Published:Updated:

7000 ஏக்கர் அர்ஜென்டினா காடுகளை அழித்து ஸ்ப்ரைட் உற்பத்தி... பணிந்தது கோகோ கோலா!

7000 ஏக்கர் அர்ஜென்டினா காடுகளை அழித்து ஸ்ப்ரைட் உற்பத்தி... பணிந்தது கோகோ கோலா!

ஸ்டெர்லைட் ஆகட்டும், கொடைக்கானல் மெர்குரி ஆலை ஆகட்டும், இந்தக் குளிர்பானத் தயாரிப்புப் பிரச்னை ஆகட்டும். அங்கு வாழும் மக்களின் எண்ணங்களுக்கும், அவர்களின் தேவைகளுக்கும் மதிப்பளிக்க வேண்டியது அவசியம் அல்லவா? மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யாத எதையும் எப்படி முன்னேற்றம் என்று கருத்தில் கொள்ள முடியும்?

7000 ஏக்கர் அர்ஜென்டினா காடுகளை அழித்து ஸ்ப்ரைட் உற்பத்தி... பணிந்தது கோகோ கோலா!

ஸ்டெர்லைட் ஆகட்டும், கொடைக்கானல் மெர்குரி ஆலை ஆகட்டும், இந்தக் குளிர்பானத் தயாரிப்புப் பிரச்னை ஆகட்டும். அங்கு வாழும் மக்களின் எண்ணங்களுக்கும், அவர்களின் தேவைகளுக்கும் மதிப்பளிக்க வேண்டியது அவசியம் அல்லவா? மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யாத எதையும் எப்படி முன்னேற்றம் என்று கருத்தில் கொள்ள முடியும்?

Published:Updated:
7000 ஏக்கர் அர்ஜென்டினா காடுகளை அழித்து ஸ்ப்ரைட் உற்பத்தி... பணிந்தது கோகோ கோலா!

வெயிலின் தாக்கத்தைப் பொறுக்க முடியாமல் நிற்கும் இந்தக் கோடைக்காலத்தில், பார்க்கும் இடங்களிலெல்லாம் குளிர்பானங்களை வாங்கிக் குடித்துக் கொண்டிருக்கிறோம். அத்தகைய குளிர்பானங்களில் ஒன்றுதான் ஸ்ப்ரைட். நாம் தற்போது குடித்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு ஸ்ப்ரைட் பாட்டிலையும் தயாரிப்பதற்கு இதுவரை அர்ஜென்டினா அரசாங்கத்தால் பாதுகாக்கப்படும் காடுகளில் 7400 ஏக்கர் பரப்பளவினை அழித்துள்ளது கோகோ கோலா நிறுவனம்.

2007 ம் ஆண்டு அர்ஜென்டினாவைச் சேர்ந்த 1 கோடியே 50 லட்சம் மக்களின் கையெழுத்தோடு அந்நாட்டு அரசாங்கத்திடம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அளித்த மனுவைத் தொடர்ந்து அந்த ஆண்டில் தேசிய வனப் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி அந்நாட்டின் 80% வனப்பகுதி அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. அந்தப் பகுதிகளில் காடுகளை அழிப்பதும், அங்குள்ள பல்லுயிர்ச் சூழலுக்குப் பங்கம் விளைவிப்பதும் சட்டவிரோதமானது.

2016 ம் ஆண்டில்தான் கோகோ கோலா நிறுவனம் நீடித்த நிலையான வளர்ச்சிக்குத் தகுந்தவாறு இயற்கை வளங்களைச் சீர்குலைக்காமல் தங்கள் தயாரிப்பினை மேற்கொள்வோமென உத்தரவாதம் அளித்து அறிக்கை வெளியிட்டது. அதன் தயாரிப்பான ஸ்ப்ரைட் குளிர்பானத்தைத் தயாரிப்பதற்குத் தேவையான எலுமிச்சைச் சாற்றினை விநியோகிப்பது அர்ஜென்டினாவைச் சேர்ந்த லா மொரெலாஜா (La Morelaja) என்ற ஓர் உள்ளூர் நிறுவனம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஸ்ப்ரைட் தயாரிப்புக்கு எலுமிச்சைச் சாற்றினை விநியோகிக்கும் அந்நிறுவனம் அந்நாட்டின் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் சுமார் 7400 ஏக்கர் பரப்பளவைச் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துத் தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டு அங்கே இருந்த மரங்களை அழித்து எலுமிச்சைத் தோட்டங்களை உருவாக்கி கோகோ கோலா நிறுவனத்துக்குக் கொடுத்துக்கொண்டிருக்கிறது. அவர்கள் ஆக்கிரமித்த வனப்பகுதி முழுவதும் பிரேசில், அர்ஜென்டினா, பொலிவியா போன்ற நாடுகளில் மட்டுமே இருக்கும் சாக்கோ (Chaco Forests) மற்றும் யுங்கா (Yunga Forests) காடுகளும் அந்தக் காடுகளுக்கு இடையே இருக்கும் தொடர்புக் காடுகளுமே. 2013 ம் ஆண்டிலிருந்து இது தொடர்பாக அந்த நிறுவனத்தோடு பேச்சுவார்த்தை நடத்திய கிரீன்பீஸ் சுற்றுச்சூழல் அமைப்பு 2016, 2017 என்று தொடர்ச்சியாக ஸ்ப்ரைட் நிறுவனத்திடமும் தொடர்பு கொண்டு இதுபற்றித் தெரியப்படுத்தியது. ஆனால், அந்நிறுவனம் அதற்கான விளைவுகளைப் பற்றிச் சிந்திக்காமல் மௌனமாகி விட்டது. இதை எதிர்த்து `கிரீன்பீஸ்’ அமைப்பு தொடர்ச்சியாகப் போராடிக்கொண்டிருக்கிறது.

PC: greenpeace.org 

பொறுப்புஉணர்வும், அதிகாரமும் எதிரெதிர் திசைகளில் இருக்கின்றனவோ என்றே நினைக்கத் தோன்றுகிறது. தென் அமெரிக்க நாடுகளுக்குத் தரப்படும் சூழலியல் அழுத்தங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. தென் அமெரிக்க நாடுகள் மட்டுமன்றி பூமியின் தெற்கு அரைக்கோளப் பகுதிகளில் இருக்கும் பெரும்பாலான நாடுகள் தற்போது அத்தகைய அழுத்தங்களைச் சந்தித்துக்கொண்டேயிருக்கின்றன.

நமது நாக்கில் இனிமையான எலுமிச்சைச் சாறு கலந்த சோடாவாக ஊறி உள்ளிறங்கும் ஸ்ப்ரைட், சட்டவிரோதமான செயலின் விளைவாக வந்தது. நீடித்த நிலையான சூழலியல் வளர்ச்சி பற்றிப் பேசிக்கொண்டு, மறைமுகமாக இத்தகைய செயலுக்குச் சம்மதம் தெரிவித்து அமைதிகாக்கும் அந்த நிறுவனம் தன் மௌனம் கலைக்க வேண்டும். அவர்கள் காடுகளை அழிக்கும் உள்ளூர் நிறுவனத்திடமிருந்து எலுமிச்சைச் சாறு வாங்குவதை நிறுத்தவேண்டும் என்றும் கிரீன்பீஸ் நிறுவனம் தொடர்ச்சியான போராட்டங்களையும் அந்த நாட்டு மக்களிடம் விழிப்புஉணர்வையும் ஏற்படுத்த முயன்றுகொண்டிருக்கிறது. இதற்காக அவர்கள் மரங்களைச் சங்கிலியால் பூட்டி நூதனப் போராட்டங்களையும் முன்னெடுத்துள்ளனர்.

அந்தப் போராட்டத்தின் விளைவாக எழுச்சியடைந்த மக்கள் போராட்டத்தாலும், 3,00,000 கையெழுத்தோடு அவர்கள் சமர்ப்பித்த புகாரினாலும், லா மொரெலாஜா என்ற உள்ளூர் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் தொடர்பான அனைத்து அங்கீகாரங்களும் தற்போது ரத்துசெய்யப் பட்டுவிட்டன. ஆகையால் அந்நிறுவனம் தற்போது அவர்கள் அழித்த 7000 ஏக்கரில் 3000 ஏக்கரை மீண்டும் மரங்களை நட்டுக் காடாக்கிக் கொடுப்பதாக உறுதியளித்துள்ளது. இது அவர்கள் அழித்ததில் பாதிக்கும் குறைவான அளவு மட்டுமே. இது போதாது என்றும் முழுமையாகச் சீரமைத்துத் தரவேண்டும் என்றும் அந்நாட்டு மக்களும், கிரீன்பீஸ் அமைப்பினரும் இணைந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஸ்டெர்லைட் ஆகட்டும், கொடைக்கானல் மெர்குரி ஆலை ஆகட்டும், இந்தக் குளிர்பானத் தயாரிப்புப் பிரச்னை ஆகட்டும். அங்கு வாழும் மக்களின் எண்ணங்களுக்கும், அவர்களின் தேவைகளுக்கும் மதிப்பளிக்க வேண்டியது அவசியம் அல்லவா? மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யாத எதையும் எப்படி முன்னேற்றம் என்று கருத்தில் கொள்ள முடியும்?

``கோகோ கோலா நிறுவனமே... உங்கள் ஊழியர்களுக்குப் பாதிச் சம்பளம் மட்டும் கொடுத்தால் பொறுத்துக்கொள்வார்களா? உங்கள் பானங்களுக்கு நாங்கள் பாதி விலை மட்டும் கொடுத்தால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? பிறகு ஏன் உங்கள் பாவங்களுக்கு மட்டும் பாதிப் பிராயச்சித்தம் தேடுகிறீர்கள்? 7000 ஏக்கர் முழுவதையும் மீட்டுக்கொடுங்கள். அதுமட்டுமே எங்களின் தேவை." - கிரீன்பீஸ்