Published:Updated:

”மரப்படகு தெரியும்... மர சைக்கிள் தெரியுமா?” - கோவை இளைஞரின் புதிய முயற்சி

”மரப்படகு தெரியும்... மர சைக்கிள் தெரியுமா?” - கோவை இளைஞரின் புதிய முயற்சி
News
”மரப்படகு தெரியும்... மர சைக்கிள் தெரியுமா?” - கோவை இளைஞரின் புதிய முயற்சி

உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கைப்படி, உலகம் முழுவதிலும் இருக்கும், முதல் 20 மாசுபட்ட நகரங்களில், 10 நகரங்கள் இந்தியாவில் இருக்கிறதாம். சீனாவில் கொடுக்கப்பட்டுவந்த ரெட் அலெர்ட், தற்போது நமது தலைநகர் டெல்லியிலும் கொடுக்கப்பட்டுவிட்டது. காய்கறிகளைப் போல, சந்தைகளில் தினசரி பல்வேறு மோட்டார் பைக்குகளும், கார்களும் களமிறங்கி வருகின்றன.  இந்தியாவில் மட்டும், தற்போது தினசரி 9.2 கோடி லிட்டர் பெட்ரோல் விற்பனையாகி வருகிறது. அதில் இருந்து வரும் புகை மூலம், சூழலையும் மூர்க்கத்தனமாக தாக்கி வருகிறோம்.

”மரப்படகு தெரியும்... மர சைக்கிள் தெரியுமா?” - கோவை இளைஞரின் புதிய முயற்சி

உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கைப்படி, உலகம் முழுவதிலும் இருக்கும், முதல் 20 மாசுபட்ட நகரங்களில், 10 நகரங்கள் இந்தியாவில் இருக்கிறதாம். சீனாவில் கொடுக்கப்பட்டுவந்த ரெட் அலெர்ட், தற்போது நமது தலைநகர் டெல்லியிலும் கொடுக்கப்பட்டுவிட்டது. காய்கறிகளைப் போல, சந்தைகளில் தினசரி பல்வேறு மோட்டார் பைக்குகளும், கார்களும் களமிறங்கி வருகின்றன.  இந்தியாவில் மட்டும், தற்போது தினசரி 9.2 கோடி லிட்டர் பெட்ரோல் விற்பனையாகி வருகிறது. அதில் இருந்து வரும் புகை மூலம், சூழலையும் மூர்க்கத்தனமாக தாக்கி வருகிறோம்.

Published:Updated:
”மரப்படகு தெரியும்... மர சைக்கிள் தெரியுமா?” - கோவை இளைஞரின் புதிய முயற்சி
News
”மரப்படகு தெரியும்... மர சைக்கிள் தெரியுமா?” - கோவை இளைஞரின் புதிய முயற்சி

லக சுகாதார நிறுவனத்தின் அறிக்கைப்படி, உலகம் முழுவதிலும் இருக்கும் முதல் 20 மாசுபட்ட நகரங்களில் 10 நகரங்கள் இந்தியாவில் இருக்கிறதாம். சீனாவில் கொடுக்கப்பட்டுவந்த ரெட் அலெர்ட், தற்போது நமது தலைநகர் டெல்லியிலும் கொடுக்கப்பட்டுவிட்டது. காய்கறிகளைப் போல, சந்தைகளில் தினசரி பல்வேறு மோட்டார் பைக்குகளும், கார்களும் களமிறங்கி வருகின்றன.  இந்தியாவில் மட்டும், தற்போது தினசரி 9.2 கோடி லிட்டர் பெட்ரோல் விற்பனையாகி வருகிறது. அதில் இருந்து வரும் புகை மூலம், சூழலையும் மூர்க்கத்தனமாக தாக்கி வருகிறோம்.

இந்நிலையில், சூழலுக்கு தகுந்ததுபோல, மரத்தினாலான சைக்கிளை உருவாக்கியுள்ளார் கோவையைச் சேர்ந்த இளைஞர் முருகேசன்.

