பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வனம்

நைந்து போன செருப்பு

அறியாத குருவிமொழி

அள்ளி வைக்கும்

சோளமணிகளை

நேரம் தவறாமல் தினமும்

‘விர்ர் விர்ர்’ எனப் பறந்துவந்து

உற்சாகக் கீச்சுகளை 

இறைத்தவாறு மேய்ந்திடும்

நாற்பது ஐம்பது

குருவிகளுக்கு  

எப்படித்தெரிவிப்பது

என்று தெரியவில்லை

மாறப்போகும்

புதுவீட்டின் முகவரியை.

- வீ.விஷ்ணுகுமார்

ஓடுபாதைக்கொடி வண்ணத்துப்பூச்சி

மேலிருந்து லாகவமாகத் தரையிறங்கிய

விமானம்

ஓய்வுக்காக ஓடுபாதைக்கொடியில்

வந்தமர்ந்த வண்ணத்துப்பூச்சியாகத் தெரிகிறது!

- ஏந்தல் இளங்கோ

சொல்வனம்

எதையாவது சொல்லிக்கொண்டிரு...

ரோஜாவிற்கு

சாமந்தியில் பூக்க ஆசை.

சாமந்திக்கோ

சாமந்தியில் இருப்பதே மகிழ்ச்சி.

நம்பத்தகுந்ததோ

நம்பிக்கையற்றதோ

இருந்துவிட்டுப்போகட்டுமே

எதையாவது சொல்லிக்கொண்டிரு

எனையது லேசாக்குகிறது

தாங்கிடும் ஊஞ்சலாகிறது

தலைகோதும் விரல்களாகிறது

விடியலைக் காட்டும்

தூக்கமாகவும் இருக்கிறதன்பே.

 - ந.பெரியசாமி

நைந்து போன செருப்பு

எவரும் வகுத்திடாத பாதைகளில் பயணிப்பதை

சாதுர்யமாய்த் தவிர்த்துவிடுபவர்களிடம்

என்னிடம் ஒரு கேள்வி இருக்கிறது

‘சாகசங்களே அற்ற உங்கள் பாதைகளில்

பயணிக்க நைந்துபோன

செருப்பு போதாதா?’

- ராம்ப்ரசாத்