வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
நான் பெருமாள் மற்றும் எனது நண்பர்களான ரங்கநாதன், சிவகுமார் மூவரும் பல்லடம் (திருப்பூர்) பகுதியில் வசிக்கிறோம். பள்ளி கால நண்பர்களான மூவரும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிகிறோம், நாங்கள் அடிக்கடி சுற்றுலா பயணங்கள் மேற்கொள்வது வழக்கம் அதன் ஒரு நிகழ்வாக நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் உள்ள மைசூர் வரை சுற்றுலா செல்ல முடிவு செய்தோம்.
இதற்கான பயண திட்டம் தயார் செய்து அதை ஒரே நாளில் பேருந்தில் சென்று சுற்றி பார்த்து விட்டு வருவது என பயண திட்டத்தை தயார் செய்தோம். அதற்கான நாளும் வந்தது எங்கள் பயணத்திற்கு தேவையான பொருள்களை எடுத்து கொண்டு பயண திட்டத்தை செயல்படுத்த மூவரும் பல்லடம் பேருந்து நிலையத்தில் சந்தித்து கொண்டோம்.

ஜூன் 18 2022 சனிக்கிழமை அன்று இரவு 9 மணியளவில் பல்லடம் பேருந்து நிலையத்தில் இருந்து கோவை காந்திபுரம் செல்ல பேருந்தில் ஏறி கொண்டோம். இரவு மணி 10.20 அளவில் கோவை காந்திபுரம் வெளி மாநில பேருந்து நிலையம்(INTER STATE BUS STAND) சென்று சேர்ந்தோம். 276 கிலோமீட்டர் பேருந்து பயணம் செய்ய வேண்டியது இருந்ததால் எங்களுக்கு தேவையான தண்ணீர் பாட்டில்கள் வாங்கி கொண்டோம். நாங்கள் பயண சீட்டு முன்பதிவு செய்யவில்லை அதனால் பேருந்தில் ஏறி பயண சீட்டு எடுத்து கொண்டு பின் இருக்கையில் அமர்ந்து கொண்டோம், பயணவழி கோவை-அன்னுர்-புளியம்பட்டி-சத்தியமங்கலம் -அந்தியூர்-பர்கூர்-கொள்ளேகால்-மைசூர் பஸ் ஸ்டாண்ட்(KSRTC).
பேருந்து கோவையில் இருந்து கிளம்பி நீண்ட தூர பயணத்திற்கு பின் 2 மணி அளவில் பர்கூர் மலையில் உள்ள டீ கடையில் பேருந்து நிறுத்தபட்டது. அந்த குளிருக்கு இதமான ஒரு டீயின் தேவையை அந்த கடை பூர்திசெய்தது, டீ குடித்து விட்டு வந்து பேருந்தில் அமர்ந்து கொன்டோம், பயணம் தொடங்கியது சாலை நன்றாக இல்லாத காரணத்தால் எங்கள் தூக்கம் கலைந்தது மைசூரில் சுற்றி பார்க்கும் ஆவலில் அந்த இரவிலும் ஜன்னலில் வேடிக்கை பார்த்தும் மொபைலில் பாடல்கள் கேட்டும் நேரத்தை கழித்தோம் . அதிக தூரம் பயணம் நீண்டது..

காலை 6 மணியளவில் மைசூர் பேருந்து நிலையம் (KSRTC) வந்து இறங்கினோம். எங்கள் பயண திட்டம் 1)பிருந்தாவன் கார்டன் 2)மைசூர் பேலஸ் 3)மைசூர் விலங்கியல் பூங்கா. 4)சாமுண்டீஸ்வரி கோயில் என்று இருந்தது ஆனால் காலையில் எங்கள் பயணத்தில் சிறிது மாற்றம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
மைசூரில் சர்வதேச யோகா தின விழாவில் பிரதமர் அவர்கள் கலந்து கொள்ள இருந்ததால் பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக பேருந்துகள் வழி தடம் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது,எனவே பயணத்தை தொடங்க மைசூர் பேருந்து நிலையத்தில் இருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிட்டி பஸ் ஸ்டாண்ட் பகுதிக்கு செல்ல வேண்டும். எனவே நாங்கள் மைசூர் நகரை வேடிக்கை பார்த்தபடி நடந்து சென்று அந்த இடத்தை அடைந்தோம்,இங்கிருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் பிருந்தாவன் கார்டன் பூங்கா இருந்தது சிறுது நேரத்திற்கு பின் அந்த வழித்தட பேருந்து எண் அறிந்து பிருந்தாவன் கார்டன் செல்லும் பேருந்தில் ஏறினோம்.
பேருந்தில் நடத்துனர் ஒருநாள் பாஸ் திட்டம் பற்றி கூறினார் (ஒருநாள் முழுவதும் குறிப்பிட்ட பேருந்துகளில் குறிப்பிட்ட நேரம் வரை மட்டும் முக்கிய இடங்களுக்கு சென்று வரலாம்) இந்த திட்டம் எங்கள் பயணத்தை மேலும் எளிமை ஆக்கியது மூவருக்கும் பயண சீட்டு வாங்கிகொண்டோம். எங்களுக்கு கன்னட மொழி தெரியாதபோதும் எங்களுக்கு தெரிந்த மொழியை ஓரளவு புரிந்து பலர் உதவி செய்தனர். பிருந்தாவன் கார்டன் நிறுத்தத்திற்கு கொஞ்சம் முன்னாள் நாங்கள் இறங்கி கொண்டோம் . சற்று தொலைவில் அணை நீர் வெளி ஏற்றும் கால்வாய் இருந்ததது. அதில் குளித்து விட்டு அருகில் உள்ள உணவகத்தில் சாப்பிட்டு விட்டு நடக்க ஆரம்பித்தோம் . சற்று நேரத்தில் அணை நுழைவு வாயிலை அடைந்தோம்.

