பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

காதலென்பது...

காதலென்பது...
பிரீமியம் ஸ்டோரி
News
காதலென்பது...

கூலிஉயர்வுப் போராட்டத்தில் லத்திகள் கூறுபோட்ட கறுப்புத் தோலை இழுத்துக்கட்டும் தர்மாஸ்பத்திரியின் நரம்பு

காதலென்பது...

விடுபட்டுப்போன

பிரியத்தின்

சுவடாய்

கல்லறையில் உருகிநிற்கும்

நினைவுதின மெழுகுக்கூம்பல்...

காதலென்பது...
காதலென்பது...

காதலென்பது...

னாந்தரத்தில் தன் நிழலை

தானே துரத்தும்

சிறுவனின் மூச்சிரைப்பு.

மட்கிப் போகாத

சுடுகாட்டுக் கோடிச் சேலையின்

கத்திரிப் பூ நிறம்

காதலென்பது...

காதலென்பது...

கூலிஉயர்வுப் போராட்டத்தில்

லத்திகள் கூறுபோட்ட

கறுப்புத் தோலை இழுத்துக்கட்டும்

தர்மாஸ்பத்திரியின் நரம்பு.

காதலென்பது...

காதலென்பது...

நேசத்துக்காய் பலிபீடத்தில்

தலை அறுபட்டவன் திமிறலில்

பார்வைபெற்ற கூகையின்

செவிகிழிக்கும் மீஅலறல்.

காதலென்பது...

காதலென்பது...

குலதெய்வத்துக்காக நேர்ந்துவிடப்பட்ட

விலங்கினத்தின் கழுத்தில்தொங்கும்

செப்புமணி.

காதலென்பது...

காதலென்பது...

லவரத்தில்

உடைந்து சிதறிய

வயலினில் எஞ்சியிருக்கும்

ஒற்றை நரம்பு.

காதலென்பது...

காதலென்பது...

சூதாட்டத்தில் தோற்றுப்போன

முதல்மாத ஊதியம். போர் சென்ற

தலைவனுக்காய் வைகறையில் பூத்த

வாகை மலர்.