Published:Updated:

'பொன்னியின் செல்வன்' படத்தை 80களில் எடுத்து இருந்தால்? | My Vikatan

சோ ராமசாமி ( விகடன் )

இன்றைய கேள்விகளுக்கு சோ பதில் சொன்னால் எப்படி இருக்கும்..? முடிந்த அளவுக்கு எழுதி இருக்கிறேன். பிழை இருந்தால் மன்னிக்கவும்.

Published:Updated:

'பொன்னியின் செல்வன்' படத்தை 80களில் எடுத்து இருந்தால்? | My Vikatan

இன்றைய கேள்விகளுக்கு சோ பதில் சொன்னால் எப்படி இருக்கும்..? முடிந்த அளவுக்கு எழுதி இருக்கிறேன். பிழை இருந்தால் மன்னிக்கவும்.

சோ ராமசாமி ( விகடன் )

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

`நானே கேள்வி நானே பதில்' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி இருந்தேன். அதில் இன்னும் சற்று வித்தியாசமாக கேள்விகள் நானே கேட்டு அதற்கு 'சோ' சார் அவர்கள் பதில் சொன்னால் எப்படி இருக்கும் என்று எனக்குள் நானே கேட்டு பார்த்தேன்.

துக்ளக் ஆசிரியர் 'சோ' அவர்களின் நக்கல், நய்யாண்டி அனைவராலும் ரசிக்கப்பட்ட ஒன்று. நாம் ஒன்று கேட்டால் அதற்கு நேர் எதிராக பதில் சொல்வார். சென்னை பாஷையில் பிய்த்து உதறுவார். அதற்கு சான்று அவர் வடிவமைத்த 'ஜக்கு' கேரக்டரே உதாரணம். அறிவுபூர்வமான பதில்கள் தந்து நம்மை பிரமிக்க வைப்பார்.

இன்றைய கேள்விகளுக்கு அவர் பதில் சொன்னால் எப்படி இருக்கும்..? முடிந்த அளவுக்கு எழுதி இருக்கிறேன். பிழை இருந்தால் மன்னிக்கவும்.

நடைவண்டி
நடைவண்டி

  "நடைபயணம் பற்றி உங்கள் விமர்சனம்...?"

 அந்த காலத்தில் குழந்தைகளை நடை பயில வைக்க 'நடைவண்டி' ன்னு ஒன்னு பயன்பாட்டில் இருந்தது.  மரத்தால் செய்யப்பட்டது அது.  இந்த நடைவண்டி பற்றி சங்க இலக்கியங்களில் ஒன்றான பட்டினப்பாலையிலும் தகவல் வருகிறது. செல்போன்ல எதை எதையோ தேடுறீங்க இத தேடி கண்டுபிடிச்சு படிங்க நல்ல விஷயம் அது.

பீச்சு, பார்க்கு, சில இடங்களில் ரயில்வே பிளாட்பார்ம்கள் இங்கெல்லாம் நிறைய பேர் நடைபயணம் தினசரி போய்க்கிட்டு இருப்பாங்க. அதிலும் குரூப் குரூப்பா போறவங்க இருக்காங்க.  'நேத்து போய் சுகர் டெஸ்ட் பண்ணிட்டு வந்தேன். குறையவே இல்லை...'  '30 வருஷம் ஆயிடுச்சு இன்னும்எம்பொண்டாட்டி படுத்தி எடுக்குறா...'  - இப்படி பேசிக்கிட்டே  நடக்கிறவங்க... செல்போனில் யாரையோ திட்டிக்கிட்டு  நடக்கிறவங்க... விதவிதமான நடை மனிதர்களை பார்க்கலாம். மத்தபடி ரேஷன் கடைக்கும் வீட்டுக்கும் அடிக்கடி  நடைபயணம் போயிட்டு இருக்குறவங்க, பையனுக்கு பொண்ணுக்கு வரன் தேடி நடைபயணம் (நடையா   நடக்குறேன்னு சொல்வாங்க பாருங்க  அத சொன்னேன்) போறவங்க...- இப்படி ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஆரம்பம் முதல் கடைசி வரை நடைபயணம் இருக்கு.ஒரு விஷயத்தை குறிப்பிட்டு சொல்றேன்.  வீட்ல மாமியார் மருமகள் ஒற்றுமையாக இருக்க காசி, ராமேஸ்வரம் ன்னு 'பரிவார் ஜோடோ யாத்ரா' போனால் நல்லது.

" 'பொன்னியின் செல்வன்' படத்தை ஒருவேளை 80 களில் எடுத்து இருந்தால் யார் யார் எந்தெந்த வேடத்தில் நடித்திருக்கலாம்  ...உங்கள் விருப்பம் சொல்லுங்கள்..."

ரஜினிகாந்த். கதையின் 5 ஆம் பாகத்தின் தலைப்பு 'தியாகச் சிகரம்' . தனக்குரிய ராஜாங்கத்தை முடிசூட்டு நாளன்று தனது சிறிய தந்தை 'உத்தம சோழனுக்கு விட்டுக் கொடுக்கிறார். வீரம் நிறைந்த, விட்டுக்கொடுக்கும் மனம் படைத்த இந்த கதாபாத்திரம் ரஜினிக்கு தான் பொருத்தமாக இருக்கும்.

வந்தியத்தேவன் : நண்பர் ஜெய்சங்கர்.. நன்றாக துள்ளிக் குதித்து ஓடி விளையாடி எதிரிகளை பந்தாடும் திறன் கொண்டவர்.