அணை பூங்காவில் மூவருக்கும் நுழைவு கட்டணம் செலுத்தி அணை மற்றும் பூங்காவை பார்க்க ஆரம்பித்தோம் . அணை பகுதியில் அமைத்துள்ள கோவிலில் அன்று சிறப்பு பூஜை ஒன்று நடை பெற்று கொண்டிருந்தது அதில் கலந்து கொண்ட பின் பூங்காவை சுற்றி பார்க்க கிளம்பினோம் அணை பகுதியில் பூச்செடிகள், புல்வெளிகள், நீர் ஊற்றுகள் என அழகாக காட்சிபடுத்தப்பட்டு இருந்தது. (தமிழ் படங்களின் பாடல்கள் பல இங்கு ஒளிபதிவு செய்யப்பட்டுள்ளது).
அணை பூங்காவில் மாலை நேரம் தான் மிக சிறப்பாக இருக்கும். தினமும் மாலை நேரத்தில் மின் விளக்குகள் அலங்கரிப்பில் அணை பூங்கா மிக அழகாக காட்சி அளிக்கும் மேலும் இசைக்கு ஏற்ப செயற்கை நீரூற்றுகள் நடன நிகழவும், குளம் பகுதியில் கட்டணம் செலுத்தி படகு சவாரி செய்யும் வசதியும் ஏற்படுத்த பட்டு இருக்கிறது.

பூங்காவில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என அனைவருக்கும் பொழுதுபோக்கும் அம்சங்கள் அதிகமாகவே இருந்தது.கால்கள் ஓயும் வரை பூங்கா முழுவதும் சுற்றி பார்த்து விட்டு எங்கள் திட்டத்தில் உள்ள அடுத்த இடத்திற்கு செல்ல அணையை விட்டு கிளம்பி அணை பேருந்து நிறுத்தம் வந்து நின்றோம் . நாங்கள் அடுத்து மைசூர் அரண்மனை சென்று பார்ப்பது என முடிவு செய்து கொண்டோம்.
பிருந்தாவன் கார்டன் அணையில் இருந்து பேருந்தில் ஏறி சிட்டி பஸ் ஸ்டாண்ட் சென்ற போது மதிய நேரம் ஆகி இருந்தது எனவே மதிய உணவு முடித்து விடலாம் என முடிவு செய்து அருகில் இருந்த ஹோட்டலுக்கு சென்று மைசூர் மசாலா தோசை ஆர்டர் செய்து சாப்பிட்டுமுடித்தோம். சிட்டி பஸ் ஸ்டாண்டில் இருந்து மைசூர் அரண்மனை 1 கிலோமீட்டர் தொலைவில் தான் இருந்தது இருந்தாலும் ஆட்டோ ஒன்றை தேர்ந்தெடுத்தோம் அந்த ஆட்டோ ஓட்டுநர் அங்கு செல்லும் முன் மைசூர் பட்டு ஷோரூம் மற்றும் சந்தன மர கைவினைய பொருள்கள் பற்றி கூறி விற்பனை கடைக்கு கூட்டிச்சென்றார்.

நாங்களும் மைசூர் பட்டு சேலை மற்றும் சந்தன வாசனை பொருள்கள் வாங்கிவிட்டு மைசூர் அரண்மனை வந்து சேர்ந்தோம். அங்கே பிரதமர் வருகை பாதுகாப்பு காரணமாக அனுமதி மறுக்கப்பட்டது அந்த அரண்மனை பகுதியில் பார்வையாளர்கள் பார்வையிட தடை விதிக்கபட்டுருந்தது இருந்தது அதனால் ஏமாற்றத்துடன் அடுத்த இடத்திற்கு கிளம்பினோம். மைசூர் அரண்மனையில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள விலங்கியல் பூங்கா செல்ல ஆட்டோ ஓட்டுனரிடம் கேட்டுக்கொண்டோம் .
விலங்கியல் பூங்காவில் அரிய வகை பறவைகள், விலங்குகள் என பல உயிரினிங்கள் இங்கு பாதுகாக்கப்பட்டு பராமரிக்க படுகிறது. பெரிய பரப்பளவு உள்ள பூங்கா என்பதால் சுற்றிப்பார்க்க அதிக நேரம் தேவைப்பட்டது.

