Published:Updated:

மதுர மக்கள்: "டேக்வாண்டோவில் 23 கின்னஸ் சாதனைகள்... இது பெண்களுக்குமான கலை!"- வழிகாட்டும் நாராயணன்

மதுர மக்கள் - டேக்வாண்டோ நாராயணன்

"டேக்வாண்டோனு ஒரு கலை இருக்குன்னு ஒவ்வொரு ஸ்கூலுக்கா போயி எடுத்துச் சொல்ல ஆரம்பிச்சேன். ஆனா, எல்லாரும் கராத்தேன்னுதான் நினைச்சாங்க." - நாராயணன்

Published:Updated:

மதுர மக்கள்: "டேக்வாண்டோவில் 23 கின்னஸ் சாதனைகள்... இது பெண்களுக்குமான கலை!"- வழிகாட்டும் நாராயணன்

"டேக்வாண்டோனு ஒரு கலை இருக்குன்னு ஒவ்வொரு ஸ்கூலுக்கா போயி எடுத்துச் சொல்ல ஆரம்பிச்சேன். ஆனா, எல்லாரும் கராத்தேன்னுதான் நினைச்சாங்க." - நாராயணன்

மதுர மக்கள் - டேக்வாண்டோ நாராயணன்
"டேக்வாண்டோ (Taekwondo) அப்டிங்கிறது கொரியன் தற்காப்புக்கலை. இப்படி ஒரு கலை இருக்குன்னு யார்கிட்ட சொன்னாலும் இதென்ன கராத்தேயா குங்ஃபூவான்னுதான் கேட்பாங்க. ஆனா இது ஒரு தனிக்கலைன்னு சொன்னாலும் யாரும் கேட்குற மனநிலையில அப்போ இல்ல. அதை கொண்டு போயி சேர்க்கணும்னு அப்டிங்கிறதுக்காக முதன் முதலில் கின்னஸ் சாதனைக்காக பண்ணுனேன். அதன் மூலமா என்னால சில மாணாவர்கள்கிட்ட கொண்டு போயி சேர்க்க முடிஞ்சது. அப்படியே ஒண்ணு ஒண்ணா தொடங்கி இப்போ 23 கின்னஸ் சாதனை பண்ணியிருக்கேன். 24வது சாதனையோட முடிவுக்காகக் காத்திருக்கிறேன்."
நாராயணன்
நாராயணன் பேச பேச அவ்வளவு ஆச்சர்யமாக இருக்கிறது அவரது மனைவி ஸ்ருதிக்கு. அதே டேக்வாண்டோவில் ஸ்ருதியும் இரண்டு கின்னஸ் சாதனைகளுக்குச் சொந்தக்காரர்.

டேக்வாண்டோ எப்படி அறிமுகம்..?

டேக்வாண்டோ நாராயணன்
டேக்வாண்டோ நாராயணன்

"எனக்கு சொந்த ஊரு மதுரை சொக்கிகுளம் பகுதிதான். ஐடி கம்பெனியில வேலை பார்த்துக்கிட்டு இருந்த சமயம் மனசு அமைதிக்காக டேக்வாண்டோ கத்துக்க போனேன். ஒரு கட்டத்துல அதுலயே முழு நேரம் செலவு பண்ண ஆரம்பிச்சேன். அது எனக்கு பெரிய திருப்தியா இருந்துச்சு. அப்படியே வேலை பார்த்த நிறுவனத்துலயும் இதை மத்தவங்களுக்காகச் சொல்லிக்குடுக்க ஆரம்பிச்சேன். ஒரு ஐடி நிறுவன பொறியாளர் என்பதைவிட ஒரு டேக்வாண்டோ மாஸ்டர்னு ஆபீஸ் முழுக்க தெரிய ஆரம்பச்சேன் அது எனக்கு இன்னும் தன்னம்பிக்கை குடுத்துச்சு. சரி வேலைய விட்டுடலாம்னு கிளம்பி மதுரைக்கே வந்துட்டேன்."

ரொம்பவே புதுசான ஒரு தற்காப்புக்கலை... எப்படி நம்பி ஆரம்பிச்சீங்க?

"இப்படி ஒரு கலை இருக்குன்னு ஒவ்வொரு ஸ்கூலுக்கா போயி எடுத்துச் சொல்ல ஆரம்பிச்சேன். ஆனா, எல்லாரும் கராத்தேன்னுதான் நினைச்சாங்க. அப்போதான் ஐதராபாத்ல ஒரு டீம் அறிமுகம் கிடைச்சது. அவுங்க கின்னஸ் சாதனைக்காக ஒரு டீம் உருவாக்கிட்டு இருந்தாங்க. அதுல எங்க டீமுக்கும் ஒரு வாய்ப்பு குடுங்கன்னு கேட்டேன். ஒரு 50 பசங்கள சேர்த்து கிக்கிங் மட்டும் ஒரு மணி நேரத்துல 58,000 வரை செஞ்சு கின்னஸ் ரெக்கார்டை முறியடிச்சோம். அதுதான் எங்களோட முதல் சாதனை. இந்தச் சாதனையை ஒரு விசிட்டிங் கார்டா வச்சு இன்னும் நிறைய மாணவர்களுக்கு கொண்டுபோயி சேர்த்தேன். அதன்படி தனியார் பள்ளி மாணவர்கள், வெளி ஆள்கள்னு சேர்த்தாலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்குக் கொண்டு போயி சேர்க்கணும்ங்கறது என்னோட கனவா இருந்துச்சு.

எங்க தேடியும் பெரிய சப்போர்ட் இல்ல. கடைசியா அலங்காநல்லூர் அரசுப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் உதவியோட அந்தப் பள்ளி மாணவர்கள் 50 பேரோட ஒரு கின்னஸ் சாதனை நிகழ்த்தினோம். 50 பேரு ஒரு மணி நேரத்துல ஒரு லட்சம் கிக் பண்ணாங்க. இப்படித்தான் இப்போ 23 ரெக்கார்டு வந்து நிக்குது."

சரி உங்க மனைவியை எப்படி டேக்வாண்டோவுக்குள்ள அறிமுகப்படுத்துனீங்க..?

"இதேதான், ஒவ்வொரு காலெஜுக்கும் போறப்போ பொண்ணுங்க எல்லாம், இது பசங்களுக்குதான் செட் ஆகும் சார். நீங்க டெமோ குடுத்தா கிளாஸ் நடக்காது, ஒரு மணி நேரம் ஜாலியா இருக்கும்னுதான் வந்தோம்னு நேரடியாவே சொல்லிருக்கங்க. அப்போதான் பொண்ணுங்களையும் இதுல ட்ரெயின் பண்ணனும் யோசிச்சப்போ என் மனைவியே நான் வர்றேன்னு முன்னால வந்து நின்னாங்க. அது எனக்கு இன்னும் சுலபமா இருந்துச்சு. இப்போ அவுங்களும் ரெண்டு கின்னஸ் சாதனை பண்ணிருக்காங்க."

எதிர்கால திட்டம் என்ன?

"இதுவரை ஒரு 5,000 பேருக்கு இந்தக் கலையைக் கத்துக்குடுத்துருப்பேன். இன்னும் நிறைய பேருகிட்ட இதைக் கொண்டுபோய் சேர்க்கணும். இது ஒலிம்பிக்ல உள்ள ஒரு விளையாட்டு. என்கிட்ட இருக்க மாணவர்களை ஒலிம்பிக்குக்குத் தயார்படுத்தி அதுல ஜெயிக்க வைக்கணும். அதான் என் கனவு!"