வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
போக்குவரத்திலேயே சிக்கலான இடம் நாலுரோடு சந்திப்புத்தான். என்றாலும், மூணு ரோடு சந்திக்கிற சந்திப்பு இருக்கே அது பெரிய சிக்கலான இடம். ‘யார் எந்தப்பக்கம் போறாங்க? எவன், எந்தப் பக்கம் திரும்பப்போறான்?! எதுவும் கணிக்க முடியாது! அதுலயும் இந்த டூவீலர் பிரகஸ்பதிகள் ‘சைடுஇண்டிகேட்டர்’னு ஒண்ணு இருக்கறதே மறந்து, ‘ரியர்வியூ மிர்ர்ரல’ பின்னாடி வண்டியைக் குனிஞ்சு கவனிச்சா, பின்னாடி போற நாம புரிஞ்சுக்கணுமாம்!, அவர் திரும்பப் போறான்னு! ‘பொசுக்குனு’ அதைப் பார்த்துட்டுத் திரும்பிடுவானுக!. நான், என் வண்டி ரியர் வீயூ மிர்ரரைப் பார்க்கணுமா? இல்லை, எனக்கு எதிர்ல போற வண்டிக்காரன் அவன் ரியர்வியூ மிர்ரரைப் பார்க்கறானா? இல்லையான்னு பார்க்கணுமா? சொல்லுங்க!!
ஸொல்லுங்க….!! சொல்லுங்க….!!! சொல்லுங்க….!!! பாஷா எக்கோ’ இல்லை மூணு ரோடு சந்திப்புக்கான சப்தம் அவ்வளவுதான்!

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். ரோடு கிராஸ் பண்ணறவன் பண்ற அட்டூழியமிருக்கே, அது சொல்லில் அடங்காது! வலதுகையில் ஜாமான்கள் வாங்கிய ‘பேக்’கிருக்கும் இடது கையை உயர்த்தி டிராபிக் கான்ஸ்டபிள் மாதிரி ‘நிறுத்து’ன்னு சொல்லிட்டே ரோடைக் கிராஸ் பண்ணுவாங்க.!. நமக்கு அப்பத்தான் கிரீன் விழுந்து நாம ‘அப்பாடான்னு’ நகர ஆரம்பிச்சிருப்போம்!. நமக்குப் பின்னாடி வர்றவன், ‘நைநைனு’ ஹாரன் வேற அடிச்சு உசிரை வாங்குவானுங்க!
‘லைசென்ஸ்’ வாங்க எட்டுப் போட்டதெல்லாம் எம்மாத்திரம்?! இந்த மாதிரி திடுதிப்புனு ஆளுங்களை நடுவுல விட்டு, கிராஸ்பண்ண வச்சும் இனி, லைசென்ஸ்ஸுக்கு ‘டெஸ்ட்’ பண்ணலாம். ‘திட்டாதீங்க!’, அப்படி எரிச்சல் வருது!
(இதுதான் சாக்குனு இதை, கவர்மெண்ட் இம்ப்ளிமெண்ட் பண்ணீடுமேன்னு பயப்படாதீங்க.,! அதெல்லம் பண்ணாது!)
லைசென்ஸ் எடுக்க வர்ற கூட்டத்தைச் சமாளிக்க முடியாம இருக்கற சட்டத்தை அமுலாக்கறதே பெரிய தலைவலியா இருக்கு அவங்களுக்கு!!

அன்னைக்கு கூட்டமிருக்காதுன்னு நான் நினைச்சது பெரியதப்பு. ‘இன்னைக்கு லீவுதானே? யாரும் வண்டி எடுக்கமாட்டாங்க!’ என்ற நெனைப்புல வண்டி எடுத்துட்டு டவுணுக்குப்போயிட்டேன். என்னை மாதிரியே எல்லாரும் நெனைச்சுட்டு எடுத்துட்டு வந்திருப்பங்க போல! அடடா… பட்ட பாடிருக்கே??!! அப்ப்பா??!!
அந்த மூணுரோட்டுல சிக்னல் இல்லை! அப்படியொரு டிராபிக் ‘ஜாம்…!’
ரெண்டு மூணு சமூக சேவகர்கள் திடீரென உதயமாகி டிராபிக்கைக் கண்ட்ரோல் செய்ய, கொஞ்சம் நிம்மதி வந்தது. ஆனாலும், ஆழமாக நமக்குள் இருக்கும் திமிர், ``இவனுக, ‘என்ன சொல்றது?!’ நாம, ‘என்ன கேக்கறதுன்னு! என்று ஆளாளுக்கு திமிரா, எக்குத் தப்பா ஓட்ட, என்னை மாதிரி பலபேர் ‘பேந்தப் பேந்த’ முழிச்சுட்டு நின்னதுதான் மிச்சம்!.
அந்த சமூக தீர்திருத்த வாதியில ஒருத்தன், எதோ அவசரமா ஃபோன் வந்த மாதிரி, வராத ஃபோனைக் காதுல வச்சு பேசிட்டே, ‘என்னன்னோ தொலைங்கடான்னு! மனசுக்குள்ள எல்லாரையும் திட்டிட்டே அங்கிருந்து ‘எஸ்கேப்!’ ஆனதுதான் மிச்சம்.
எந்த சமூக சீர்திருத்த வாதியை, நாம் மதிச்சிருக்கோம்?! அவங்களை மதிக்காம, சந்தி சிரிக்க வச்சதுதானே மிச்சம்?!

அப்போ திடீர்னு…, காக்கிச் சட்டை போட்ட ஒரு போலீஸ்காரம்மா, கையைக் காட்டி நிறுத்தினாங்க பாருங்க!, எல்லாப் பக்க வண்டியும்’ கப்சிப்புனு நின்னு, அப்புறம் அந்த போலீஸ் காரம்மா போகச் சொல்றா மாதிரி அவங்கவங்க போக வேண்டிய திசையை மறந்து, அந்தம்மா காட்னுல திசைல ‘கரெக்டா’ போக ஆரம்பிச்ச போதுதான் ஒண்ணு உதயமாச்சு மனசுல……..
‘அட, - ஆணென்ன..? பெண்ணென்ன…? எல்லாம் ஓரினம்தான்! –
ரோட்டுல, காக்கிச்சட்டை போட்ட, போலீஸ் வந்தாத்தான்
போவோம் ‘கம்முனு’தான்!
சமூக சீர்திருத்த வாதிகளை மதிக்கறதில்லை.. காக்கிச் சட்டைக்கும் கவர்மெண்ட் சட்டதுக்குத்தான் இந்த நாட்டுல மரியாதை!.
இந்த மரியாதையை மதிக்கிறதை மதிச்சுத்தான் நாட்டுல இன்னும் மழை பெய்யுதோ?!
*****
-வளர்கவி, கோவை.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.