Published:Updated:

கன்னியாகுமரியில் பிளாஸ்டிக் குல்பி ஐஸ் விற்பனையா? பொதுமக்கள் ஆவேசம்

முக்கியமான சுற்றுலா இடமான கன்னியாகுமரியில் ஐய்யப்ப பக்தர்கள் சீசன் தற்போது களை கட்டியுள்ளது. அதனால் தென் மாநிலங்களில் இருந்து அதிகமான ஐய்யப்ப பக்தர்கள் கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலையில் சுவாமி அய்யப்பனை தரிசித்து விட்டு கன்னியாகுமரிக்கு வருகின்றனர்.

இதனால் கன்னியாகுமரி முழுவதும் சாலையோரங்களில் சிறு வியாபாரிகள் துணிகள், விளையாட்டுப் பொருட்கள், வீட்டுக்கு தேவையான பொருட்களை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். அதேப்போல் வட மாநிலத்தைச் சேர்ந்த சிலர் சைக்கிள் மூலம் குல்பி ஐஸ் விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

கன்னியாகுமரியில் பிளாஸ்டிக் குல்பி ஐஸ் விற்பனையா? பொதுமக்கள் ஆவேசம்

இந்நிலையில் சுற்றுலாப் பயணிகள் சிறுகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அந்த ஐஸ்சை வாங்கிச் சாப்பிடுகின்றனர். அப்பகுதியைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் குல்பி ஐஸ்சை வாங்கிச் சாப்பிட்டார். ஆனால் அந்த குல்பி ஜஸ் கரையாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அவர் அதை அப்பகுதியில் தூக்கி போட்டுவிட்டார். சில மணி நேரம் ஆகியும் அது கரையவில்லை. உடனே அவர் எடுத்து பார்த்த போது அதில் பிளாஸ்டிக் அடங்கிய கெமிக்கல் கலப்படம் செய்ப்பட்டதாக தெரிய வந்தது.

இதனால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள்,  வியாபாரிகள் சிலர் அந்த ஐஸ் வியாபாரியைப் பிடித்து அவர் வைத்திருந்த பெட்டியில் பார்த்தபோது ஏராளமான ஐஸ்கள் இருப்பதைக் கண்டு அவைகளை ரோட்டில் கொட்டினார்கள். பின்னர் அந்த வியாபாரியை சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மேலும் அவரிடம் இந்த ஐஸ் எப்படி தாயாரிக்கப்படுகிறது. இதில் என்ன கலப்படம் செய்யப்படுகிறது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது

அடுத்த கட்டுரைக்கு