Published:Updated:

பீகார், மேற்கு வங்காளத்தில் இன்று மீண்டும் நிலஅதிர்வு!

பீகார், மேற்கு வங்காளத்தில் இன்று மீண்டும் நிலஅதிர்வு!
பீகார், மேற்கு வங்காளத்தில் இன்று மீண்டும் நிலஅதிர்வு!

பீகார், மேற்கு வங்காளத்தில் இன்று மீண்டும் நிலஅதிர்வு!

பீகார், மேற்கு வங்காளத்தில் இன்று மீண்டும் நிலஅதிர்வு!

புதுடெல்லி: பீகார் மற்றும் மேற்கு வங்காளத்தில் இன்று மீண்டும் நிலஅதிர்வு ஏற்பட்டதையடுத்து, அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

நேபாளத்தில் நேற்று முன்தினம் நடந்த நிலநடுக்கத்தில் சுமார் 4,000 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 6,500க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் ஏராளமானோர் கை, கால் உள்ளிட்ட உடல் உறுப்புகளை இழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதேபோல், நேற்று முன்தினம் இந்தியாவில் பீகார், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட இடங்களிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 60 பேர் பலியாகி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், நேற்றும் நேபாளத்தின் பல்வேறு பகுதிகளில் நிலஅதிர்வு ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 6.7ஆக பதிவான இந்த நிலஅதிர்வு காரணமாக அப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர்.

இதேபோல், கிழக்கு டெல்லியிலும் நேற்று மீண்டும் நில அதிர்வு உணரப்பட்டது.. இதையடுத்து, அங்கு மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மேலும், உத்தர பிரதேசத்தின் சில பகுதிகளிலும், ஒடிசாவின் புவனேஸ்வர், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிலும் நிலஅதிர்வு உணரப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், இன்று (27அம் தேதி) பீகார், மேற்கு வங்காளம் மாநிலங்களில் மீண்டும் நிலஅதிர்வு ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.1ஆக பதிவான இந்த நிலஅதிர்வால் அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

அடுத்த கட்டுரைக்கு