அஸ்விதா தன் அம்மா செய்யும் முதல் உதவியை உற்று கவனித்துக் கொண்டிருந்தாள்.
அஸ்மிதாவின் அம்மா ஒரு செவிலி.
அர்ப்பணிப்பு மிக்க ஒரு செவிலித்தாய் அவர்.
முதலுதவி பெட்டியை எடுத்துச் சென்று முதலுதவி முடிக்கும் வரை அணு அணுவாக கூர்ந்து பார்த்தாள் அஸ்விதா.
வெட்டுப் பட்டக் காயத்தை பஞ்சை வைத்து லாவகமாகத் தொட்டுத் துடைத்தார்.
டிஞ்சரில் நனைத்த பஞ்சை வைத்து அதன் மேல் சதுரமாய் மடிக்கப்பட்ட காஸ் க்ளாத் த்தை அதன் மேல் வைத்துக் கட்டுப்போட்டாள்.

சுற்றி நின்றவர்களுக்கும் எளிதில் புரியும்படி முதலுதவி செய்யும் முறையை விளக்கினாள்.
ஒவ்வொரு வீட்டிலும் முதலுதவிப் பெட்டி இருக்க வேண்டியதன் அவசியத்தையும் விளக்கினாள்.
'நானும் அம்மாவைப்போல நர்ஸாகத்தான் சேவை செய்ய வேண்டும்...!'
ஆசை எழுந்தது அஸ்விதாவுக்கு.
***
அஸ்விதாவுக்கு அன்று பள்ளி விடுமுறை.
அம்மா ஆஸ்பத்திரிக்குச் சென்றுவிட்டாள்.
அன்று காலை 10 மணி முதல் அந்தப் பகுதிக்கு அறிவிக்கப்பட்ட மின்வெட்டு அறிவித்திருந்தார்கள்.
பராமரிப்பு பணிகள் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டிருந்தன.
AE, JE, லைன் மேன் என மின்வாரிய ஊழியர்கள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள்.
*

'மனிதன் பழக்கத்துக்கு அடிமையாவான்' என்பதுதான் எவ்வளவு அப்பட்டமான உண்மை.
வீட்டில் இருக்கும் ஜனங்களுக்கு வீட்டிற்குள் இருக்கவே பிடிக்கவில்லை.
ஏசி, மின்விசிறி என இல்லாததால் எல்லோரும் வாராண்டாவிற்கும் மொட்டை மாடிக்குமாக அலை பாய்ந்தார்கள்.
"ரொம்ப இறுக்கமா இருக்கு வீட்டுக்குள்ள இருக்க முடியல..!"
"ஷட் டவுன் பண்ணி புட்டு அப்படி என்னதான் பண்ணுவாங்களோ? ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்...!"
"வெள்ளைக்காரன் வச்ச ட்ரான்ஸ்பார்மர வச்சே இன்னும் ஓட்டுறாங்க... அடிக்கடி பராமரிப்புப் பண்ணித்தானே ஆகணும்..."
"ஸ்டே வயரை இழுத்து இறுக்கமா ஒரு முறை கட்டினாப் பர்மனன்ட்டா நிக்கும். ஒரு மாசத்துக்குள்ள கலந்துக்கிற மாதிரி தானே கட்டுறாங்க..."
பராமரிப்புன்னு ஒரு நாள் நிறுத்தினாத்தான், நிறைய அடிக்கலாம் அதுக்கு தான் இவ்வளவும்..!"
"பராமரிப்பு செய்யறேன்னு நம்ம விட்டு ஒயர கட் பண்ணி விடாமல் இருக்கணும்...!"
மொட்டை மாடியிலும் வராண்டாவிலும் உட்கார்ந்து கொண்டு இப்படி வாய்க்கு வந்தபடி பேசினார்கள்.
***

"ஸேஃபிடி ரோப் எமனையும் வெல்லும்' மின்வாரிய ஆபீஸ் சுவத்துல எழுதியிருக்கறது உனக்காகத்தான்.. சேப்டி ரோப் கட்டிக்கிட்டு மரத்தில் ஏறு...!"
'ஜே ஈ' லைன் மேனுக்கு எச்சரிக்கை செய்தார்.
கம்பத்தின் மேல் நின்ற லைன் மேனுக்கு கீழிருந்து கட்டிங் பிளேயர் பியூஸ் எல்லாம் ரோப் மூலம் சென்றன..
கட்டிங் பிளேயரை வைத்து அலுமினிய கம்பியை நன்கு சுற்றித் திரிகி முடித்தார் லயன்மேன்.
"ஃபீடர்ங்களை செக் பண்ணி பாரு. பீங்கான் குப்பியோட டைப் பண்ணி கட்டு. "
'ஜே இ 'கீழிருந்து ஆலோசனை சொல்லச் சொல்ல மேலே நின்று லைன் மேன் சரி செய்தார்.
தெருவின் கடைசி கம்பம் நோக்கி எல்லா லைன் மேன்களையும் அழைத்துச் சென்றார் ஜே இ.
அருகாமை கட்டட வேலை செய்யும் போது அஸ்திவாரத்துக்கு நோண்டியதால் கம்பம் லேசாக சாய்ந்திருந்ததை ஒயர்களை எல்லாம் அவிழ்த்து விட்டு கயிறு கட்டி நிமிர்த்தினார்கள்.
எதிர்வ சத்தில் ஸ்டே வயர் போட்டு இறுகக் கட்டினார்கள்.
சின்ன குட்டியானை லாரியில் கொண்டு வந்த முக்கால் ஜல்லியை போட்டு சிமெண்ட் கான்கிரீட் தயார் செய்து அதில் கொட்டினார்கள்.
**
வராண்டாவில் உட்கார்ந்து கொண்டு தெருவில் நடக்கும் வேலைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அஸ்விதா அதிர்ச்சியில் உறைந்தாள்.
இப்படி ஒரு நிகழ்வை நிச்சயம் எதிர்பார்க்கவில்லை அவள்.
சரேலென்று உள்ளே ஓடினாள்.
முதலுதவிப் பெட்டியோடு வந்தாள்.
சொறி பிடித்த கையும் அறிவாள் பிடித்த கையும் சும்மா இருக்காது என்பார்கள் அல்லவா...
கையில் அரிவாளுடன் தன் வீட்டு முன் நின்று கொண்டிருந்தக் காண்ட்ராக்ட் லேபர் அறிவாளால் மானாவாரியாக கொத்திய அந்தச் சிறிய புங்கன் மரத்திற்கு அருகே வந்தாள்.
வெட்டுவாயை பஞ்சால் துடைத்தாள் அஸ்விதா.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.