Published:Updated:

பெங்களூர்: தமிழர்களுக்கான முதல் புத்தகத் திருவிழா; விகடன் பிரசுரம் புத்தகங்களை அள்ளிச்செல்ல வாங்க!

விகடன் பிரசுரம் புத்தகங்கள்

பொன்னியின் செல்வன், வேள்பாரி, 27 நட்சத்திரக் கோவில்கள், அன்பே தவம், எந்நாடுடைய இயற்கையே போற்றி உட்பட 380க்கும் மேற்பட்ட தலைப்புகளில் வெளியான புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

பெங்களூர்: தமிழர்களுக்கான முதல் புத்தகத் திருவிழா; விகடன் பிரசுரம் புத்தகங்களை அள்ளிச்செல்ல வாங்க!

பொன்னியின் செல்வன், வேள்பாரி, 27 நட்சத்திரக் கோவில்கள், அன்பே தவம், எந்நாடுடைய இயற்கையே போற்றி உட்பட 380க்கும் மேற்பட்ட தலைப்புகளில் வெளியான புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

Published:Updated:
விகடன் பிரசுரம் புத்தகங்கள்

கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரின் உள்சூர் ஏரி அருகே, கர்நாடக தமிழ்ச்சங்கத்தின் கட்டடம் உள்ளது. இங்கு நேற்று முதல், தமிழ்ப் புத்தகத்திருவிழா நடந்து வருகிறது. கர்நாடக தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம், கர்நாடக தமிழ்ப் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில், தமிழர்களுக்காக முதல் முறையாக நடத்தப்படும் இத்திருவிழா வரும் ஜனவரி 1-ம் தேதி வரை நடக்கவிருக்கிறது.

காலை 11:00 மணி முதல் இரவு 8:00 மணி வரையில் நடக்கும் இத்திருவிழாவில், விகடன் குழுமம் சார்பில் பிரசுரிக்கப்பட்ட, பொன்னியின் செல்வன், வேள்பாரி, 27 நட்சத்திரக் கோவில்கள், அன்பே தவம், எந்நாடுடைய இயற்கையே போற்றி உட்பட, 380க்கும் மேற்பட்ட தலைப்புகளில் வெளியான புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

விகடன் பிரசுரங்களை பார்வையிடும் மக்கள்
விகடன் பிரசுரங்களை பார்வையிடும் மக்கள்

மேலும், இதர பத்திரிகை நிறுவனங்கள், வெளியீட்டாளர்கள் சார்பில் வெளியிடப்பட்ட புத்தகங்கள், எனக் கலை, தமிழ் இலக்கியம், கட்டுரை, சுயசரிதை, தொழில்நுட்பம், விவசாயம் உட்படப் பல தலைப்புகளில், 25 அரங்கங்கள் அமைக்கப்பட்டு புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் குஷிப்படுத்தவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தட்டாங்கல், தாயக்கட்டை, பம்பரம், நொண்டி உட்பட, பல தமிழர் மரபு விளையாட்டுக்கள் நடத்தப்படுகின்றன. மாணவர்களுக்கு, நூறு ரூபாய் தள்ளுபடியில் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.

திருவிழாவில் திருவள்ளுவர் சிலை.
திருவிழாவில் திருவள்ளுவர் சிலை.

நேற்று தொடக்க விழாவில், முன்னாள் இஸ்ரோ மைய இயக்குநர் மற்றும் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, பாபா அணு ஆராய்ச்சி கழக விஞ்ஞானி தவமணி, பெங்களூர் மாநகராட்சி சிறப்பு ஆணையர் இராம் பிரசாத் மனோகர், சிவாஜி நகர் எம்.எல்.ஏ ரிஸ்வான் அர்ஷத் உட்படப் பலர் பங்கேற்றனர்.

‘தாய்மொழியைக் கற்க வேண்டும்...’

இஸ்ரோ செயற்கைக்கோள் மைய முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாத்துரை நிகழ்ச்சியில், ‘‘கர்நாடக தமிழ் மக்களுக்காக, தமிழ் மக்களை உணர்வால் இணைக்கும் வகையில், முதல் முறையாக புத்தகத்திருவிழா நடப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மாணவர்கள் நம் தாய்மொழியான தமிழ் மொழியை மறக்கக்கூடாது; தமிழைக் கற்க அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அரசுப்பள்ளியில், தாய்மொழியில் படித்துதான் நான் விஞ்ஞானி ஆகியுள்ளேன்.

மயில்சாமி அண்ணாதுரை
மயில்சாமி அண்ணாதுரை

ஒருவரை ஒருவர் உணர்வுபூர்வமாக இணைப்பது தாய்மொழிதான். மற்ற மொழியில் வார்த்தையைத்தான் கடத்த முடியும், தாய்மொழியில் மட்டும்தான் உணர்வுபூர்வமாக விஷயங்களைக் கடத்த முடியும். வாசிப்பு வாயிலாகப் பல படைப்பாளிகள், புதிய கண்டுபிடிப்புகள் உருவாகின்றன" எனப் பேசினார்.