சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வனம்

கனமழை நாளை பகல் மட்டுமே பள்ளிக்கு விடுமுறை மனதிற்கோ இரவிலிருந்து.

மழை !

  • கனமழை

    நாளை பகல் மட்டுமே

    பள்ளிக்கு விடுமுறை

    மனதிற்கோ இரவிலிருந்து.

  • மழையை ரசிக்க

    கார் கண்ணாடியைப்

    பாதி இறக்கினேன்

    முகத்தில் அடித்தது சாரல்

    முழுதாய் இறக்கிவிடச் சொல்லி.

சொல்வனம்
  • மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்

    மீன்கள் மழையில் நனையட்டும்.

  • அம்மா ஒரு பெருமழையைத்

தன் முந்தானையால்

மறைத்துப் பள்ளி அழைத்துச் சென்றார்

உடைகள் மட்டும் நனைந்திருந்தன...

- வீ.ப.ஜெயசீலன்

குழந்தையும் யானையும்

ரு குழந்தை

யானை வரைந்தது.

முடித்த தருணம்

யானை கேட்டது

``செல்லக் குட்டி, இது யார் வீடு?''

சொல்வனம்

``என் வீடுதான்...

ஆமாம் உன் வீடு?’’

குழந்தை கேட்டது.

``காடு!

அடர் மரங்கள் நிறைந்த வனம்’’

குழந்தையின் விரல்கள்

காடென ஒன்றை வரையத் தொடங்கிய தருணம்...

``சொன்னதை மட்டும் செய்.

தேவையில்லாம வரையாதே’’

அதிகாரத்தின் குரல் யானைக்கு மதிப்பெண் போட,

அத்துடன் முடிந்தது ஆர்ட் கிளாஸ்

குழந்தையின் தீராத பக்கங்களில் உயிர்பெற்றது காடு!

அடர் வனத்தின் பசுமையில்

யானைகள் சிரித்தபடி கையசைக்க...

துதிக்கை காட்டிச் சிரித்தது குழந்தை!

- புரட்சிக்கனல்

புலம் பெயர்தல்

மாநகரத்தில் புலம்பெயர்ந்தனர்

கிராமவாசிகள்.

உலக்கைகள், திருகைகள்

ஏர்பூட்டிய மாடுகள்

குதிரை வண்டிகளோடு

பாண்டியாட்டமும் பதனிப் பானையும்

புலம்பெயர்ந்தன

மாநகரில் சுவர்ச் சித்திரங்களாய்…

- வல்லம் தாஜுபால்

சொல்வனம்

நதி பருகும் பறவை

றவைகள்மீதான ஆசையிலேயே

மீன்களை அள்ளித்தருகிறது நதி

மாறாகப் பறவைகள் செய்யவேண்டியதெல்லாம்

நதியின் மேல் சற்று நேரம் பறக்க வேண்டும்

அப்போதுதான் அவற்றின்

நிழலைப் பருகி தாகம் தீர்த்துக்கொள்ளும் நதி.

- வலங்கைமான் நூர்தீன்

சொல்வனம்