திருத்தலங்கள்
திருக்கதைகள்
தொடர்கள்
Published:Updated:

ஆன்மிகத் துளிகள்

திருதராஷ்டிரன்
பிரீமியம் ஸ்டோரி
News
திருதராஷ்டிரன்

பாண்டிய நாட்டில் உள்ள சிறு கிராமம் ‘சன்னியாசி’. இங்கு பகழிக்கூத்தர் என்ற கவிஞர் வாழ்ந்து வந்தார்.

ஆயுளை அறுக்கும் ஆறு வாள்கள்!

ருமுறை திருதராஷ்டிரன் தன் சகோதரர் விதுரரிடம், ‘‘மனிதனுக்கு ஆயுள் நூறு வருடங்கள் என்பர். எனினும் நூறு வருடங்களைக் கடக்கும் மனிதர்கள் அரிது என்றே தோன்றுகிறது. இதற்குக் காரணம் என்ன’’ என்று கேட்டார். விதுரர் பதில் சொன்னார்:

‘‘அரசே... மனித ஆயுளை அறுக்கும் வாள்கள் ஆறு. முதலாவது கர்வம். பலரும், இந்த உலகில் தானே கெட்டிக்காரன். மற்றவரெல்லாம் முட்டாள் என்று நினைக்கிறார்கள். ஆகவே, கர்வம் இல்லாமலிருக்க, தன்னுடைய குற்றம் குறைகளைப் பார்க்கவேண்டும்; பிறரிடம் நற்குணங்களையே பார்க்க வேண்டும்.

இரண்டாவது வாள் - அதிகம் பேசுவது. தனக்குப் பேச விஷயங்கள் இல்லாதபோதும் வீண் பேச்சு பேசுபவன், வீண் வம்பை விலைக்கு வாங்குகிறான்.

மூன்றாவது வாள்- தியாக உணர்வின்மை. அதீத ஆசையே மனிதனின் தியாக உணர்வைத் தடுக்கிறது. இதை உணர்ந்தால், தியாக உணர்வு தானே வரும்.

நான்காவது வாள்- கோபம். கோபத்தை வெல்பவனே உண்மையான யோகி. கோபம் வந்துவிட்டால், தர்மம் எது, அதர்மம் எது என்பது தெரியாமல் போகிறது; பாவங்களைச் செய்ய நேரிடுகிறது.

ஐந்தாவது வாள்- சுயநலம். சுயநலமே எல்லா தீமைகளுக்கும் காரணம். சுயநலம் கொண்டவன் பாவம் செய்யத் தயங்குவதில்லை.

திருதராஷ்டிரன்
திருதராஷ்டிரன்

ஆறாவது வாள்- துரோகம். இந்த உலகில் நல்ல நண்பர்கள் கிடைப்பதே அரிது. அப்படிப் பட்டவர்களுக்குத் துரோகம் செய்வது தவறு. இந்த ஆறு விஷயங்களிலிருந்தும் ஒருவன் விலகி வாழ்ந்தால், நிச்சயமாக அவன் நூற்றாண்டை நிறைவு செய்வான்.’’

- சக்தி. அ. உமாராணி, கிருஷ்ணகிரி-1

கந்தவேல்
கந்தவேல்
பிள்ளைத்தமிழ் பிறந்த கதை!

பாண்டிய நாட்டில் உள்ள சிறு கிராமம் ‘சன்னியாசி’. இங்கு பகழிக்கூத்தர் என்ற கவிஞர் வாழ்ந்து வந்தார். அவருக்கு அடிக்கடி வயிற்றுவலி வந்தது. மருத்துவரை நாடினாலும் நிரந்தரமாக நோய் குணமாக வழி கிட்டவில்லை. ‘இறையருளால்தான் வயிற்றுவலி குணமாகும்’ என்பதை உணர்ந்த பகழிக்கூத்தர், திருச்செந்தூர் முருகனைப் பிரார்த்தித்தார். அப்போது அந்த வழியே வந்த சிவனடியார் ஒருவர், பகழிக்கூத்தரிடம் திருச்செந்தூர் இலை விபூதியைக் கொடுத்தார். அதில் சிறிதளவு எடுத்து வாயில் போட்டுக்கொண்ட பகழிக்கூத்தர், அதில் கொஞ்சத்தை வயிற்றிலும் பூசிக்கொண்டார். என்ன ஆச்சர்யம்... வயிற்றுவலி உடனே குணமானது! இலை விபூதியைக் கொடுத்த சிவனடியாரைத் தேடினார். அவரைக் காணவில்லை. எல்லாம் முருகனின் அருள் என்பதை உணர்ந்த பகழிக்கூத்தர், நன்றிக்கடனாக ‘கந்தவேல்’ குறித்து பாமாலை ஒன்று பாடினார். அதுவே, ‘திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ்’ என்று போற்றப்படுகிறது.

- தி.இரா.பரிமளரங்கன், திருச்சி-21