறுதிமொழி எடுக்கப்படுகிறது.

‘சிகிச்சையில் இருக்கும் தொழு நோயாளிகளுக்கு உலகத் தொழுநோய்த் தினத்தை முன்னிட்டு விலையில்லா வேட்டி, சேலை, போர்வை, ஜமக்காளம், பாய் மற்றும் தொழுநோயாளியின் வாழ்வாதாரத்தை உயர்த்தத் தேவையானப் பொருட்களும் கருவிகளும் அளிக்கப்படுகின்றன.

மேலும், பாதிப்பு தன்மைக்கு ஏற்ற வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட உபகரணங்களையும், வழங்கி உதவுகிறது மத்திய மாநில அரசுகள்.

வசதியாக உட்காருவதற்காக ஸ்டூல்;

வெதுவெதுப்பான நீரில் உப்புப் போட்டுக் கால்களை ஊறவைக்க ‘அன்னக் கூடை’;

leprosy awareness
leprosy awareness

அதில் லேசாகக் கலப்பதற்காகக் கிருமி நாசினி ‘டெட்டால்’;

ஊறியக் காலைச் சுத்தம் செய்யச் ‘சோப்புக்கட்டி’;

தண்ணீரைச் சிக்கனமாக எடுத்து ஊற்றிக்கொள்ளக் குவளை;

துடைத்துக்கொள்ளத் ‘தேங்காய்ப்பூத் துவாலை’;

துடைத்துக் கொண்டபின் எலி, மூஞ்சூறு போன்ற எதுவும் உணர்ச்சியற்ற உறுப்பைத் தூக்கத்தில், கடித்து விடாமல் காப்பதற்காக அதன் மேல் தடவ ‘வேப்பெண்ணை’, ‘ஆயின்மெண்ட்.’;

மேலும் பாதுகாப்பாக நடப்பதற்கு ‘எம் சி ஆர்’ செருப்பு;

இத்யாதிகள்

வழக்கமான நடைமுறைகள் என்றுப் பார்த்தால்

பாதிப்புத்தடுப்பு முகாம்கள் அவ்வப்போது நடத்துதல்;

அவரவர் இனத்துக்கு ஏற்ப உபகரணங்கள் வழங்குதல்;

6 மாதங்களுக்கு ஒரு முறை இரண்டு ஜோடி MCR செருப்புகள் தருதல்;

ஆண்டுக்கு ஒரு முறை புடவை, வேட்டி போர்வை அளித்தல்;

சிறுதொழில் தொடங்க உதவி செய்தல்;

வங்கிக் கடன் வழங்கல்.

இப்படிப் பலப்பல உதவிகள் செய்வதன் நோக்கம் என்ன?

அதன் இலக்குதான் என்ன?

வாசகர்களாகிய நீங்கள் கேட்பது புரிகிறது.

இதோ பதில்.

தொழுநோய் அறிகுறித் தென்பட்டால், தேமலின் தன்மையை ஆரம்ப நிலையிலேயேக் கண்டறிந்து, சிகிச்சை அளித்து உடல் ஊனம் ஏற்படுவதை தடுத்தல்;

மக்கள் மற்ற-மற்ற நோய்களுக்கு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுப்பது போல், அவர்களாகவே விழிப்புணர்வு அடைந்து மருத்துவமனைக்கு வந்தால் தொழுநோய் இல்லாத இந்தியாவை உருவாக்க முடியும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தல்.

*****-

leprosy awareness
leprosy awareness

வழக்கமாகத் தொழுநோய் அறிகுறி எனத் தெரிந்தபின் சற்றும் தாமதியாமல், நோய்த் தீவிரத்துக்குத் தக்கபடி , குறிப்பிட்டக் காலத்திற்கு தொடர்ந்து எடுத்துக் கொள்ள மாத்திரைகள் தருகிறார்கள்.

தினமும் குறித்து வைத்துக் கொள்ள வசதியாக எண்கள் இட்ட அட்டைகூட வழங்குகிறார்கள்.