பூங்காவை நடந்து சென்று பார்க்க முடியாதவர்கள் கட்டணம் செலுத்தி மின்சார வாகனம் மூலம் சுற்றி பார்க்கும் வசதியும் உள்ளது.
பூங்கா காலை 8.30 மணிமுதல் மாலை 5.30 மணிவரை பார்வை இடலாம். வாரத்தில் செவ்வாய்கிழமை அன்று விடுமுறை விட பட்டிருக்கும். வாகனங்கள் நிறுத்தும் வசதியும், பூங்காவில் கட்டணம் செலுத்தி புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்யவும் அனுமதி உள்ளது.
பூங்கா நுழைவு மற்றும் மின்சார வாகனங்கள் பயணம் செய்ய ஆன்லைன் வழியாக கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ஒருவழியாக பூங்கா முழுவதும் சுற்றி பார்த்த பின் வெளியில் வந்தோம் அப்போது மாலை நேரம் ஆகியிருந்தது. எங்களிடம் நேரம் மிக குறைவாகவே இருந்தது பட்டு ஷோரூம் செல்வது எங்கள் திட்டத்தில் இல்லாத காரணத்தால் அங்கு செலவிட்ட நேரத்தை சரிசெய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது..
இருந்தாலும் இறுதியாக விலங்கியல் பூங்காவில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சாமுண்டீஸ்வரி கோவில் செல்வது என முடிவு செய்து விலங்கியல் பூங்காவில் இருந்து பேருந்தில் ஏறி கோவில் சென்று சேர்ந்தோம்.

அந்த நேரம் கோவிலில் முக்கிய பிரமுகர் வருகை காரணமாக நாங்கள் வருவதற்கு முன்னே பக்தர்கள் கூட்டம் தரிசனம் செய்ய வரிசையில் காத்திருந்தனர் எனவே நாங்கள் தரிசனம் செய்ய அதிக நேரம் தேவைபடும் என்ற நிலை ஏற்பட்டது, எங்கள் பயணத்திட்டப்படி 8 மணியளவில் மைசூர் பிற மாநில பேருந்து நிலையம் (KSRTC) அடைய வேண்டும் என்பதாகும். அதனால் வரிசையில் நிற்பதை தவிர்த்து கோவில் முன் பகுதிக்கு சென்று தரிசனம் செய்து விட்டு கோவில் பேருந்து நிறுத்தும் இடம் வந்தோம்.
நாங்கள் வந்த பேருந்து இன்னும் நின்று கொண்டு இருந்தது. ஒருநாள் பஸ் பாஸ் நேரமும் முடியும் தருவாயில் இருந்தது இனி வேறு எங்கும் செல்லாமல் பயணத்தை முடித்து விட்டு சிட்டி பேருந்து நிலையம் செல்வது என முடிவு செய்து பேருந்தில் ஏறினோம் 10 கிலோமீட்டர் பயணம் செய்து சிட்டி பஸ் ஸ்டாண்ட் வந்து அங்கிருந்து மீண்டும் மைசூர் பிற மாநில பேருந்து நிலையம் (KSRTC) வந்து போது நாங்கள் திட்டமிட்ட நேரத்திற்கு வந்து சேர்ந்திருந்தோம்.

இரவு உணவு முடித்து விட்டு பேருந்து நிலையம் வந்த போது மைசூரில் இருந்து திருப்பூர் செல்லும் பேருந்து தயாராக இருந்தது ஏறி அமர்தோம் அப்போது இரவு 8.30 ஆகியிருந்தது திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திற்கு பயண சீட்டு பெற்று கொண்டோம்.
பயண வழி - மைசூர் பஸ் ஸ்டாண்ட்-கொள்ளேகால்-பர்கூர்-அந்தியூர்-சத்தியமங்கலம்-புளியம்பட்டி-அவிநாசி-திருப்பூர் பழைய பேருந்து நிலையம் இந்த தடவை சுற்றிய களைப்பும் நேற்றைய தூக்கம்மின்மையும் சேர்ந்து சாலை நன்றாக இல்லாத போதும் தூக்கம் வரவைத்தது குண்டும் குழியுமான சாலையில் தூக்கி போட்ட போதும் தூக்கத்தில் ஆழ்ந்தோம்.

பேருந்து பர்கூர் மலை பாதை வழியாக சென்றது இரவில் பர்கூர் அதே டீ கடையில் பேருந்து நிறுத்தபட்டு பயணிகள் டீ அருந்திய பின் பயணத்தை தொடங்கியது நாங்கள் நீண்ட காலமாக பேருந்து,ரயில் போன்ற பொது போக்குவரத்தில் சுற்றுலா சென்று வருவதால் இதில் உள்ள சிரமங்களை அறிந்து அதற்கு ஏற்றார் போல் எங்கள் பயணங்களை அமைத்து கொள்வோம்.
காலை 6 மணியளவில் திருப்பூர் பழைய பேருந்து நிலையம் வந்து சேர்த்தோம் பின் திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து பல்லடம் சென்று மூவரும் விடை பெற்று வீடு சென்றோம்..இனிதே எங்கள் ஒருநாள் பயணம் முடிவுக்கு வந்தது!
பயணங்கள் தொடரும்..
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.