Published:Updated:

டெல்லி, வட மாநிலங்களில் நிலநடுக்கம்

புதுடெல்லி: டெல்லியில் இன்று மதியம் 1.10 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. வட இந்தியாவில் பல பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

ரிக்டர் அளவில் அளவில் 5,2 ஆக பதிவான இந்த நடுக்கத்தால் சேதம் ஏதும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவித்தன.

ராஜஸ்தான், ஹரியானா, உத்தரபிரதேசம், பஞ்சாப், இமாச்சல் பிரதேசம் முதலான பகுதிகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

டெல்லியில் இருந்து 33 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகதூர் நகரில், பூமிக்கு அடியில் 20 கிலோமீட்ட ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு டெல்லியில் வெகுவாக உணரப்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள், அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து அலறியடித்துக்கொண்டு வெளியேறினர்.