Published:Updated:

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு; கர்நாடகம் திடீர் நடவடிக்கை

பெங்களூரு: உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரியிலிருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் உத்தரவிட்டுள்ளார்.

கிருஷ்ணசாகர் அணையிலிருந்து வினாடிக்கு 2000 கன அடி நீர் முதலில் திறக்கப்பட்டுள்ளதாகவும், பின்னர் படிப்படியாக 8000 கன அடியாக அதிகரிக்கப்படும் என்றும் ஷெட்டர் இன்று ஹூப்ளியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தண்ணீர் திறந்து விடப்பட்டிருப்பதாகவும், திங்கட்கிழமை மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக தமிழக டெல்டா பகுதிகளில் கருகி வரும் சம்பா பயிர்களைக் காப்பாற்ற உடனடியாக 2.44 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இந்த உத்தரவை அமல்படுத்த தாமதம் செய்து வந்த கர்நாடகம், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தியது.

இதையடுத்து உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து,  மறுசீராய்வு மனு தாக்கல் செய்யவும் முடிவு செய்திருந்தது.

விவசாயிகள் கவலை

திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் தமிழக எல்லையைத் தொட இரண்டு நாட்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. தற்போது கடும் வெயிலும், காவிரியில் வறட்சியும் உள்ளதால் திறந்து விடப்படும் தண்ணீரில் பெருமளவு வீணாக வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.