Published:Updated:

இப்படியும் நடந்ததா? | Nazi Gold Train: காணாமல் போன ஜெர்மனியின் பெரும் புதையல்! எப்போது கிடைக்கும்?

குகைப் பாதை (தற்போது)

இரவோடு இரவாக 13 ரயில் பெட்டிகளில் மொத்தம் ஆயிரம் பைகளில் வங்கியிலிருந்த செல்வங்கள் சுரங்கத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன. அங்குத் தற்காலிகமாக அமைக்கப்பட்ட இருபது அறைகளில் அவை வைக்கப்பட்டன.

Published:Updated:

இப்படியும் நடந்ததா? | Nazi Gold Train: காணாமல் போன ஜெர்மனியின் பெரும் புதையல்! எப்போது கிடைக்கும்?

இரவோடு இரவாக 13 ரயில் பெட்டிகளில் மொத்தம் ஆயிரம் பைகளில் வங்கியிலிருந்த செல்வங்கள் சுரங்கத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன. அங்குத் தற்காலிகமாக அமைக்கப்பட்ட இருபது அறைகளில் அவை வைக்கப்பட்டன.

குகைப் பாதை (தற்போது)

பெரும் போர் நடக்கும்போது தான் தோற்றுவிட்டாலும் தனது நாட்டின் செல்வம் எதிரியின் கைக்குக் கிடைக்கக் கூடாது என்று ஒவ்வொரு நாடும் நினைக்கும். அதைக் காப்பாற்ற முயற்சிகள் எடுக்கும்.

1945ல் இரண்டாம் உலகப் போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்தது. ஜெர்மனி தனது பெரும் செல்வத்தை ​பெர்லினில் இருந்த ரெயிஷ் வங்கி என்பதில்தான் பாதுகாத்து வந்தது.

அந்த சமயத்தில் அந்த வங்கியில் 100 டன் தங்கக் கட்டிகள் (நாஜிக்களின் தங்கம் - Nazi Gold), ஏராளமான மார்க் (ஜெர்மானிய கரன்சி), அரிய கலைப் படைப்புகள், மன்னர்கள் பயன்படுத்திய விலை உயர்ந்த கிரீடம், வாள் போன்றவை இருந்தன.
நாஜிக்களின் புதையல்
நாஜிக்களின் புதையல்
Cpl. Donald R. Ornitz, Photographer - American Commission For the Protection and Salvage of Artistic and Historic Monuments In War Areas. (06/23/1943 - 06/30/1946), Public domain, via Wikimedia Commons

1945 பிப்ரவரி 3 அன்று பல குண்டுகளை பெர்லின் மீது வீசியது அமெரிக்க ராணுவம். மேற்படி வங்கியும் பேரழிவுக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த வங்கியின் தலைவரும் நாட்டின் பொருளாதார அமைச்சரும் இணைந்து ஒரு முடிவெடுத்தார்கள். தங்கள் வங்கியில் உள்ள ஒட்டுமொத்த தங்கத்தையும் வேறு விலைமதிப்பற்ற பொருள்களையும் மெர்கேர்ஸ் என்ற இடத்தில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்திற்கு அனுப்பிவிட வேண்டும். அங்குதான் அவை பாதுகாப்பாக இருக்கும் என்று நினைத்தார்கள்.

பெர்லினின் தென்மேற்குப் பகுதியில் சுமார் இரு​நூறு மைல் தூரத்தில் அமைந்திருந்தது அந்த சுரங்கம். அந்தக் காலத்தில் ஜெர்மனியில் இருந்த பல சுரங்கங்களையும் அரசு தன்வசம் எடுத்துக் கொண்டிருந்தது. காரணம் போர்த் தளவாடங்களை மறைத்து வைக்க அது போன்ற பகுதிகள் பெரிதும் தேவைப்பட்டன. (நிலப்பகுதியிலிருந்தால் வான்வழித் தாக்குதல் நடந்து அவை ஒட்டு மொத்தமாக அழிந்து போகும் வாய்ப்பு உண்டு.)

திட்டமிட்டபடி இரவோடு இரவாக 13 ரயில் பெட்டிகளில் மொத்தம் ஆயிரம் பைகளில் வங்கியிலிருந்த செல்வங்கள் சுரங்கத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன. அங்குத் தற்காலிகமாக அமைக்கப்பட்ட இருபது அறைகளில் அவை வைக்கப்பட்டன.