இதுகுறித்து முருகேசன், " நாம எல்லோருமே சைக்கிள்தான் ஓட்டிட்டு இருந்தோம். ஆனா, இங்க ஒருவர் என்ன பைக், கார் வைத்திருக்கிறார்கள் என்பதை வைத்துத்தான், அவர்களது ஸ்டேட்டஸையே முடிவு செய்கிறார்கள். பல நாடுகள்ல, எவ்வளவோ கார் வெச்சுருக்கற பணக்காரர்கள் வீட்ல கூட சைக்கிள் இருக்கும். நான் வீட்டு பக்கத்துலயே இருக்கற வேலைகளுக்கு எல்லாம், சைக்கிளைத்தான் பயன்படுத்திட்டு இருக்கேன். இந்தியா போன்ற போக்குவரத்து பயன்பாடு அதிகம் இருக்கற நாடுகள்ல, வாரத்துக்கு ஒரு நாளாவது, மோட்டார் வாகனங்களை தவிர்த்துவிட்டு, சைக்கிள் பயன்படுத்த அனைவரும் முன்வரவேண்டும் என்பதுதான் எனது நோக்கம்.

 சின்ன வயதுல இருந்தே எனக்கு சைக்கிள் மேல ஆர்வம் அதிகம். நான் 6-ம் வகுப்பு படிக்கறப்ப, எங்க அப்பா

சைக்கிள் வாங்கிக் கொடுத்தாரு. ஸ்கூல் படிச்சோனயே நான் வேலைக்கு வந்துட்டேன். அப்பா கார்ப்பென்டர் என்பதால், இன்டீரியல் டிசைன் வேலைகள் பார்த்துட்டு இருந்தேன். அப்படியே பகுதி நேரமா பொலிட்டிக்கல் செயின்ஸ் படிச்சேன். அதுக்கப்பறம், சி.பி.எம் கட்சில இணைஞ்சேன். அப்பத்தான், பெரு முதலாளிகள் எப்படியெல்லாம் சூழலை தாக்காறங்கனு தெரிஞ்சுக்கிட்டேன்.

இதுகுறித்து மக்களுக்கு விழிப்பு உணர்வு செய்ய வேண்டுமென்ற எண்ணம் ரொம்ப நாளா இருந்துச்சு. அப்பத்தான் என்னோட ஸ்டீல் சைக்கிளின் ஃப்ரேம் ரிப்பேர் ஆச்சு. அதை சாதாரணமா சரி செய்யாமல், மரத்திலான மாடல் சைக்கிள் போல செய்யலாம்னு ஒரு ஐடியா தோணுச்சு. ஃப்ரேம், டிசைன், அலாய் என 90 சதவிகிதம் மரத்தாலேயே ஆல்டர் பண்ணேன். எங்க ஏரியாலத்தான் அத முதலில் ஓட்டினேன். செம ரெஸ்பான்ஸ். இந்த சைக்கிள்ல போட்டோ பிடிச்சு சோஷியல் மீடியாவலயும் வைரல் பண்ணாங்க.

இப்பவரை, 10 பேர் இந்த சைக்கிள் வேணும்னு சொல்லி ஆர்டர் பண்ணிருக்காங்க. அதேபோல, 60-க்கும் மேற்பட்டோர் சைக்கிள் குறித்து விசாரிச்சுட்டு இருக்காங்க. அமெரிக்கா போன்ற நாடுகள்ல இருந்தும் போன் பண்ணறாங்க. மக்கள் கிட்ட சாதாரணமா போகாமல், இப்படி போனா, சீக்கிரம் ரீச் ஆகும்னு நினைச்சோம். அது சக்சஸ் ஆகிடுச்சு. இந்த ப்ராஜெக்டல எனக்கு பக்கபலமா இருப்பது என் நண்பர் தமிழ்செல்வன்தான். இப்படி, ஒரு விஷயத்த சொன்ன உடனேயே தன்னாலான உதவியை செய்வதாகக் கூறியுள்ளார். கார்டியாக் அரெஸ்ட் வராமல் தவிர்ப்பதற்கு, கார்டியாக் வேஸ்கூலர் ஃபிட்னெஸ் (Cardiovascular fitness) ரொம்ப முக்கியம். அதற்கு, இந்த சைக்கிள் பயிற்சி மிகவும் உதவியா இருக்கும். டாக்டர்களும் சைக்கிள் பயிற்சியைத்தான் பரிந்துரை செய்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், நிறைய செலிபிரட்டிகளும் சைக்கிள் பயிற்சியில் இறங்கியுள்ளனர். இதன்காரணமாக, இந்தியாவில் சைக்கிள் மார்க்கெட் மீண்டும் சூடுபிடித்துள்ளது. ஒரு லட்ச ரூபாய்க்கு கூட சைக்கிள்கள் வந்துவிட்டன.

