Election bannerElection banner
Published:Updated:

அவ்வை சண்முகி பாணியில் தற்கொலை முயற்சி..! காமெடியில் முடிந்த க்ளைமேக்ஸ்

தமிழகம் முழுவதும்  நிலவி வரும் வறட்சியால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. ஆனால்  சென்னையில் ஒருவரின் உயிரைக் காப்பாற்றியது இந்தக் கொடிய வறட்சிதான் என்று சொன்னால் நம்புவீர்களா? மேலே படியுங்கள்...

சென்னை அடையாற்றுப் பாலத்து மேல் நேற்றிரவு 11 மணியளவில் திடீரென மக்கள் கூட்டம்  அதிகமாக இருந்தது. இளைஞர் ஒருவர் பாலத்தின் மேல் ஏறி அடையாற்றில் குதித்து, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதுதான் இந்தக் கூட்டம் கூடியதற்குக் காரணம். இளைஞரின் நல்ல நேரம் ஆற்றில் முட்டியளவு தண்ணீர்  மட்டுமே இருந்துள்ளது. 'அவ்வை சண்முகி' திரைப்படத்தில் மீனாவின் தற்கொலை முயற்சி தோல்வியில் முடிந்தது போன்று இந்த இளைஞரின் தற்கொலை முயற்சியும் தோல்வியில் முடிந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் வறட்சியால் ஆற்றில் நீர் வற்றிப்போனதுதான். இந்தக் காட்சியை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்துப் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு