வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
நர்மதா அழுது நான் பார்த்ததே இல்லை. அன்று அவள் அப்படி அழுதாள். ஏன்னு கேட்டதுக்கு ‘ கொழந்தை அழுகுது, அதன் அழுகையை நிறுத்த வழி தெரியலைனு’ சொல்லீட்டு மறிபடியும் கேவிக் கேவி அழுதாள்.’ ‘என்னதான் வயது வந்த பெண்ணாய் இருந்தாலும், பெத்த குழந்தை காரணம் புரியாமல் அழுதால், அதன் அழுகையை நிறுத்த முடியாவிட்டால், அவள்தான் என்ன செய்வாள்? பாவம்!’ அவளும் அழுதாள்.
எனக்குத் தெரிந்து, அழும் குழந்தையைச் சிரிக்க வைக்க அந்தக் காலத்துல இருந்து இன்னைக்கு வரை, அதுக்கு ஒரே மருந்து, மார்கம் ‘மெரிகோ ரவுண்டு!’ (merry go round toy) என்பது, பிளாஷ்டிக் பூக்களால் பின்னப்பட்ட குட்டியூண்டு குடை ராட்டினம்தான்.
அது பெரும்பாலும் தொட்டிலின் நடுவிலிருக்கும் மரக் கட்டையில் கட்டப்பட்டிருக்கும்.,அதைச் சுற்ற வைக்க சாவி ஒன்றிருக்கும். ‘கீ’ கொடுக்கப்பட்டு சுற்றும்போது அதைக் குழந்தை அழகாய் ரசித்துச் சிரிக்கும் . என் அப்பா, குழந்தையா இருந்தச்சே, எங்கப்பா என்ன?, அவங்கப்பா குழந்தையா இருந்தச்சேன்னு, குலம் குலமா குழந்தைகளின் அழுகையை நிறுத்தி வைத்தது அந்த ஆயுதம் தான். எனக்குத் தெரிஞ்சு ‘கூகுள் கொழந்தையா இருக்கச்சேயிருந்தே அதுதான் குழந்தைகளை ஆட்கொண்டு வருகிறது என்று நினைக்கிறேன்..

ஒருவிஷயம் என்னன்ன…?! அந்த மெரி கோ ரவுண்டு சைனா தயாரிப்பு.
அது, குழந்தைகளை ஈர்க்கும்கறதை சீனாக்காரர்கள் எப்படிக் கண்டுபிடித்தார்கள்?! அதுதான் நம் இன்றைய கதை.
புத்தர் ஞானம் பெறத் தவமிருக்கையில், அவனை மாயை தன் கட்டுக்குள் கொண்டுவர பெரும் பிரயத்தனப்பட்டது. பெண்களுக்கு மயங்காத அவன் கட்டுக் கோப்பான மனதை எப்படிக் கலைப்பது என்று மாயை எடுத்த ஆயுதம்தான் ஒரு குழந்தை. குழந்தை ஒன்று, தண்ணீரில் விழுந்து மூழ்கிக் கொண்டிருக்கும் காட்சியை மனக் கண்ணில் காண்கிறான் புத்தன். இரக்க வயப்பட்ட புத்தன்இதயம், அந்தக் குழந்தையைக் காப்பாற்ற கையை நீட்டி, அதைப் பற்றி மேலே இழுக்க முயல்கிறது. ஆனால், அந்தக் குழந்தையோ அவனை நீருக்குள் இழுக்கையில்தான் புரிந்து கொள்கிறான் புத்தன், ‘இது நிஜ குழந்தை அல்ல என்று!’ … ‘அந்தக் கணம் அவன் ஞானம் பெறுகிறான்.
சீனா, இதை ஆயுதமாக்கி, இன்றுவரை, புத்தனை ஈர்த்த குழந்தையை அந்தக் குழந்தைகள் வர்கத்தையே ஈர்க்கத் தயாரித்த ஒரு குட்டிக் கருவிதான் மெரிகோ ரவுண்ட் என்னும் பிளாஸ்டிக் பூக்களால் ஆன குட்டி ராட்டினம்.
சீனா, உலகின் எல்லைகளைப் பிடிக்க அல்ல, குழந்தைகளின் உள்ளங்களைப் பிடிக்க ஒரு உத்தியைக் கைக் கொண்டு, இன்றுவரை குழந்தை ஈர்ப்பில் வென்றிருக்கிறது.
அழும் குழந்தைகள் அழுகையை நிறுத்தும் ஆயுதம் மெரிகோ ரவுண்டு. ‘அழுதால் உன்னைப் பெறலாமே…!’ என்று குழந்தைக்குப் புரிந்திருக்கிறது!
கூகுள் கொழந்தையா இருக்கறச்சேயே கண்டு பிடிக்கப்பட்ட மெரிகோ ரவுண்டை வெல்லும் ஒரு மாற்று ‘பேபி டாய்’ இதுவரை வரவில்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது. அறிந்தவர் அறிவாராக!
நர்மதாவுக்கு நான் மெரிகோ ரவுண்டை ரெக்கமெண்டு பண்ணினதுக்கப்பறம் இருவரின் அழுகையும் இப்போது இல்லை!
-வளர்கவி, கோவை.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.