Published:Updated:

பிளாஸ்டிக் கப்புகள் பறிமுதல்..! சேலம் மாநகராட்சி ஆணையாளர் அதிரடி

பிளாஸ்டிக் கப்புகள் பறிமுதல்..! சேலம் மாநகராட்சி ஆணையாளர் அதிரடி
பிளாஸ்டிக் கப்புகள் பறிமுதல்..! சேலம் மாநகராட்சி ஆணையாளர் அதிரடி

பிளாஸ்டிக் கப்புகள் பறிமுதல்..! சேலம் மாநகராட்சி ஆணையாளர் அதிரடி

சேலம் மாநகராட்சியால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர்கள் தொடர்ந்து கடைகளில் விற்பனை செய்து வந்ததையடுத்து அம்மாநகாட்சி சுகாதாரத் துறையினர் ஆய்வுகளை மேற்கொண்டு ஒரு லட்சம் மதிப்புடைய பிளாஸ்டிக் டம்ளர்களைப் பறிமுதல் செய்தனர். 

இதுப்பற்றி சேலம் மாநகராட்சி ஆணையாளர் சதீஷ், ''சேலம் மாநகராட்சி திடக்கழிவு சட்டம் 2016 அடிப்படையில் பிளாஸ்டிக் கப்புகள் தடை செய்யப்பட்டுள்ளது. அதனால் இதனை பறிமுதல் செய்து மறுச்சுழற்சிக்கு அனுப்ப இருக்கிறோம். குறிப்பிட்ட மைக்ரான்களுக்கு குறைவாக தயாரிக்கப்பட்டுள்ளதால் இது தடை செய்யப்பட்ட பொருள் ஆகும்.

சேலம் செவ்வாய்ப்பேட்டைப் பகுதியில் உள்ள கடைகளில் இந்தப் பிளாஸ்டிக் கப்புகள் பறிமுதல் செய்யபட்டுள்ளது. இது 1/2 டன் எடை உள்ளது. இதன் மதிப்பு சுமார் ஒரு லட்சம் இருக்கும். பொதுமக்களுக்கும், வணிகர்களுக்கும் அன்பான வேண்டுகோள். இந்த பிளாஸ்டிக் கப்புகளை யாரும் பயன்படுத்த வேண்டும். இது உடலுக்கு கேடு விளைவிப்பதோடு மழைக் காலங்களில் சாக்கடைகளை விழுந்து தண்ணீர் போகாமல் அடைத்துக் கொள்ளுவதால் பெரும் இன்னலுக்கு ஆளாகிறோம். அதனால் நீங்கள் எங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும்.

இதுப்பற்றி விளம்பரமும், செய்தித் தாள்களிலும் ஏராளமான அறிவிப்புகள் செய்து விட்டோம். மீறி இதனை விற்பனை செய்பவர்கள்  சட்டப்படி தண்டிக்கப்படுவதோடு அபராதமும் விதிக்கப்படும். சேலம் மாநகராட்சியில் இந்தப் பிளாஸ்டிக் கப்புகளை உற்பத்தி செய்யும் ஆலைகள் இல்லை. மாநகராட்சி எல்லையைத் தாண்டி இருக்கின்ற பிளாஸ்டிக் கப்புகள் தயாரிக்கும் ஆலைகளை மூட முறையாக நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு