Published:Updated:

CBF 2023: "மின்னூல்களால் அச்சுப் புத்தகங்களுக்கு ஆபத்தில்லை!"- காலச்சுவடு கண்ணன் சுந்தரம்

சென்னைப் புத்தகக் காட்சி
News
சென்னைப் புத்தகக் காட்சி

"சிறிதும் அறிமுகம் இல்லாத பிற மொழி எழுத்தாளர்களை வாங்கி படிப்பதில் மக்களுக்கு சிறு தயக்கம் உள்ளது." - ‘காலச்சுவடு’ கண்ணன் சுந்தரம்

Published:Updated:

CBF 2023: "மின்னூல்களால் அச்சுப் புத்தகங்களுக்கு ஆபத்தில்லை!"- காலச்சுவடு கண்ணன் சுந்தரம்

"சிறிதும் அறிமுகம் இல்லாத பிற மொழி எழுத்தாளர்களை வாங்கி படிப்பதில் மக்களுக்கு சிறு தயக்கம் உள்ளது." - ‘காலச்சுவடு’ கண்ணன் சுந்தரம்

சென்னைப் புத்தகக் காட்சி
News
சென்னைப் புத்தகக் காட்சி
46-வது சென்னைப் புத்தகச் காட்சியையொட்டி பிரபல பதிப்பாளரான ‘காலச்சுவடு’ கண்ணன் சுந்தரம் உடன் ஒரு சிறிய நேர்காணல்.
காலச்சுவடு
காலச்சுவடு

உங்கள் தந்தையார் சுந்தர ராமசாமி பல்வேறு முக்கிய மொழிபெயர்ப்புகளைச் செய்துள்ளார். மொழிபெயர்ப்புக்குத் தற்போது இருக்கும் வெளியைப் பற்றிக் கூறுங்கள்.

"தமிழ் மொழியிலிருந்து பிற மொழிகளுக்கு, இந்திய மொழிகளிலிருந்து பிற உலக மொழிகளுக்கும் படைப்புகளைக் கொண்டு சேர்ப்பது என்பது சவாலான காரியம். 15 ஆண்டுகளுக்கு மேலாக மொழிபெயர்ப்பு படைப்புகளின் மீது தனிக் கவனம் செலுத்தி வருகிறோம். ஆனால், இது போதாது. பிற மொழி படைப்புகளைக் கண்டறிந்து அதைத் தமிழில் கொண்டு வருவதிலும், தமிழ் நூல்களைப் பிற மொழிக்குக் கொண்டு செல்வதிலும் அரசின் ஆதரவு இன்றியமையாதது. அதற்கேற்றவாறு, இந்தாண்டு பன்னாட்டுப் புத்தகக் காட்சியை நடத்தியிருக்கிறது தமிழக அரசு. இரண்டாவது, சிறிதும் அறிமுகமில்லாத பிற மொழி எழுத்தாளர்களை வாங்கிப் படிப்பதில் மக்களுக்குச் சிறு தயக்கம் உள்ளது என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும்."

தொழில்நுட்ப வளர்ச்சியால் வாசிப்பு பழக்கம் குறைந்திருக்கிறது என நினைக்கிறீர்களா?

"கேட்ஜெட்ஸின் வரவால் இளைய தலைமுறையினர் வாசிப்பு பழக்கம் குறைந்துவிட்டது என்று கூறுவதை நான் ஒத்துக்கொள்ள மாட்டேன். முன்பு எப்போதை விடவும் இளைஞர்கள் தற்போது அதிகமாகப் படிக்கிறார்கள். போன் முதலான கேட்ஜெட்ஸ் அவர்களுக்குப் பல புத்தகங்களை அறிமுகம் செய்கிறது. அதை அவர்கள் மின்னூலாகவும் படிக்கலாம். ஒரு புத்தகத்தின் உருவம் முக்கியம் அல்ல. உள்ளடக்கம்தான் முக்கியம்." 

காலச்சுவடு கண்ணன்
காலச்சுவடு கண்ணன்

மின்னூல்களின் வளர்ச்சி அச்சு நூல்களைப் பாதிக்குமா?

"அப்படிப் பாதிக்கும் என்று நான் நம்பவில்லை. பத்தாண்டுகளுக்கு முன்பே அச்சு நூல்களின் நிலை இனி அவ்வளவுதான் என்று கூறினார்கள். ஆனால் அப்படி நடக்கவில்லை. ஒரு தமிழர் வெளி மாநிலத்திலோ அல்லது வெளிநாட்டிலோ இருந்தால், அவர்கள் தமிழ்ப் புத்தங்களைப் படிக்க மின்னூல்கள்தான் ஒரே வழி. எனவே, அவை வாய்ப்புகளை ஏற்படுத்தத்தான் செய்கின்றன. அவற்றை நாம் வரவேற்கத்தான் வேண்டுமே தவிர, ஆபத்து என்று கருதிப் பயப்பட வேண்டிய அவசியமில்லை."