Published:Updated:

ஆந்திராவில் திடீர் மழைக்கு 12 பேர் பலி!

Vikatan Correspondent
ஆந்திராவில் திடீர் மழைக்கு 12 பேர் பலி!
ஆந்திராவில் திடீர் மழைக்கு 12 பேர் பலி!
ஆந்திராவில் திடீர் மழைக்கு 12 பேர் பலி!

ஹைதராபாத்: ஆந்திராவில் நேற்றிரவு திடீரென  பெய்த கனமழைக்கு 12 பேர் பலியாகி உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

வாரங்கல் மாவட்டத்தில் 7 பேரும், நிசாமாபாத் மாவட்டத்தில் 3 பேரும், ஆனந்தப்பூர் மாவட்டத்தில் 2 பேரும் உயிரிழந்துள்ளதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.

மேலும், பலத்த மழை காரணமாக 14 மாவட்டங்களில் விவசாய பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும், 1,200க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் ஆந்திர அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசு அதிகாரிகள் நிவாரணப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.