தொழில்நுட்ப வளர்ச்சியால் கைகளில் ஸ்மார்ட் போன்கள் தவழ்ந்து கொண்டிருக்கும் இந்த காலக்கட்டத்திலும் புத்தகங்களும் அதை வாசிக்கும் ஆர்வமும் நம்மிடையே இருப்பது சிறப்பு. வாசிப்பு பல வாழ்க்கை அனுபவங்களை கற்றுத்தரும், அறிவாற்றலை இன்னும் தீட்டி மெருகேற்றும். அத்தனை சிறப்புடைய வாசிப்பை இந்த உலக புத்தகத் தினத்தன்று இன்னும் சில வாசகர்களிடையே எடுத்து செல்ல சில அனுபவமிக்க ஆளுமைகள் சில புத்தகங்களை பரிந்துரைத்திருந்தனர்.

இந்த ஆண்டு சென்னையில் 46-ஆவது புத்தக திருவிழா கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. அப்போது எழுத்தாளர். பெருமாள் முருகன், எழுத்தாளர். அழகிய பெரியவன், இயக்குநர். லிங்குசாமி மற்றும் இயக்குநர். கரு. பழனியப்பன் ஆகியோர் பரிந்துரைத்த புத்தகங்களை இங்கு வாசகர்களிடம் பகிர்கிறோம்.
எழுத்தாளர். பெருமாள் முருகன் :

1) டாக்டர். உ. வே. சாமிநாதன் நூலகத்தின் 'உ. வே. சாமிநாதையர் கடிதக் கருவூலம்' - பதிப்பாசிரியர். ஆ. இரா. வேங்கடாசலபதி
2) வம்சி பதிப்பகத்தின் 'பா. செயப்பிரகாசம் கதைகள்- இரண்டாம் தொகுப்பு '
3) ஜீரோ டிகிரி பதிப்பகம் வெளியிட்ட கவிஞர். பெருந்தேவியின் ' கவிதை பொருள்கொள்ளும் கலை'
4) காலச்சுவடு வெளியிட்ட தொ. பத்தினாதன் எழுதிய 'அந்தரம்'
5) தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் வெளியிட்டுள்ள 'பத்துப்பாட்டு'
எழுத்தாளர். அழகிய பெரியவன்:

1) மணல்வீடு பதிப்பகம் வெளியிட்ட சு. வெங்குட்டுவன் எழுதிய 'வெறுங்கால் நடை'
2) 'எதிர்வெளியீடு' வெளியிட்ட தமிழில் கே. நல்லதம்பியால் மொழிபெயர்க்கப்பட்ட கன்னட எழுத்தாளர் நேமிசந்த்ராவின் 'யாத்வஷேம்'.
3) நீலம் பதிப்பகத்தின் வ.கீதா எழுதிய 'சாதி, தலித்துகள், பெண்கள்'
4) 'எதிர்வெளியீடு' வெளியிட்ட தமிழில் இ. பா. சிந்தானால் மொழிபெயர்க்கப்பட்ட திருந்திர கே. ஜா வின் ' நாதுராம் கோட்சே: உருவான வரலாறும் இந்தியா குறித்த அவனது பார்வையும்'.
5) நீலம் பதிப்பகம் வெளியிட்ட ஆதவன் தீட்சண்யாவின் 'அலைமிகு கணங்கள்'
இயக்குநர். கரு. பழனியப்பன் :

1) எழுத்தாளர் வ. சு. ப மாணிக்கனார் எழுதிய 'உரைநடையில் திருக்குறள்'.
2) எழுத்தாளர். ஞா. தேவநேயப்பாவாணரின் 'திருக்குறள் -தமிழ் மரபுரை'
3) நாவலர். இரா. நெடுஞ்செழியன் எழுதிய 'திருக்குறள் தெளிவுரை '
4) திருக்குறள் - வ. உ. சிதம்பரனார் உரை
5) புலவர். மு. படிக்கராமு எழுதிய 'வள்ளுவ வளம் - ஆய்வு நூல் - 5 பாகங்கள்'
இயக்குநர். லிங்குசாமி
1) டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட்ட கவிஞர். வைரமுத்துவின் 'தமிழாற்றுப்படை'
2) அலைகள் வெளியீட்டகத்தின் ஜவஹர்லால் நேரு எழுதிய 'உலக சரித்திரம்'
3) கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்ட கவிஞர். புவியரசு மொழிபெயர்த்த மிகேய்ல் நேமியின் 'மிர்தானின் புத்தகம்'
4) சாகித்ய அகாதமி பதிப்பகத்தின் கி.அ. சச்சிதானந்தம் எழுதிய 'மௌனியின் சிறுகதைகள்'
5) டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட்ட பிருந்தா சாரதியின் 'மீன்கள் உறங்கும் குளம்'.