ஆனால் ஜெர்மனியின் நிம்மதி நீண்ட காலம் நீடிக்கவில்லை. அமெரிக்க ராணுவத்தின் ஒரு படை நிலக்கரி சுரங்கங்களை நோக்கியும் முன்னேறியது. ஒருவேளை உண்மை தெரிந்துவிட்டதோ? அப்படியானால் இனி சுரங்கத்தில் அவற்றைப் பாதுகாப்பதும் ஆபத்தாகி விடுமே. ஜெர்மனி ராணுவம் மறைக்கப்பட்ட பொக்கிஷங்களை வேறிடத்துக்கு மாற்றிவிட முயற்சி செய்தது. மீண்டும் அவற்றை ரயில் பெட்டிகளில் ஏற்றி வங்கிக்கே அனுப்பினார்கள்.

குகைப் பாதை (தற்போது)
குகைப் பாதை (தற்போது)

இந்த சமயத்தில் அமெரிக்க விமானப்படை வீசிய குண்டு ஒன்று வங்கியைத் தாக்கியது. அதன் ஒரு பகுதி சீர்குலைந்து தீக்கிரையானது.

சில நாள்கள் கழித்துப் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. போரினால் ஏற்பட்ட அழிவைச் சீராக்கவும் மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யவும் அரசும் ராணுவமும் ஈடுபட்டன. அப்போதுதான் வங்கியில் சேகரிக்கப்பட்டிருந்த பொக்கிஷம் குறித்து அவர்களுக்கு நினைவு வந்தது.

அங்குச் சென்று பார்த்தபோது செல்வம் இருந்ததற்கான அடையாளமே இல்லை. ரயிலில் கொண்டு வரும்போதே அவை காணாமல் போய் விட்டனவா அல்லது குண்டுவீச்சில் அழிந்து போய் விட்டனவா? ஆக, ஜெர்மனி நாட்டின் செல்வம் (90 சதவிகிதத்துக்கும் அதிகம் என்கிறார்கள்) எங்கோ மர்மமாக மறைந்து விட்டது.

இது குறித்து வேறொரு பேச்சும் நிலவுகிறது.

சுரங்கத்திலிருந்து வங்கிக்குக் கிளம்பிய ரயில் வண்டி ஸ்விபோசைஸ் (Świebodzice) ரயில் நிலையத்தை விட்டுக் கிளம்பியது. ஆனால் அதற்கு அடுத்த ரயில் நிலையமான வார்ப்ரைச் (Wałbrzych) என்பதை அது அடையவில்லை. இந்த இரண்டு ரயில் நிலையங்களுக்கு இடையே நிறையக் குகைப் பாதைகள் இருந்தன. அவற்றில் பயன்படுத்தப்படாத ஒரு குகையில் இந்த ரயில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது என்ற வதந்தி நிலவுகிறது. ஆனால் 1945-ல் இருந்து இப்போதுவரை நடைபெற்ற தேடல்களில் அங்கு ரயில் எதுவும் இருந்ததற்கான சான்று கிடைக்கவில்லை.

வார்ப்ரைச் (Wałbrzych) ரயில்நிலையம் அருகில்...
வார்ப்ரைச் (Wałbrzych) ரயில்நிலையம் அருகில்...

இதெல்லாம் நடந்து முடிந்தபின் 1990-ல் ஒரு விவசாயி தன் நிலத்தை உழுத போது அவருக்கு ஓர் அரிய ஓவியம் கிடைத்தது. அதை அரசிடம் ஒப்படைத்தார். அந்த ஓவியம் ரெயிஷ் வங்கி கஜானாவிலிருந்த கலைப் பொருள்களில் ஒன்று! அந்த விவசாயியை மேலும் தோண்டித் துருவி விசாரித்தனர். பலனில்லை. அவரது நிலத்தையும் அவரது அக்கம்பக்கத்து நிலத்தையும் தோண்டிப் பார்த்தார்கள். எதுவும் கிடைக்கவில்லை.

அந்த எக்கச்சக்கமான பொக்கிஷங்கள் நாடு முழுவதும் சிதறிவிட்டனவா? அல்லது கொள்ளையடிக்கப்பட்டு யாருக்கும் பயனில்லாமல் போய்விட்டனவா? மர்மம் தொடர்கிறது.

- மர்மசரித்திரம் தொடரும்...