Published:Updated:

அடுத்த ஆண்டு முதல் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத பட்டாசுகள்..! மத்திய அமைச்சர் அறிவிப்பு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அடுத்த ஆண்டு முதல் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத பட்டாசுகள்..! மத்திய அமைச்சர் அறிவிப்பு
அடுத்த ஆண்டு முதல் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத பட்டாசுகள்..! மத்திய அமைச்சர் அறிவிப்பு

அடுத்த ஆண்டு முதல் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத பட்டாசுகள்..! மத்திய அமைச்சர் அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

'சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்காத பட்டாசுகள் அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும்' என்று அறிவித்திருக்கிறார், மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன். 

சென்னையில், கடந்த நான்கு நாள்களாக நடைபெற்ற இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவில் கலந்துகொண்டு பேசிய மத்திய அமைச்சர், "சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்காத பட்டாசுகள் தயாரிப்பதுகுறித்து அறிவியல் அறிஞர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார்கள். இந்தப் பட்டாசுகள் அறிமுகமாகும்போது, மக்களின் உடல்நலன் மட்டுமல்லாது, பொதுச் சுகாதாரமும் சுற்றுச்சூழல் மாசுபடுவதையும் தடுக்கலாம். இந்தப் புதிய முயற்சியின்மூலம் பட்டாசு விற்பனையை நம்பி உள்ள வணிகர்கள், இனி பாதிக்கப்படுவதில் இருந்து காக்கப்படுவார்கள்" என்றும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார், அமைச்சர் ஹர்ஷவர்தன். 

"தற்போது 250-க்கும் மேற்பட்ட தொழில்நுட்பங்களை மத்திய அறிவியல் ஆய்வுக்கூடங்கள் உருவாக்கியிருக்கின்றன. குறுகிய காலத்தில் உரிய அனுமதிக்குப் பின்னர், பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வழங்கப்படும்" என்று சொல்லியிருக்கிறார். 

கடந்த வாரம் உச்ச நீதிமன்றம், தலைநகர் புதுடெல்லியில் பட்டாசு வெடிப்பதன்மூலம் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்துவதால், பட்டாசு விற்பனைக்குத் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிகழ்ச்சியில், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு கலந்துகொண்டு, 'இந்தியாவின் வளர்ச்சியில் அறிவியல் தொழில்நுட்பம் பல்லாண்டுகளாக முக்கியப் பங்காற்றிவருகிறது. இந்தப் பங்கேற்பையும் வளர்ச்சியையும் இளைஞர்கள் தொடர்ந்து அதிகப்படுத்திட முயற்சிசெய்ய வேண்டும்' என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு