Published:Updated:

செய்தித்தாள்களின் கீழே வண்ணப் புள்ளிகள் எதற்காக அச்சிடப்படுகின்றன? | Doubt of Common Man

Four Coloured dots printed at the bottom of a newspaper
News
Four Coloured dots printed at the bottom of a newspaper

அந்தப் புள்ளிகள் ஏதாவது குறையுடன் இருந்தால், அதாவது தெளிவில்லாமலோ, வரிசை மாறியிருந்தாலோ அல்லது ஒன்றின் மீது மற்றொன்று இருந்தாலோ, அந்தத் தாள் சரியாக அச்சிடப்படவில்லை என்று எளிதாக அறிந்து கொள்ளலாம்.

விகடனின் Doubt of Common Man பக்கத்தில் சூரிய குமார் என்ற வாசகர், "செய்தித்தாள்களின் கீழே நான்கு நிற வண்ணப் புள்ளிகள் அச்சிடப்பட்டிருக்கின்றனவே, எதற்காக?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே.
doubt of common man
doubt of common man

தினமும் நாம் எழுந்ததும் காலையில் செய்யும் முக்கியமான செயல்களில் ஒன்று செய்தித்தாள் வாசிப்பது. செய்தித்தாளை வாசித்துக்கு கொண்டிருக்கும் போது அதன் கீழே நான்கு வண்ணப் புள்ளிகள் வரிசையாக அச்சிடப்பட்டிருப்பதைப் பார்த்திருப்போம். அது எதற்காக என்று யோசித்திருக்கிறோமா? நமது வாசகர் ஒருவருக்கு அது எதற்காக என்ற சந்தேகம் எட்டிப் பார்த்துள்ளது. அதனை மேற்கூறிய கேள்வியாக நமது டவுட் ஆஃப் காமன் மேன் பக்கத்தில் கேட்டிருந்தார்.

செய்தித்தாள்களின் கீழே அச்சிடப்பட்டிருக்கும் நான்கு வண்ணப் புள்ளிகள்
செய்தித்தாள்களின் கீழே அச்சிடப்பட்டிருக்கும் நான்கு வண்ணப் புள்ளிகள்

செய்தித்தாள்களின் கீழே இருக்கும் அந்த நான்கு வண்ணங்களையும் CMYK என்ற எழுத்துக்களால் குறிக்கிறார்கள். C - Cyan (Blue), M - Magenta (Pink), Y - Yellow, K - Black ஆகிய நான்கு வண்ணங்களை இந்த நான்கு எழுத்துக்களும் குறிக்கின்றன. செய்தித்தாள்களில் பல வண்ணங்கள் இடம்பெறும். இந்த நான்கு வண்ணங்களையும் குறிப்பிட்ட சதவிகிதத்தில் சேர்க்கும்போது எந்த நிறத்தையும் பெற முடியும். ஒரு செய்தித்தாளில் நாம் பார்க்கும் அனைத்து வண்ணங்களும் இந்த நான்கு வண்ணங்களின் கலவைதான். நாம் இந்த நான்கு வண்ணங்களும் தனித்தனியாக ஒரு தட்டில் ஊற்றப்பட்டு பின்னர் ஒரே புள்ளியில் இணைந்து நமக்கு விரும்பிய வண்ணம் உருவாக்கப்படும்.

செய்தித்தாள் அச்சிடப் பயன்படுத்தப்படும் வண்ணங்கள்
செய்தித்தாள் அச்சிடப் பயன்படுத்தப்படும் வண்ணங்கள்

ஒரு நாளில் லட்சக்கணக்கான செய்தித்தாள்கள் தினம்தோறும் அச்சிடப்படுகின்றன. ஒரு மணி நேரத்திற்கு மட்டும் 90,000 செய்தித்தாள்களுக்கு மேல் அச்சிடப்படுகின்றன. வண்ணக்கலவையை உருவாக்குவதற்கான மேற்கூறிய செய்முறையில் ஏதேனும் குழப்பம் ஏற்பட்டால் மொத்த வண்ணக்கலவைகளும் மாறி ஒரு செய்தித்தாளில் உள்ள வண்ணம் அனைத்தும் மாறிவிட வாய்ப்புகள் இருக்கின்றன. ஒரு மணி நேரத்திற்கு 90,000 செய்தித் தாள்களுக்கு மேல் அச்சிடப்படுவதால், அவற்றை நாமாக சரிபார்ப்பதும் இயலாத காரியம். இந்த இடத்தில்தான் அந்த நான்கு வண்ணப் புள்ளிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு செய்தித்தாளில் அந்த நான்கு வண்ணப் புள்ளிகளும் சரியான வரிசையில் சரியான அளவில் மங்கலாக இல்லாமல் தெளிவாக இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் அந்தப் புள்ளிகள் ஏதாவது குறையுடன் இருந்தால், அதாவது தெளிவில்லாமலோ, வரிசை மாறியிருந்தாலோ அல்லது ஒன்றின் மீது மற்றொன்று இருந்தாலோ அந்தத் தாள் சரியாக அச்சிடப்படவில்லை என்று எளிதாக அறிந்து கொள்ளலாம். இதற்காகத்தான் அந்த நான்கு வண்ணப் புள்ளிகள் செய்தித் தாள்களில் அச்சிடப்படுகின்றன.

இதேபோல உங்களுக்குத் தோன்றும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்கள்!

doubt of common man
doubt of common man