Published:Updated:

இனி அரிசி அவ்வளவு சத்தான உணவாக இருக்காது... ஏன்?

இனி அரிசி அவ்வளவு சத்தான உணவாக இருக்காது... ஏன்?
News
இனி அரிசி அவ்வளவு சத்தான உணவாக இருக்காது... ஏன்?

தாவரங்கள் ஒளிச்சேர்க்கை மூலம் உணவு தயாரிப்பதற்கு கார்பன் டை ஆக்ஸைடும் ஒரு மூலப்பொருள். இதனை வைத்துப் பார்க்கும்போது கார்பன் டை ஆக்ஸைடு அளவு அதிகரிப்பது நல்லது எனத் தோன்றலாம். ஆனால் இது நல்லதல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

Published:Updated:

இனி அரிசி அவ்வளவு சத்தான உணவாக இருக்காது... ஏன்?

தாவரங்கள் ஒளிச்சேர்க்கை மூலம் உணவு தயாரிப்பதற்கு கார்பன் டை ஆக்ஸைடும் ஒரு மூலப்பொருள். இதனை வைத்துப் பார்க்கும்போது கார்பன் டை ஆக்ஸைடு அளவு அதிகரிப்பது நல்லது எனத் தோன்றலாம். ஆனால் இது நல்லதல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இனி அரிசி அவ்வளவு சத்தான உணவாக இருக்காது... ஏன்?
News
இனி அரிசி அவ்வளவு சத்தான உணவாக இருக்காது... ஏன்?

காலநிலை மாற்றம், புதிய புதிய ஆய்வுகளின் வழியாகவும் நேரடியான விளைவுகளின் வழியாகவும் உலகிற்கான ஆபத்தை வீரியமாக காட்டிக்கொண்டேயிருக்கிறது. அதேபோன்று சமீபத்தில் வந்திருக்கும் ஆய்வு முடிவு காலநிலை மாற்றத்தின் விளைவுகளைத் தந்து எச்சரிக்கிறது. வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்ஸைடின் அளவு அதிகர்ப்பதன் விளைவாக அரிசியில் இருக்கும் ஊட்டச்சத்து மதிப்பு குறைகிறது எனச் சொல்கிறது இந்த புதிய ஆய்வு முடிவுகள். உலக நாடுகள் பலவற்றுக்கும் குறிப்பாக ஆசிய நாடுகளில் அரிசிதான் முக்கிய உணவுப் பொருளாக இருக்கிறது. அப்படி இருக்கும்போது இந்த ஆய்வு முடிவுகள் உலகின் பெரும்பாலோரின் ஊட்டச்சத்துப் பிரச்சனையாக மாறும் வாய்ப்புடையது. 

இந்தச் சோதனை, சீனா மற்றும் ஜப்பானில் உள்ள 18 வகையான அரிசி வகைகளில் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடின் செறிவு எப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்தது. சராசரியாக 410 பாகம் (பிபிஎம்) அளவிற்கும் மேல் கார்பன் டை ஆக்ஸைடின் செறிவு உயர்ந்தது. கடந்த 2010க்கு மேல்தான் 400 என்ற அளவையே CO2 தாண்டியது. அப்போதிருந்தே ஆய்வாளர்கள் பலரும் பசுமை இல்ல வாயுக்களின் அளவைக் கட்டுப்படுத்துவதற்கான அவசியத்தைக் கூறி வருகிறார்கள்.. இந்த நூற்றாண்டின் பாதிக்குள் இந்த அளவானது 568 மற்றும் 590 ppm அளவிற்கு மேல் உயரும் என்கின்றனர். இதனால் அரிசியின் ஊட்டச்சத்து இன்னும் குறையலாம் என்றும் கூறுகின்றனர். 

தாவரங்கள் ஒளிச்சேர்க்கை மூலம் உணவு தயாரிப்பதற்கு கார்பன் டை ஆக்ஸைடும் ஒரு மூலப்பொருள். இதனை வைத்துப் பார்க்கும்போது கார்பன் டை ஆக்ஸைடு அளவு அதிகரிப்பது நல்லது எனத் தோன்றலாம். ஆனால் இது நல்லதல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். "கார்பன் டை ஆக்சைடு தாவர உணவாக இருந்தாலும் , அதன் திடீர் அதிகரிப்பு மனித ஆரோக்கியத்தைப் பாதிக்கும்" என்று அமெரிக்கப் பயிர் துறை (US Department of Agriculture) ஆய்வாளர் டாக்டர் லூயிஸ் ஸிஸ்கா (Dr Lewis Ziska) கூறுகிறார். 

