கட்டுரைகள்
Published:Updated:

படிப்பறை

படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
News
படிப்பறை

பல்வேறுவகையான அவ்வைகளின் பாடல்களில் உள்ள எளிமையும் ஆழமான அர்த்தமும் இந்தக் கட்டுரைகளில் குறிப்பிடத்தக்க ஒன்று.

பல்வேறுவகையான அவ்வைகளின் பாடல்களில் உள்ள எளிமையும் ஆழமான அர்த்தமும் இந்தக் கட்டுரைகளில் குறிப்பிடத்தக்க ஒன்று. மாற்றுத்திறனாளிகளான இரட்டைப் புலவர்களின் நினைத்தவுடன் கவி புனையும் திறம், அவர்களுக்கும் காளமேகப் புலவருக்கும் இருந்த கவிதைபோன்ற உறவு ஆகியவை நாம் அறிந்துகொள்ள வேண்டியவை. போர்க்களத்தில் காயம்பட்டு வந்த யானை, தன் இணை யானையைப் பார்க்காமல் வெட்கப்பட்டு, பகையரசரிடம் பிடுங்கிய வெண்கொற்றக்குடையால் முகம் மறைத்துக்கொள்வது குறித்த முத்தொள்ளாயிரம் பாடல், நீண்ட தனிமையான இரவு தரும் வாதை குறித்த பாடல்கள் பற்றிய கட்டுரை போன்றவை நுட்பமானவை.

படிப்பறை

அதேநேரத்தில் பொதுப்புத்தியின் அடிப்படையிலான மேலோட்டமான கருத்துகளையே சமூக விமர்சனங்கள் என்னும் பாவனையில் நாஞ்சில்நாடன் வெளிப்படுத்துவதும் மேலிருந்து எல்லாவற்றையும் ஏளனமாகப் பார்க்கும் பார்வையும் எரிச்சலூட்டுகின்றன. சத்திமுத்தப் புலவரைப் பற்றிய பாடலில் அவர் இன்ன சாதி என்ற குறிப்பு எதற்கு என்று தெரியவில்லை. மொழியில் செயற்படும் அதிகாரம் குறித்தும் பாலின சமத்துவம் குறித்தும் ஏராளமான விவாதங்கள் நடந்திருக்கும் தமிழ் இலக்கியச் சூழலில் அதுகுறித்த எந்தத் தன்னுணர்வும் இன்றி விபச்சாரம், வைப்பாட்டி, கற்பழிப்பு போன்ற வார்த்தைகளையெல்லாம் நாஞ்சில்நாடன் போன்ற மூத்த எழுத்தாளர் பயன்படுத்துவது அதிர்ச்சியளிக்கிறது. சமூகப்பார்வையற்ற எழுத்தின் விளைவுகள் இவை என்ற புரிதலுடன் நம் பழந்தமிழ் இலக்கியச் செழுமை குறித்து அறிந்துகொள்ள இந்நூலைப் படிக்கலாம்.

பாடுக பாட்டே

நாஞ்சில் நாடன்

வெளியீடு :

விஜயா பதிப்பகம், 20, ராஜவீதி, கோயம்புத்தூர் - 641 001.

பக்கங்கள் : 192

விலை : ரூ.150