தாஜ்மஹால் தேசங்கள் கடந்து போற்றப்படும் காதலின் சின்னம். தன் காதல் மனைவிக்காக ஒரு அரசன் எழுப்பிய நினைவு இல்லம் உலகப் புகழ்பெற்றது விந்தையான ஒன்றுதான். அதையொட்டி அந்த மன்னனும், அவன் வாழ்வும் குறித்த கலவையான பார்வைகள் உலகில் வேறெங்கும் நடக்காத ஒன்று. பளிங்குளால் யமுனை நதிக்கரையில் எழுப்பப்பட்டிற்கும் அந்த அதிசயம் ஷாஜகான் - மும்தாஜ் என்ற முகம் அறியப்படாத இரு ஜீவன்களின் காதலையும் தாங்கி நிற்கிறது. ஷாஜகானின் நினைவு நாள் இன்று. காதல் எப்படியான அனுபவம் என விவரிக்க முடியாத பதத்தில் உள்ளதோ ஷாஜகானின் வாழ்வும் அப்படியான ஒன்றுதான். முரண்களின் மீதான ஒரு வாழ்வுதான் ஷாஜகானுடையதும்.

முகலாய வம்சாவளியான ஷாஜகான் 5-வது முகலாய பேரரசர். இவர் முகலாய மன்னர் ஜஹாங்கீர் - மிர்சாவின் மகனும், ஜோதா - அக்பரின் பேரன். இவருடைய இயற்பெயர் அபுல்-முஸாஃப்பர் ஷஹாபுதீன் முகம்மது.
1592 ஜனவரி 5ஆம் நாள் லாகூரில் (இப்போதைய பாகிஸ்தான்) பிறந்தார். பிறந்த ஆறு நாட்களிலேயே தாத்தா அக்பரிடம் ஒப்படைக்கப்பட்டார். அக்பரின் மனைவிகளில் ஒருவரான ருக்கையா பேகம்தான் இவரை வளர்த்தார். அக்பரின் செல்ல பேரனான ஷாஜகானுக்கு அக்பர் வச்ச பேரு குர்ராம். 1605 ல அக்பருடைய மறைவுக்குப் பின்னர் 13 வயதான ஷாஜகான் ஜஹாங்கீரிடம் வந்து சேர்ந்தார். 1607-ல் அர்சுமந்த் பானு பேகமாகிய மும்தாஜ் மேல காதல் கொள்கிறார் ஷாஜகான்.

தந்தை ஜஹாங்கீர் கிட்ட போய் தனக்கு மும்தாஜ திருமணம் செய்து வைக்குமாறு கேட்கிறார். ஷாஜகானின் காதல ஏத்துக்குறாரு ஜஹாங்கீர். ஆனால் சில காரணங்களால திருமணம் செய்து வைக்க ஐந்து வருடங்கள் காத்திருக்குமாறு கூறுகிறார். சொன்ன மாதிரியே ஐந்து வருடங்களுக்குப் பிறகு ஷாஜகானுக்கும் மும்தாஜ்க்கும் திருமணம் செய்து வைத்தார் ஜஹாங்கீர். இதற்கு இடையே ஷாஜகானுக்கு இரண்டு திருமணம் நடந்ததிருந்தது. ஆனால், மற்ற மனைவிகளை விட ஷாஜகான் மும்தாஜ் மேல் அதிக பிரியமும் காதலும் கொண்டிருந்தார்.
மும்தாஜ் ஒரு புத்திசாலி, கல்வியில் சிறந்து விளங்கியவர், பேரன்பு கொண்டவர். இது மட்டுமல்லாமல் அவர் ஒரு சுயமரியாதை பெண். இந்த காரணத்தாலேயே ஷாஜகான் மும்தாஜ் மேல காதல் ஏற்படுது. அர்சுமந்த் பானு பேகம் என்ற பெயரை மும்தாஜ் மஹால் பேகம் (அரண்மனையில் உயர்ந்தவர்) - ன்னு மாற்றி பட்டம் அளித்து மனைவியைக் கௌரவித்தார் ஷாஜகான்.

மேவார் போர், டெக்கானை கைப்பற்றியது என தொடர்ந்து பல வெற்றிகளைக் குவித்ததாலதான், தந்தை ஜஹாங்கீரால் `ஷாஜகான்' ங்கிற பேர் ஷாஜகானுக்கு வந்தது. ஷாஜகான் என்பதற்கு `King of the world' என்று பொருள். 1677 -ல் தந்தை இறந்ததை அடுத்து அண்ணன்களை எதிர்த்து, மும்தாஜின் தந்தையும் தனது மாமனாருமான அசாப் கானுடன் சேர்ந்து பல சூழ்ச்சிகள் செய்து அரியணை ஏறினார் ஷாஜகான்.
அக்பரைப் போலவே அவர் தன்னுடைய இராஜ்ஜியத்தை விரிவுபடுத்துவதில் ஆர்வமா இருந்தார். அவருடைய ஆட்சியின் முக்கிய நிகழ்வுகளாக இருப்பது, அஹ்மத்நகர் இராஜ்ஜியத்தின் அழிப்பு, பெர்சியர்களிடம் கந்தஹார்-ஐ இழத்தல் , மற்றும் டெக்கன் இளவரசிக்கு எதிராக இரண்டாவது போர்
அவருடைய ஆட்சிக்காலம் முகலாய கட்டடக்கலையின் பொற்காலம் என்று கூறப்படுது. ஒருமுறை மத்திய பிரதேசத்திற்கு போருக்குச் சென்றிருந்தார் ஷாஜகான். நிறைமாத கர்ப்பிணி ஆன மும்தாஜ் -உம் உடன் சென்றிருந்தார். அப்போது தங்களது 14 வது குழந்தையைப் பெற்றெடுக்கையில் வலிப்பு ஏற்பட்டு மும்தாஜ் இறந்தார்.

