Published:Updated:

புயல்: அலுவலகம் சென்றோர் வீடு திரும்புமாறு அறிவுறுத்தல்!

விகடன் விமர்சனக்குழு
புயல்: அலுவலகம் சென்றோர் வீடு திரும்புமாறு அறிவுறுத்தல்!
புயல்: அலுவலகம் சென்றோர் வீடு திரும்புமாறு அறிவுறுத்தல்!
புயல்: அலுவலகம் சென்றோர் வீடு திரும்புமாறு அறிவுறுத்தல்!

சென்னை: 'நீலம்’ புயல் தாக்குதல் அபாயம் இருப்பதால் சென்னையில் அலுவலகம்  சென்றோர் விரைவாக வீடு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை உள்ளிட்ட தமிழக கடலோர மாவட்டங்களை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் நீலம்  புயல், தென்கிழக்கு வங்ககடலில் சென்னையில் இருந்து 250 கி.மீ. தொலைவிலிருந்து  தமிழக கடற்கரை நோக்கி நகர்ந்து வந்துகொண்டிருக்கிறது.

##~~##
கடலூருக்கும், நெல்லூருக்கும் இடையே கரை கடக்க உள்ள இப்புயல்,சென்னை அருகே  கடக்கும்போது மணிக்கு 90 முதல் 110 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என  வானிலை மையம் எச்சரித்துள்ளது.
எனவே,சென்னையில் தாழ்வான பகுதியில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு  செல்லுமாறும், அலுவலகம் சென்றோர் விரைவில் வீடு திரும்புமாறும் சென்னை  மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் அறிவுறுத்தி உள்ளார்.

மேலும் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

வீடு திரும்பலாம்: ஜெயலலிதா

இந்நிலையில் புயல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் அனைத்து அரசு அலுவல்க ஊழியர்களும் வீடு திரும்பலாம் என்று ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்டார்.மேலும் தனியார் நிறுவன ஊழியர்களும் வீடு திரும்புமாறு அவர் அறிவுறுத்தி உள்ளார்.

நீதிமன்றங்களுக்கு விடுமுறை

இதனிடையே மழை மற்றும் புயல் அச்சுறுத்தல் காரணமாக சென்னையில் உள்ள நீதிமன்றங்களுக்கு இன்று அரை நாள் விடுப்பு விடப்பட்டுள்ளது.