இதனால, இந்த சைக்கிள பக்கா மாடலாக உருவாக்க முடிவு செஞ்சுருக்கோம். இதன் தோற்றம்தான் இதன் பிளஸ்.  யூரோப்ல கூட, ஃப்ரேம் மட்டும்தான் மரத்துல வரும். ஆனா, இதுல 7 கியர்ஸ் இருக்கு. அலாய் கூட மரத்துல செஞ்சுருக்கோம். சீட் அட்ஜெஸ்மென்ட்டுக்காக, க்வீக் ரிலீஸ் வசதி இருக்கு, பவர் ப்ரேக் இருக்கு. "ரெபெல் பைக்" என்று இதற்கு பெயரிட்டுள்ளோம். ஒரு ஸ்போர்ட்ஸ் பைக்ல இருக்கற எல்லா வசதியும் இதுல இருக்கு. ஆர்டர் பண்றவங்களுக்கு அவங்களோட, பெயரையும் இதுல எழுதித் தருவோம்.

தற்போது,15 கிலோ எடை மதிப்பில், இந்த சைக்கிளை உற்பத்தி செய்கிறோம். யூரோப்ல இதே சைக்கிளின் பேஸிக் விலை 45,000 ரூபாய். நாம்,18,000 ரூபாய்க்கு இந்த சைக்கிளை விற்பனை செய்ய முடிவு பண்ணிருக்கோம். அவசியத்துக்கு மட்டுமே, மோட்டார் சைக்கிளை பயன்படுத்த வேண்டும் என்ற முடிவை நாம் அனைவருமே எடுத்துவிட்டு, சூழ்லை காக்க முன்வரவேண்டும்" என்றார் பொறுப்புணர்வுடன்.

நண்பர் தமிழ்செல்வனுடன் முருகேசன்

இதுகுறித்து முருகேசனின் நண்பர் தமிழ்செல்வன், "சூழலைப் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை. இளைஞர்களைக் கவரும் விதத்தில், மாடர்னாக செய்யப்பட்டுள்ள இந்த சைக்கிள் மூலம், காற்று மாசைக் குறைக்கலாம். மக்களிடம் இந்த சைக்கிள் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஒருமுறை, ஆர்.எஸ்.புரம் பகுதியில் இந்த சைக்கிளை எடுத்து சென்றபோது, என்னை க்ராஸ் செய்த ஒரு கார் மீண்டும் ரிவர்ஸில் வந்தது. அதிலிருந்தவர் ஒரு டாக்டர். அவரும் சைக்கிளிஸ்ட். இந்த சைக்கிளைப் பார்த்து, ரொம்ப இம்ப்ரெஸ் ஆகி, இதன் விபரங்களை கேட்டறிந்தார். பின்னர், ஒரு ரவுண்டித்து, வெயிட்ட மட்டும் கொஞ்சம் கம்மிப் பண்ணுங்கனு அட்வைஸ் கொடுத்தார். அது எங்களுக்கு பெரிய எனர்ஜியை கொடுத்தது. அடுத்து வரும் சைக்கிள்களில், வெயிட்டை குறைப்பதற்கு முயற்சி செய்து வருகிறோம்" என்றார் நெகிழ்ச்சியாக.

அடிச்சு ஓட்டுங்க இளைஞர்களே...!