Published:Updated:

டெல்லியில் நள்ளிரவில் நிலநடுக்கம்: சேதம் ஏதுமில்லை

Vikatan Correspondent

புதுடெல்லி, செப்.8,2011

டெல்லி நகரில் புதன்கிழமை நள்ளிரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. மக்கள் பீதியில் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். எனினும், சேதம் ஏதும் ஏற்படவில்லை. ##~~##

டெல்லியில் இரவு 11.28 மணி அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் சுமார் 10 நொடிகள் உணரப்பட்டன. ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவாகியிருந்தது.

ஹரியானாவின் குர்காவ், உத்தரபிரதேசத்தின் நொய்டா மற்றும் காஸியாபாத்திலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

டெல்லியில் பெரும்பாலான பகுதிகளில் நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் இரவு நீண்ட நேரம் வெளியிலேயே உலாவி வந்தனர். நகர் முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் உயிருக்கோ, உடமைக்கோ எவ்வித சேதமும் ஏற்படவில்லை. முன்னெச்சரிக்கையாக மீட்புப் படையினர் தயார் நிலையில் இருந்தனர்.