மும்தாஜின் இழப்பை ஷாஜகானால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பெருந்துயரத்திற்கு ஆளானார். அரச ஆடைகள் ஆபரணங்கள் அணிவதைத் துறந்து வெண்ணிற ஆடை உடுத்தத் தொடங்கினார். அதுவரை தாடியில் காணப்படும் ஓரிரு நரைமுடிகளைப் பார்க்க சகிக்காமல் பிடுங்கி எறிந்த அவர், தலைமுடி தாடி என அனைத்தும் நரைந்திருக்க சந்நியாசி போல இருந்திருக்காரு. மும்தாஜின் இழப்பில் இருந்து மீள முடியாத அவர் தன் காதல் மனைவிக்காக கல்லறை ஒன்றைக் கட்ட முடிவு செய்றாரு. தன் துக்கத்தை உலகமே நினைவுல வச்சுருக்கணும்னு நினைச்சிருக்காரு. அப்படி கட்டப்பட்ட மாபெரும் அதிசயம் தான் உலக அதிசயங்களில் ஒன்றாக பிந்நாளில் கெளரவிக்கப்பட்ட தாஜ்மஹால். 22 ஆண்டுகளாகக் கட்டப்பட்டது தாஜ்மஹால்.
முழுக்க முழுக்க பளிங்கு கற்களாலும் விலையுயர்ந்த தங்கம், வைரம், மாணிக்கக் கற்கள் கொண்டு கட்டப்பட்டது எனச் சொல்லப்படுது. பிற்காலத்தில் ஆபரணங்கள் பலவும் கெள்ளையடித்துச் செல்லப்பட்டது எனச் சொல்பவர்களும் உண்டு. காதலின் பேரதிசயம் தாஜ்மஹாலுக்கு நுழைவு கட்டணமாக இந்தியர்களுக்கு 250 ரூபாயும் வெளிநாட்டினருக்கு 1300 ரூபாயும் SAARC நாடுகளுக்கு 740 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. ஆண்டுக்கு 20 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தாஜ்மஹாலை பார்வையிட வந்து செல்வதாகத் தரவுகள் கூறுகின்றன.

ஷாஜகான் பல அருமையான நினைவுச்சின்னங்களை எழுப்பினார், அவற்றில் மிகப் பிரபலமாக இருப்பது, ஆக்ராவில் இருக்கும் தாஜ்மஹால் தான். ஆக்ராவிலுள்ள பேர்ல் மசூதி, தில்லியில் உள்ள அரண்மனை மற்றும் பெரிய மசூதி அவரின் நினைவாக அமைந்திருக்கிறது. புகழ்வாய்ந்த மயில் சிம்மாசனம் கூட அவருடைய அரசாட்சியின் காலத்துக்குரியது , இது இன்றைய மதிப்பீட்டில் பல மில்லியன் டாலர்கள் மதிப்புடையது.
இவர் கட்டிய தில்லி அரண்மனைதான் கிழக்கு நாடுகளில் இருப்பதிலேயே மிகச் சிறப்பான ஒன்றாகக் குறிப்பிடப்படுகிறது. தான் இறந்தால் அடக்கம் செய்வதற்காக கருப்பு தாஜ்மஹால் ஒன்றை கட்டத் திட்டமிட்டார். ஆனால் அதற்கு காலம் வழிசெய்யவில்லை. 30 ஆண்டுகள் ஷாஜகான் ஆட்சி புரிந்தார். 1658-ல் ஷாஜகானின் மகனான ஔரங்கசீப் தன் தந்தையை சிறையில் அடைத்து ஆட்சியைக் கைப்பற்றினார். பின் தன் வாழ்நாள் முழுவதையும் தன் காதல் மனைவியின் நினைவுகளுடன் ஆக்ரா கோட்டை யின் சிறையிலேயே கழித்தார் ஷாஜகான்.

பின்னர், 1666 ஜனவரி 22 -ம் நாள் உடல்நலம் குன்றி சிறையிலேயே மரணமடைந்தார். அவருடைய உடல் தாஜ்மஹாலில் மும்தாஜின் உடல் அருகே அடக்கம் செய்யப்பட்டது. இரு காதலர்களும் இருந்தும் இறந்தும் ஒன்றாயினர். ஷாஜகான் அழிந்தாலும் அவரது புகழ் அவர் எழுப்பிய காதல் சின்னம் உலகில் காதல் இருக்கும்வரை நிலைத்து நிற்கும். ஷாஜகான் ஆட்சியில் நடந்த போர், அவர் ஆட்சிக்காலம் சிறந்ததா என்பதையெல்லாம் கடந்து தன் காதல் மனைவி துக்கத்தை இந்த உலகத்துக்கு வெளிகாட்ட ஒரு அரசன் இப்படி வாழந்துருக்கார் என்பதுதான் எல்லாரோட ஆச்சர்யமும். ஒருத்தர் மேல வச்சிருக்கிற ப்ரியமும், ஏன் ப்ரியம் வச்சோம்ங்கிறதும் அப்படியான ஆச்சர்யம்தானே!