Published:Updated:

பிரம்மபுத்ரா நதியில் வெள்ளம்: 7 லட்சம் மக்கள் பாதிப்பு!

விகடன் விமர்சனக்குழு
பிரம்மபுத்ரா நதியில் வெள்ளம்: 7 லட்சம் மக்கள் பாதிப்பு!
பிரம்மபுத்ரா நதியில் வெள்ளம்: 7 லட்சம் மக்கள் பாதிப்பு!
பிரம்மபுத்ரா நதியில் வெள்ளம்: 7 லட்சம் மக்கள் பாதிப்பு!

புதுடெல்லி: அசாமில் பிரம்மபுத்ரா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் 7 லட்சம் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அசாமில் உள்ள பிரம்மபுத்ரா நதியின் நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. மாநிலத்தில் மழை காலமும் தொடங்கி விட்டது. இதனால் பிரம்மபுத்ரா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக வெள்ளம் அபாய கட்டத்தை தாண்டி செல்கிறது. இதனால் தேமாஜி, லக்கிம்பூர், ஜோர்ஹாட், நாகான், காம்ரூப், பர்பெடா ஆகிய 6 மாவட்டங்களில் வெள்ளம் புகுந்தது. அங்குள்ள ஏராளமான கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. தொடர்ந்து அங்கு வெள்ள நிலைமை மோசமாகி வருகிறது.

இந்த பகுதியில் வசிக்கும் 7 லட்சம் மக்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்கள் கடந்த சில நாட்களாக உணவுப் பொருட்கள் கிடைக்காமல் தவிக்கிறார்கள். வெள்ளச்சேத விவரங்கள் பற்றி தகவல் இல்லை. தொடர்ந்து மழை பெய்வதால் மீட்பு பணிகள் நிவாரணப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. 6 மாவட்டங்கள் தீவு போல் காட்சி அளிக்கிறது. காசிரங்கா தேசிய பூங்காவும் வெள்ளத்தில் மிதக்கிறது.

இதேபோல் பக்கத்து மாநிலமான சிக்கிமிலும் பலத்த மழை பெய்கிறது. இங்கும் வெள்ள நிலைமை மோசமாக இருக்கிறது. வடக்கு சிக்கிம் மற்ற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. இங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் 3 பொதுமக்கள், ஒரு என்ஜினீயர், தொழிலாளர்கள் என 11 பேர் பலியானார்கள்.

வடக்கு சிக்கிமில் டீஸ்டா ஹைடல் திட்டப்பகுதியில் தொழிலாளர்கள் தங்கி இருந்த கூடாரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. 8 வீடுகள், ஒரு கட்டிடமும் இடிந்து விழுந்து தரைமட்டமானது. சாலைகள், பாலங்கள் கடுமையாக சேதம் அடைந்தது. மங்கன் என்ற இடத்தில் ஒரு குடும்பம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அவர்களை தேடும் பணி நடக்கிறது.