Published:Updated:

உத்தரகாண்டில் மீட்புப் பணிகள் இன்றுடன் நிறைவு: தமிழர்கள் 10 பேரின் கதி என்ன?

விகடன் விமர்சனக்குழு

உத்தரகாண்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் இன்றுடன் நிறைவடையும் நிலையில், தமிழகத்தை சேர்ந்த 10 பேர் இதுவரை மீட்கப்படவில்லை. அவர்களின் கதி என்ன என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லாததால் உறவினர்கள் கவலையில் உள்ளனர்.

உத்தரகாண்ட் வெள்ளப் பெருக்கில் சிக்கி இதுவரை ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 95 பக்தர்கள் மீட்கப்பட்டு உள்ளனர். 560 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 400க்கும் மேற்பட்டோரை காணவில்லை.

அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் துணைத் தலைவர் சசிதர் ரெட்டி தெரிவித்துள்ளார்.

##~~##
பத்ரிநாத் பகுதியில் சிக்கியுள்ள சுமார் 2, 500 பேரை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், தொடர்மழைக்கு இடையே மீட்புப் பணி நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, உத்ரகாண்டில் மீட்கப்பட்ட 23 தமிழர்கள் இன்று டெல்லி வர உள்ளனர்.விழுப்புரத்தைச் சேர்ந்த யாத்ரீகர்கள் 10 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அவர்களை பற்றி எந்த தகவலும் இல்லாததால் உறவினர்கள் கவலையில் உள்ளனர்.