Published:Updated:

ரேஷன் கடை பொருள்களின் விலை, Expiry Date தொடர்பாக யாரிடம் புகாரளிப்பது? | Doubt of Common Man

ரேஷன் கடை | Doubt of common man

ரேஷன் கடைகளில் வெளியே உள்ள கரும்பலகையில் ஒரு கிலோ இவ்வளவு என்ற விலைப்பட்டியல் எழுதப்பட்டிருக்கவேண்டும். ஆனால் பெரும்பாலான கடைகளில் அவ்வாறு எழுதப்படுவதில்லை

Published:Updated:

ரேஷன் கடை பொருள்களின் விலை, Expiry Date தொடர்பாக யாரிடம் புகாரளிப்பது? | Doubt of Common Man

ரேஷன் கடைகளில் வெளியே உள்ள கரும்பலகையில் ஒரு கிலோ இவ்வளவு என்ற விலைப்பட்டியல் எழுதப்பட்டிருக்கவேண்டும். ஆனால் பெரும்பாலான கடைகளில் அவ்வாறு எழுதப்படுவதில்லை

ரேஷன் கடை | Doubt of common man

விகடனின் 'Doubt of common man' பக்கத்தில் " Ration கடைகளில் விற்கும் பொருள்களில் ரூபாய் மற்றும் expiry இல்லாத பட்சத்தில் யாரிடம் புகார் அளிக்கலாம் " என்று லோகேஷ் என்னும் வாசகர் கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே.

Doubt of common man
Doubt of common man

பொதுவாகவே ரேஷன் கடைகளில் விற்கப்படும் பொருட்கள் குறித்த தரத்தின் நம்பகத்தன்மை, விலை மாற்றம், எடை குறைவு என பல்வேறு புகார்கள் மக்கள் தரப்பில் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருக்கின்றன. அவ்வாறு வழங்கப்படுகின்ற பொருட்களில் விலை, expiry date ஆகியவை குறிப்பிடப்படாத பட்சத்தில் யாரிடம் புகார் தெரிவிக்க வேண்டும் என்பதே நம் வாசகரின் கேள்வி. இந்த கேள்வியை கோ-ஆபரேட்டிவ் ஊழியர் சங்கத்தலைவர் கிருஷ்ணமூர்த்தியிடம் முன்வைத்தோம். இது தொடர்பாக அவர் கூறியதாவது,


இதேமாதிரி வாசகர்கள் கேட்ட கேள்விகளின் அடிப்படையில் எழுதப்பட்ட சிறப்புக் கட்டுரைகளை வாசிக்க... இங்கே க்ளிக் செய்யவும்

“ரேஷன் கடைகளில் விற்கப்படும் பொருட்கள் எடை குறைவாக இருந்தாலோ, கூடுதல் விலைக்கு விற்கப்பட்டாலோ, காலாவதியான பொருட்களை விற்பனை செய்தாலோ, விலை Expiry date ஆகியவை குறிப்பிடப்படாமல் இருந்தாலோ உணவு பொருள் வழங்கல் துறை ஆணையரிடம் (எழிலகம்) புகார் அளிக்கலாம். அதற்காக தனி அலைபேசி எண்ணும் உள்ளது. 044-28583222 (உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை) என்ற இந்த எண்ணில் இதுகுறித்த புகார்களைத் தெரிவிக்கலாம்.

ரேஷன் கடை
ரேஷன் கடை

பொதுமக்கள் விலை அச்சிடப்படாத பாக்கெட் பொருட்களை வாங்கக்கூடாது. ஒருவேளை விலை, Expiry date ஆகியவை அச்சிடப்படவில்லை எனில் ரேஷன் கடைகளில் வெளியே உள்ள கரும்பலகையில் ஒரு கிலோ இவ்வளவு என்ற விலைப்பட்டியல் எழுதப்பட்டிருக்கவேண்டும். ஆனால் பெரும்பாலான கடைகளில் அவ்வாறு எழுதப்படுவதில்லை. மேலும் ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் இருப்பு இவ்வளவு, விலை இவ்வளவு என்ற பட்டியலும் கரும்பலகையில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். இதுதவிர புகார்கள் அளிக்கவேண்டிய தொலைபேசி எண்ணும் அக்கரும்பலகையில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இவை யாவும் பின்பற்றப்படுவதே இல்லை.

இந்த புகார்கள் ரேஷன் கடை ஊழியர்கள் மீது அளிக்கப்படாது. நுகர்பொருள் வாணிபக் கழகம் (Tamil Nadu Civil Supplies Corporation) என்ற அமைப்பே பொது விநியோகத் திட்டம், சிறப்பு பொது விநியோகத் திட்டம், மற்றும் மதிய உணவுத் திட்டம் ஆகியவற்றிற்கான அத்தியாவசியப் பொருட்களை கொள்முதல் செய்தல், சேமிப்பு செய்தல் மற்றும் இயக்கம் ஆகிய பணிகளை மேற்கொண்டு வருகிறது. அரிசி, பருப்பு மற்றும் வெங்காயம், தக்காளி போன்ற காய்கறிகள் ஆகியவற்றின் வெளிச்சந்தை விலையை நிர்ணயிப்பதற்காக தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் வாயிலாக பல்பொருள் அங்காடிகள் அமைத்து மேற்கூறிய பொருட்களை விற்பனை செய்கிறது. உணவுதுறை அமைச்சா் அவா்களை தலைவராகக் கொண்டு 11 இயக்குநர்களின் கீழ் இந்நிறுவனம் செயல்படுகிறது. மேலும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு மண்டல அலுவலகம் என மொத்தம் 33 மண்டலங்களில் செயல்பட்டு வருகிறது.

இதேமாதிரி உங்களுக்குத் தோன்றும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க!