Published:Updated:

NEET: "என் பையனைப்போல டாக்டராக ஆசைப்பட்டேன்" 61 வயதில் நீட் தேர்வில் வென்ற ஆசிரியர்!

ஆசிரியர் சிவபிரகாசம்

நிறைவேறாத தன்னுடைய கனவை எட்டிப் பிடிக்கும் வேட்கையில், ஓய்வுக்குப் பிறகு நீட் தேர்வில் வெற்றியும் பெற்று, அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவிகித இடஒதுக்கீட்டின் மூலம் கலந்தாய்வுவரை வந்திருக்கிறார்.

Published:Updated:

NEET: "என் பையனைப்போல டாக்டராக ஆசைப்பட்டேன்" 61 வயதில் நீட் தேர்வில் வென்ற ஆசிரியர்!

நிறைவேறாத தன்னுடைய கனவை எட்டிப் பிடிக்கும் வேட்கையில், ஓய்வுக்குப் பிறகு நீட் தேர்வில் வெற்றியும் பெற்று, அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவிகித இடஒதுக்கீட்டின் மூலம் கலந்தாய்வுவரை வந்திருக்கிறார்.

ஆசிரியர் சிவபிரகாசம்

ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் நீட் தேர்வில் வெற்றிபெற்று மருத்துவப் படிப்புக் கலந்தாய்வில் பங்கெடுத்திருக்கும் செய்தி கேட்போரை வியப்பில் ஆழ்த்தியிருக்க, இன்னொரு அரசுப் பள்ளி மாணவருக்காக அந்த இடத்தை அவர் விட்டுக் கொடுத்திருக்கும் செய்தி கேட்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

சிவபிரகாசம்
சிவபிரகாசம்

தர்மபுரி மாவட்டம் பாப்பராம்பட்டியைச் சேர்ந்தவர் 61 வயதாகும் சிவபிரகாசம். தியாகி சுப்பிரமணிய சிவா அரசுப் பள்ளியில் பள்ளிக் கல்வியை முடித்தவர், விலங்கியல் பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். தர்மபுரி மாவட்டம் இந்தூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய சிவபிரகாசம், 2020-ல் ஓய்வுபெற்றார்.

தன்னுடைய பணிக்காலத்தில் ஏராளமான மாணவர்களின் மருத்துவப் படிப்புக் கனவுக்கு வழிகாட்டியாக இருந்த சிவபிரகாசத்தின் வாழ்நாள் கனவும் மருத்துவராக வேண்டும் என்பதுதான். அந்த வகையில், நிறைவேறாத தன்னுடைய கனவை எட்டிப் பிடிக்கும் வேட்கையில், ஓய்வுக்குப் பிறகு நீட் தேர்வில் வெற்றியும் பெற்று, அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவிகித இடஒதுக்கீட்டின் மூலம் கலந்தாய்வுவரை வந்திருக்கிறார்.

சிவபிரகாசம்
சிவபிரகாசம்
7.5 சதவிகித இடஒதுக்கீட்டின் கீழ் 437 மருத்துவ இடங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இன்று நடைபெறும் கலந்தாய்வில் கலந்துகொள்ள 719 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், நீட் தேர்வில் 249 மதிப்பெண் பெற்றிருக்கும் சிவபிரகாசம் தரவரிசையில் 349-வது இடத்தில் இருக்கிறார். தரவரிசையில் 5-ம் இடத்தில் இருக்கும் எஸ்.குமார் சிவபிரகாசத்தின் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. கலந்தாய்வில் பங்கெடுக்க இருவரும் ஒன்றாகப் பயணித்து சென்னை வந்திருக்கின்றனர்.

“மருத்துவர் ஆகவேண்டும் என்பது என்னுடைய சிறுவயது லட்சியம். பியூசியில் குறைவான மதிப்பெண்கள் பெற்றதால், இரண்டு முறை பியூசி தேர்வு எழுதினேன். என்றாலும், என்னால் மருத்துவர் கனவை எட்ட முடியவில்லை. அதனால், பிஎஸ்சி விலங்கியல் படித்துவிட்டு, அரசுப் பள்ளியில் விலங்கியல் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ளேன். நீட் தேர்வெழுதி மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான வயது உச்ச வரம்பை உச்ச நீதிமன்றம் நீக்கி கடந்த ஆண்டு உத்தரவிட்டது. ஒடிசாவைச் சேர்ந்த 64 வயதான ஜெய் கிஷோர் பிரதாப் என்பவர், இப்போது 2-ம் ஆண்டு மருத்துவம் பயின்று கொண்டிருக்கிறார். இப்படியான ஒரு வாய்ப்பு அமையும்போது ஏன் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என்று நினைத்தேன்,” என்கிறார் சிவபிரகாசம். இவரது மகன் எஸ்.பிரசாந்த் நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவராகப் பணியாற்றி வருகிறார்.

சிவபிரகாசம்
சிவபிரகாசம்

“நான் ஏன் இப்போது மருத்துவராக வேண்டும் என்று என்னுடைய மகன் கேட்டான். ‘இப்போது மருத்துவம் படித்து, சேவைபுரிந்தால் குறுகிய காலம்தான் சேவை செய்ய முடியும். ஆனால் அரசுப் பள்ளி மாணவன் ஒருவனுக்கு நீங்கள் வாய்ப்பு கொடுத்தால், அவன் உங்களைவிட அதிக ஆண்டுகள் சேவை புரிய முடியும்’ என்று கூறினான்,” என்றார் சிவபிரகாசம்.

12 மணியளவில் தன்னுடைய கலந்தாய்வில் பங்கெடுத்துவிட்டு வெளியே வந்த சிவபிரகாசம், தன்னுடைய மகனின் அறிவுரையை ஏற்று, ‘அரசுப் பள்ளி மாணவர்களின் நலன் கருதி, மருத்துவப் படிப்புக்கான இடத்தை விட்டுக் கொடுக்கிறேன்’ என்று அறிவித்தார்.
சிவபிரகாசம்
சிவபிரகாசம்

ஆசிரியப் பணி குறித்தும், தன்னுடைய மருத்துவக் கனவு குறித்தும் சிவபிரகாசம் பேசும் காணொளியைப் பார்க்க...