மாத்திரை தீர்வதற்கு இரண்டு நாட்கள் முன் வந்து அடுத்த டோஸேஜ் வாங்கிக் செல்லவேண்டும் என்று நிர்ணயித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பிட்ட நாளில் வந்து மாத்திரை வாங்கத் தவறியவர்களின் முகவரியை பேரேட்டிலிருந்து எடுத்து, அவர்களுக்கு டெலிபோன் மூலம் செய்தி சொல்லியோ, வீட்டிற்கேச் சென்றோ மாத்திரை கொடுபதுடன், அதை முழுங்கச் செய்து தீவிரமாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் மருத்துவம் சாரா மேற்பார்வையர் திரு இரா செந்தில் நாதன் அவர்களைப் போல அர்ப்பணிப்புடன் செயல்படுபவர்களுக்கு நம் பாராட்டுதல்களும், வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.

தொடர்ந்து அதை எடுத்துக் கொள்கிறார்களா என்பதையும் சோதிக்கின்ற பணியையும் அற்பணிப்போடு செய்து வருகின்றனர் மருத்துவம் சாரா மேற்பார்வையாளர்கள்.

அவர்கள் பணி பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் உரியது.

leprosy awareness
leprosy awareness

*****-

தொடக்கத்திலேயே கவனிக்காமல் விட்டால் ஏற்படும் பாதிப்புகள்

கை முட்டி நரம்பு பாதிப்பு (Ulnar Nerve ).

கனுக்கை நரம்பு பாதிப்பு (Median Nerve ).

கால் முட்டி நரம்பு பாதிப்பு (Lateral Popletial Nerve )

கனுக்கால் நரம்புகள் (AnteriarTibialPosterlarTibial Nerves) பாதிப்பு

காதின் பெரு நரம்பு (GreatreAuriacular Nerve) பாதிப்பு

முக நரம்புகள் (Facial Nerve) பாதிப்பு

மேற்சொன்னவைகளில் ஒன்றோ பலவோ பாதித்துவிடலாம்.

தொடக்கத்திலேயேக் கவனித்துச் சிகிச்சை எடுத்துக் கொண்டு விட்டால் பூரணமாகக் குணம் கிடைப்பதாகக் கூறுகிறார்கள் குணமடைந்தவர்கள்.

leprosy awareness
leprosy awareness

தொழுநோயாளிகள் தன்னம்பிக்கையுடன் இந்த சமுதாயத்தில் உலவ வேண்டும் என்று எதிர் பார்க்கிறது மத்திய மாநில அரசுகள்.

40 சதவீதத்துக்கு மேல் ஊனமடைந்துவிட்ட தொழுநோயாளிகளுக்கு மாதம் ரு1500 உதவித்தொகை அளித்து வந்த அரசு தற்போது ரூ 2000 ஆக உயர்த்தி வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது; மகிழ்ச்சிக்குறியது.

தவிர, அவர்கள் சுய தொழில் புரிவதற்காக, பெட்டிக் கடை வைக்க மானியம் தருகிறது;

மேலும், தையல் இயந்திரம், இஸ்திரிப் பெட்டி, ஏர் கம்ப்பிரஷர் எனத் தேவையானத் தொழிற் கருவிகளை இலவசமாகவும் மானிய விலையிலும் ஈந்து அவர்களின் மேன்மைக்கு வித்திடுகிறது;

அதோடு மட்டுமல்லாமல், அவர்களின் குழந்தைகளுக்கும் தொழிற்கல்வி அளித்து உயர்த்தவும் வழிவகை செய்துள்ளது அரசாங்கம் என்பது சிறப்பினும் சிறப்பு.

leprosy awareness
leprosy awareness

‘டேமியன் ஃபவுன்டேஷன்’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் மேலதிகமாக தொழுநோயாளிகளுக்கு, வீடுகளும் கட்டித் தந்திருக்கிறது;

TLM (the leprosy mission trust india) என்றுச் சொல்லக்கூடிய அமைப்பு (மிஷன்) நோயாளிகளின் வாரிசுகளுக்கு மேற்படிப்புக்கு முன்னுரிமை அளித்து வருகிறது;

அதுமட்டுமல்ல, வேலை வாய்ப்பிலும் முன்னுரிமை அளித்து வருவகிறது;

நாற்பதுச் சதவீதத்திற்கு மேல் கண்ணோ, காலோ, கையோ, ஆண் உறுப்போ, விதைப் பையோ, மார்பகமோ பாதித்து விட்டால் அறுவை சிகிச்சை மூலம் அதைக் குணப்படுத்தி மறுவாழ்வளிக்கும் திட்டமும் சமீபக் காலமாக நடைமுறைப் படுத்தப் படுகின்றன.

அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் தங்கும் நாட்களில் இழக்கும் அவர்களின் வாழ்வாதாரத்தை ஈடுகட்ட ரூ 8000 உதவித் தொகையையும் கொடுத்து அவர்களை ஆதரிக்கிறது அரசு.

அரசு, சமூக நலக் குழுக்கள், சமூக ஆர்வலர்கள்,ஆகியோரின் விடாமுயற்சியால் தற்போது இந்தியாவில் தொழிநோயாளிகளின் விழுக்காடு பத்தாயிரத்தில் 0.96 /10000 ஒன்றுக்குக் குறைவாகவே உள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன..

leprosy awareness
leprosy awareness

அதையும் ‘0’ சதவிகிதமாக்க. முற்றிலும் ஒழிக்கப் பொதுமக்களாகிய நாம் உறுதி பூண வேண்டும்.

நோய் அறிகுறி எந்த நிலையில் கண்டுபிடிக்கப் பட்டாலும், அந்த அளவிற்கு மேலேப் பரவாது நிறுத்தும் அளவிற்கு மருத்துவ உலகம் இன்று வளர்ந்து விட்டது என்பதுக் கண்கூடு.

பயிற்சி பெற்ற தொழு நோய் ஆய்வாளர்கள் (leprosy inspectors) Contact survey. FLCC Survey, Photo Survey, Hotspot Survey மற்றும் ACDRS (Active Case Deduction Regular Survailance) என்ற பல சிறப்புச் சர்வேக்களைத் தொடர்ந்து, நடத்தி வருகிறது.

இந்த சர்வேக்களின் மூலம் இங்கொன்றும் அங்கொன்றுமாக மறைந்து வாழும் தொழுநோய் பாதிப்பாளர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும் தொழுநோய் ஆய்வாளர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

கையெழுத்து இயக்கம், துண்டுப் பிரசுரங்கள், சுவர் விளம்பரங்கள் எனப் பலவகையான உத்திகளைப் பின்பற்றி நோய் ஒழிப்புக்குப் பாடுபடுகிறார்கள் தொழுநோய் ஆய்வாளர்கள் (leprosy inspectors)  என்பது கண்கூடு.

leprosy awareness
leprosy awareness

அதோடு நோயாளியின் வீட்டைச் சுற்றிலும் உள்ள 20 வீடுகளுக்கு தடுப்பு மருந்து கொடுத்து ‘வருமுன் காக்கும் ’சேவையும் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.

*****-

குறிப்பாகப் பள்ளி வளாகங்களில் தோல் நோய் முகாம்கள் நடத்தி எந்த மாணவருக்கேனும் தேமல் இருப்பின் அதைத் துருவி ஆய்கிறார்கள்.

சத்துக் குறைவால் தோன்றிய தேமலா? (Nutritional patches)

அழுக்குத்தேமலா?? (TineaVersicolor)

நமைச்சல் தேமலா?? (Tineacercinatae)

சருமம் வெளுத்த தேமலா? (Vitilico-Leucoderma)

சோரியாசிஸ்ஸா? (Psoriasis)

மேகநோய் தேமலா?? (Cutaueous Syphilitic Lesions)

பிறவித்தேமலா?? (Birth Mark)

என்றெல்லாம் அலசி ஆராய்ந்து

தொழு நோய் அறிகுறியாக இருப்பின் கண்டுபிடித்து, அதை மேலே வளர விடாமல் 6 மாத காலம் தொடர்ந்து மாத்திரைக் கொடுத்து, முளையிலேயேக் கிள்ளி எறிந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

அனாதை ஆஸ்ரமங்களிலும், மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியிலும் சென்று அவர்கள் செய்யும் சேவை மகத்தானது.

leprosy awareness
leprosy awareness

ஆனால் மக்களோ அறியாமையிலும் தாழ்வு மனப்பான்மையாலும் தனக்கு வந்த நோயை மறைக்கத்தான் எண்ணுகிறார்கள்.

