Published:Updated:

உணவும் குழந்தையும், கதையும் மண்ணில் வேண்டும்; மகாராஷ்டிரா பாடப்புத்தகத்தில் தமிழ்ச் சூழலியலாளர் கதை

கோவை சதாசிவம் எழுதிய சில்லுக்கோடு

கோவை சதாசிவம் எழுதிய சில்லுக்கோடு என்ற புத்தகத்தில் தமிழர்களின் மரபு விளையாட்டுகள், சுற்றுச்சூழல், பல்லுயிர்ப்பெருக்கம் தொடர்பாக 25 கதைகள் இடம் பெற்றுள்ளன. அதில் உள்ள கும்மாயம்-கும்மாயம் கதையே மகாராஷ்டிரா அரசின் தமிழ் வழிக் கல்வி பாடப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

உணவும் குழந்தையும், கதையும் மண்ணில் வேண்டும்; மகாராஷ்டிரா பாடப்புத்தகத்தில் தமிழ்ச் சூழலியலாளர் கதை

கோவை சதாசிவம் எழுதிய சில்லுக்கோடு என்ற புத்தகத்தில் தமிழர்களின் மரபு விளையாட்டுகள், சுற்றுச்சூழல், பல்லுயிர்ப்பெருக்கம் தொடர்பாக 25 கதைகள் இடம் பெற்றுள்ளன. அதில் உள்ள கும்மாயம்-கும்மாயம் கதையே மகாராஷ்டிரா அரசின் தமிழ் வழிக் கல்வி பாடப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

Published:Updated:
கோவை சதாசிவம் எழுதிய சில்லுக்கோடு

திருப்பூர் வீரபாண்டியைச் சேர்ந்த 61 வயதான சூழலியல் எழுத்தாளர் கோவை சதாசிவம். சுற்றுச்சூழல் தொடர்பாக பல்வேறு களப் பணிகள் மற்றும் பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இவர் எழுதிய சில்லுக்கோடு என்ற புத்தகத்தில் இடம்பெற்ற கும்மாயம் கதையே மகாராஷ்டிர அரசு, தங்கள் மாநிலத்தில் தமிழ்வழிக் கல்வி பயிலும் குழந்தைகளுக்கான பாடப் புத்தகத்தில் சேர்த்துள்ளது.

சில்லுக்கோடு புத்தகம்
சில்லுக்கோடு புத்தகம்

இதுகுறித்து கோவை சதாசிவம் நம்மிடம் பேசுகையில், ``மகாராஷ்டிரா அரசு தமிழ் வழிக் கல்வி பயிலும் 7-ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் கும்மாயம்-கும்மாயம் கதை இடம்பெற்றுள்ளது. 2017-ம் ஆண்டு எழுதிய சில்லுக்கோடு புத்தகத்தில் தமிழர்களின் மரபு விளையாட்டுகளும், சுற்றுச்சூழல், பல்லுயிர்ப்பெருக்கம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் 25 மரபு சார்ந்த விளையாட்டுக் கதைகள் இடம் பெற்றுள்ளன.

கொங்கு வட்டார வழக்கில் பருப்பு கடைய பயன்படுத்தும் மத்தை, கும்மாயம் என்றும், வரகு அரிசியும், அவரைப் பருப்பும் கொண்டு தயாரிக்கப்படும் கலவை சாதத்துக்கு கும்மாயம் என்றும் அழைப்பர். நன்கு கடைந்து குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் உணவை உப்பு, காரம் மற்றும் சோற்றின் பதம் உள்ளிட்டவற்றை தாய்தான் சரிபார்ப்பார். அதன் பின்னர் அந்தக் குழந்தையின் அருகில் இருக்கும் அண்ணனுக்கு ஒருவாய் தருவாள். தொடர்ந்து நிலாவுக்கு ஒருவாய் என்று சோற்றை வானை நோக்கி வீசுவாள். அந்தச் சோறு மேலே சென்று கீழே விழும். அவை எறும்புகள் உள்ளிட்டவைக்கு உணவாகும்.

கோவை சதாசிவம்
கோவை சதாசிவம்

குழந்தை சாப்பிட்டு முடித்ததும், அந்தப் பாத்திரத்தைக் கழுவி வீட்டின் மேல் ஊற்றுவாள். அவை காகங்கள் உள்ளிட்ட பறவைகளுக்கு உணவாகும். இப்படி ஒரு கவளச்சோற்றின் வாயிலாக, பல உயிர்கள் பசி ஆறுவதாக கதை முடிந்திருக்கும். சுற்றுச்சூழல் தொடர்பாகக் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய தேவை நமக்கு உள்ளது. இன்றைக்கு செல்போனில் வரும் வீடியோக்களைக் காண்பித்து குழந்தைகளுக்கு சோறூட்டுகிறார்கள்.

ஆனால், குழந்தையுடன் உரையாடி ஊட்டும்போது, அந்த உணவும் குழந்தையும், கதையும் மண்ணில் தொடர்ந்து மீட்டெடுக்கப்படுகிறது. தமிழர்களின் பண்பாடு மற்றும் மரபுசார்ந்த கதைகளை மீட்டெடுக்கும் நோக்கத்துடன், இந்தக் கதையை ஆசிரியர் `கலகல’ வகுப்பறை சிவா கொண்டுபோய் சேர்த்ததன் விளைவாக, கும்மாயம் கும்மாயம் கதை மகாராஷ்டிரா மாநிலத்தின் பாடப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது'' என்றார்.