பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

ஐன்ஸ்டீனுக்குப் பிறகு ஏன் ஐன்ஸ்டீன் உருவாகவில்லை?

ஐன்ஸ்டீனுக்குப் பிறகு ஏன் ஐன்ஸ்டீன் உருவாகவில்லை?
பிரீமியம் ஸ்டோரி
News
ஐன்ஸ்டீனுக்குப் பிறகு ஏன் ஐன்ஸ்டீன் உருவாகவில்லை?

நீரை. மகேந்திரன்

மிஸ்டர் ஐன்ஸ்டீன், உங்களுக்கு ஏன் இவ்வளவு பெரிய மூளை?

காலச் சக்கரத்தை வட்டமெனச் சொன்னது எப்படி?

காலம் சுற்றுகிறது,

கொஞ்சம் உருளை,

ஒரு அச்சில் சுற்றுகிறது என்பதெல்லாம் என்ன கணக்கு?

காதலி கைவிட்டுப் போனபின்

காலம் ஒரு புள்ளியில் மையம் கொள்கிறது.

இதைப் பிரபஞ்ச ரகசியமென்றது எப்படி?

இளமையில் நீங்கள்

கொள்ளை அழகென எழுதிவைத்திருக்கிறாள் ஒருத்தி.

உங்கள் காதலிகளுக்கு

தொடக்கமும் முடிவுமற்ற காலத்தைப்

பரிசளிக்கத்தான் இத்தனை குறியீடுகளா?

இருளும் வெளிச்சமும்

எதிரும் புதிரும் ஈர்க்கும் ரகசியத்தைச் சொல்லவா இவ்வளவு கணிதம்.

காதல் கருந்துளை

சுருங்கும், வெடிக்கும்,

சார்பியல் ஒரு முத்தம்,

அழகான பெண்ணுக்கான முத்தம் எனக்

கண்ணடிப்பது தெரிகிறது.

காலத்தைக் கணிப்பதில்

சுருட்டுப் புகைக்கு என்ன வேலை?

காலம் சுற்றுகிறது மிஸ்டர் ஐன்ஸ்டீன்

வட்டம் வட்டமாக... சுருள் சுருளாக...

ஐன்ஸ்டீனுக்குப் பிறகு ஏன் ஐன்ஸ்டீன் உருவாகவில்லை?