Published:Updated:

இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

விகடன் விமர்சனக்குழு
இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

சென்னை: சென்னை உள்ளிட்ட அனைத்து கடலோர மாவட்டங்களுக்கும் இன்று  பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலம் புயல் நேற்று மாலை மாமல்லபுரம் அருகே மலை 4.45 மணி அளவில் கரை கடந்தது.

##~~##
  முன்னதாக நேற்று மாலை புயல்  தொடர்பாக அதிகாரிகளுடன்  ஆலோசனை நடத்திய  முதலமைச்சர் ஜெயலலிதா, அரசு ஊழியர்கள்  மாலை 3 மணிக்கே வீடு திரும்பலாம் என அறிவித்தார்.
அத்துடன் தனியார் நிறுவன ஊழியர்களும் வீடு திரும்ப அவர் அறிவுறுத்தினார்.
மேலும் சென்னை உள்ளிட்ட அனைத்து கடலோர மாவட்டங்களிலும் வியாழக்கிழமை ( இன்று ) பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாகவும் அவர் அறிவித்திருந்தார்,

அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து கடலோர மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிக்ளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.