குந்தவை நாச்சியார் : "அறிவுபூர்வமான அரசியல் மதிநுட்பம் கொண்ட இந்த வேடத்திற்கு செல்வி. ஜெயலலிதாவை தவிர வேறு யாரும் பொருத்தமாக இருக்க மாட்டார்கள்.

நந்தினி : திருமதி லட்சுமி - அழகான நந்தினியை கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துவார்.

ஆதித்த கரிகாலன் : முத்துராமன்

வானதி : ஸ்ரீ பிரியா

பெரிய பழுவேட்டரையர் : மிடுக்கான நம்பியார்

சின்ன பழுவேட்டரையர் : அசோகன்

மந்திரவாதி ரவிதாஸன் : R.S.மனோகர்

இசை : M.S. விஸ்வநாதன்

தயாரிப்பு : A.V.M. சகோதரர்கள்

டைரக்டர் : SP. முத்துராமன்

SP. முத்துராமன் படம்ன்னா நிச்சயம் நான் இருப்பேன். எனக்கு என்ன ரோல்...அரசியல் தூதுவன் 'ஆழ்வார்க்கடியான்' தான். பிரமாதமா பண்ணுவேன். மத்த கேரக்டர்கள் பாத்து போட்டுக்க வேண்டியதுதான்.

ராமராஜன்
ராமராஜன்

"யூடியூப் கள் வளர்ச்சி பற்றி சில வார்த்தைகள்.."

எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது இந்த யூடியூப்கள் தான் . "AN YOUTUBE A DAY KEEP THE TV CHANNELS AWAY." இப்படி சொல்லும் அளவுக்கு அசுர வளர்ச்சி.

"வா வாத்யாரே ஊட்டாண்டே நீ வராங்காட்டி நான் உடமாட்டேன்.." ஜக்கு டெய்லி செல்மேல கூவிட்டு கிடந்தான். இன்னாடா கயிதேன்னு போய் கேட்டா யூடூப் ரன் பண்றேன், ஜப்கிரைப் பண்ணுப்பா... ஒன் பிரண்டாண்ட கேன்வாஸ் வாங்கிக்குடுன்னு பேஜார் குடுத்தான். சரித்தான் போன்னேன்.

மெய்யாலுமே லிஸ்ட் கொடுத்தான்பா. குக்கு வித் ஜக்கு,.. டீ, காபி பிரோடுயூஸ் பண்றது பத்தி காட்டுவானாம்.

ரொம்ப நாள் கழிச்சு ஒருத்தர எங்கேயாவது பாத்தீங்கன்னா நல்லா இருக்கீங்களா ன்னு கேக்காம, இத மாதிரி ஆரம்பிச்சிருக்கேன் சப்ஸ்கிரைப் பண்ணுங்கன்னு விடாம பேசி ஒரு வழி பண்ணிடுவாங்க. நலம் நலமறிய ஆவல் இப்ப யூடியூப்... யூடியூப் சப்ஸ்கிரைப் பெற ஆவல்...என்று மாறிப்போச்சு.

இருந்தாலும் ஒரு சில நல்ல விஷயங்களும் தெரிஞ்சுக்கலாம் யூடியூப் மூலமா. டிராபிக் வார்டன் னு ஒரு பதவி இருக்கிறதா ஒரு யூடியூப் ல தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய மோகன்ராஜ் என்பவர் பேட்டி கொடுத்தார். போலீஸ் யூனிபார்ம் போட்டுக்கிட்டு வாரம் ஒரு முறை பணியாற்றலாம்னு சொன்னார். முக்கியமான விஷயம் இது 'HONORARY JOB'. ஒரு உதாரணத்துக்கு இத சொன்னேன். நல்லா நடந்தா எல்லாமே நல்லதுதான்.

" 'ராசா' பத்தி உங்க கருத்து என்ன...?"

" 'நம்ம ஊரு ராசா' பத்தி தான தாராளமா அவரைப் பற்றிய நல்ல விஷயங்களை சொல்லலாம். தங்கமான ராசா, மனசுக்கேத்த மகராசா, என்னெப் பெத்த ராசா -இப்படி சாமானிய மக்கள் கொண்டாடியது நடிகர் ராமராஜனதான். சாதாரண கிராம கதையில் அருமையான பாடல்கள், வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் கவுண்டமணி செந்தில் காமெடிகள் கண்ணைக் கவரும் இயற்கை காட்சிகள்...இவைகளை வைத்துக் கொண்டு 90 களில் தமிழ் திரை உலகை கலக்கியவர், பெரிய நடிகர்களின் படங்களை ஓரம்கட்டி வெற்றிக்கொடி கட்டியவர்.

இடையில் சுமார் 10 ஆண்டுகள் ஒதுங்கி இருந்து இப்போது மீண்டும் ரசிகர்களை 'தேடி வந்த ராசா' வாக மாறி நிற்கிறார்.

அவரின் புதிய படமான 'சாமானியன்' படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் பிரமாதமாக பேசியுள்ளார். எவ்வளவு கோடி கொடுத்தாலும் தரம் கெட்டுப் போய் மோசமான படங்களில் நடிக்க மாட்டேன் என்று சொல்லி இருக்கிறார். தான் ஒரு 'பூக்கடை' யாகவே இருக்க விரும்பும் அவரை வாழ்த்துவோம்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.