பள்ளியில் முகாம் நடைபெறும் நாளில் தங்கள் பிள்ளையைப் பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர்களேப் பிள்ளைகளின் நோய் அதிகமாவதற்கு வழிகாட்டி விடுவதுதான் கொடுமையிலும் கொடுமை.

(Adults) எனப்படும் 14 வயதுக்கு மேற்பட்டப் பெரியவர்களில் ஆண்கள் தேமல்களை முழுக்கை சட்டையாலும், தழையத் தழைய கட்டிய வேட்டிகளாலும் மறைத்துக்கொள்கிறார்கள்.

பெண்கள் புடவைத் தலைப்பினால் மறைத்துக் கொண்டும் தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்வதுதான் அறியாமையின் உச்சகட்டம்.

’தொழுநோயை உருவாக்குவது "மைக்கோ பேக்டீரியம் லெப்ரே எனும் பாக்டீரியா.

இந்த நோய், தோல், நரம்புகள், கண்கள் போன்றவற்றை தாக்கும் தன்மை கொண்டது.

இந்த நோயின் முக்கிய அறிகுறி, உணர்ச்சியற்ற தேமல்.

leprosy awareness
leprosy awareness

கூடவே கை மற்றும் பாதங்களில் மதமதப்பு, எரிச்சல் போன்ற தன்மை;

கை, கால்கள், கண் இமைகள் போன்றவை வலிமை இழத்தல்;

முகம் மற்றும் காது மடல்கள் தடித்தல்;

காயங்களில் வலி இல்லாமல் மரத்து இருத்தல். போன்றவைகளாகும்.

தொழுநோய் பற்றி நோயுற்ற மக்கள் மட்டுமல்லாமல், பொது மக்களும் உணர்ந்துத் தவறானக் கருத்துருக்களைக் களைந்து, அரசாங்கத்தின் முயற்சிக்கு முழு ஒத்துழைப்பு அளித்தால் குணமாகும். தொழுநோயை நிச்சயம் தோற்கடிக்கலாம்.

*****-

ஜனவரி 30 ல் வழக்கமாக எடுக்கப்படும் ‘ஸ்பர்ஸ்’ உறுதிமொழி

மகாத்மா காந்தி நினைவு தினமான இன்று உறுதி மொழி ஏற்கிறேன். என்னவெனில், உணர்சியற்ற தேமல் அல்லது படை போன்றோ தொழுநோயினால் உடல் குறைபாடு உள்ளவர்களை எனது குடும்பத்திலோ அல்லது வீட்டின் அருகில் உள்ளவர்களோ, சமூகத்திலோ இருந்தால், உடன் அவர்களை அருகில் உள்ள அரசு ஆரம்பச் சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றுச் சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்வேன்.

உடனேச் செயல்பட்டு தொழுநோயை முற்றிலும் ஒழிக்கப் போராடுவேன்.

அவர்களை அன்பாகவும், எனது குடும்ப உறுப்பினர் போலவும் வேறுபாடு இல்லாமல் உரிய மரியாதையுடன் நடத்துவேன்.

தொழுநோய் குணமாகக் கூடியது;

ஆரம்பநிலை சிகிச்சை உடல் குறைபாட்டை ஏற்படுத்தாது;

அங்கஹீனத்தைத் தடுக்கும்;

தொழுநோயாளிகளை ஒதுக்கக் கூடாது,

போன்ற விபரங்களை ஊர் முழுவதும் தெரிவித்து விழிப்புணர்வினை ஏற்படுத்துவேன்.

ஆண்கள் எல்லோரும் காந்திகளாவோம்

பெண்கள் எல்லோரும் தெரஸாக்களாவாவோம்

தொழுநோயற்ற சமுதாயத்தை நிலை நிறுத்துவோம்.

*******************************

கட்டுரையாளர் – ஜூனியர்தேஜ், உளவியல் ஆலோசகர்

புள்ளிவிவரங்களையும் புகைப்படங்களையும் அளித்தவர் : திரு இரா. செந்தில் நாதன்

மருத்துவம் சாரா மேற்பார்வையாளர்

சீர்காழி.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.