அரிசியில் B வைட்டமின் அளவுகள் குறைந்துவிட்டதற்கான ஆதாரத்தைத் தருகிறது இந்த ஆய்வு. 30 சதவீதத்திற்கும் மேல் குறைகிறது. குறிப்பாக வைட்டமின் B9 அல்லது ஃபோலேட் எனச் சொல்லப்படுகிற ஊட்டச்சத்தும் குறைகிறது. இது கர்ப்பிணிப் பெண்களின் பிறப்பு குறைபாடுகளின் ஆபத்தைக் குறைப்பதற்கு உதவக்கூடியது. இதுமட்டுமில்லாமல் புரதம் மற்றும் இரும்புச்சத்திலும் சராசரியாக 10 சதவிகிதம் குறைகிறது. மேலும் துத்தநாகத்தில் 5 சதவிகிதம் குறைவதாகவும் பதிவு செய்துள்ளனர். 

அரிசி என்பது கலோரிகளின் பிரதான ஆதாரமாக மட்டுமல்லாமல் வளரும் நாடுகளில் மற்றும் வளர்ந்த நாடுகளில் உள்ள ஏழைச் சமூகங்களுக்கு புரோட்டீன்கள் மற்றும் வைட்டமின்கள் போன்ற ஊட்டச்சத்தைத் தரும் உணவுப்பொருளாகவும் இருக்கிறது. பெரும்பாலான ஆசிய மக்களுக்கு மட்டுமன்றி ஆப்பிரிக்காவின் பெரும்பகுதிகளிலும் அரிசி முக்கிய உணவாக தற்போது மாறி வருகிறது. பங்களாதேஷ், கம்போடியா மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் சுமார் 600 மில்லியன் மக்கள் அரிசியிலிருந்தே தினசரிக்குத் தேவையான அளவைவிட அதிகப்படியான புரதத்தைப் பெறுகின்றனர்.

"அரிசியில் ஏற்படும் ஊட்டச்சத்து குறைவானது மில்லியன்கணக்கான தாய் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதிக்கக் கூடியது" என்று வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின்(University of Washington) ஆசிரியரான பேராசிரியர் கிரிஸ்டி எபி(Kristie Ebi) கூறினார். இந்த விளைவுகள் ஏழ்மையான நாடுகளில் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. அதுமட்டுமில்லாமல் அங்கே ஏற்கனவே இருக்கக்கூடிய ஊட்டச்சத்து நோய்களையும் வயிற்றுப்போக்கு, மலேரியா போன்ற நோய்களின் தீவிரத்தை அதிகரிக்கக்கூடியது என்று இதனால் ஏற்படும் விளைவுகளை இன்னும் தெளிவாக சொல்கின்றனர் ஆய்வாளர்கள். 

இந்தச் சோதனைகள் முடிவுகள் சயின்ஸ் அட்வான்ஸ் என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது. வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடின் அளவு அதிகரிப்பது தாவர வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று முந்தைய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்தப் புதிய ஆய்வு CO2 அதிகரிப்பு விவசாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். அதிகப்படியான CO2 தாவரங்கள் வளர்வதற்கு ஊக்கமளித்தாலும் சரியான ஊட்டச்சத்தை மக்களுக்குக் கொடுக்காது. 

மேலும் பசுமை இல்ல வாயுக்களின் உயர்வு கார்போஹைட்ரேட்டின் அளவை அதிகரிக்கிறது என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர், ஆனால் புரதம் மற்றும் இதர ஊட்டச்சத்துகளின் அளவு குறைவதும் பி வைட்டமின்களின் அளவு குறைவதும் தாவரத்தில் நைட்ரஜனின் அளவு குறைவதும் கார்பன் டை ஆக்ஸைடின் அளவுக்கு அதிகமாக உட்கொள்ள்படுவதால் இருக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள். 

புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்துவதன் மூலம்தான் இதற்கு தீர்வைக் காண முடியும் என்றாலும் விஞ்ஞானிகள் மரபணு மாற்றம் இன்னும் பல வழிகளில் இழந்த ஊட்டச்சத்தைப் பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். பசுமை இல்ல வாயுக்களின் அதிகரிப்பும் தொடர்ந்து நிகழும் காடழிப்பும் புவியை இன்னும் அபாயத்திற்குள்ளதாக மாற்றக்கூடியது. காலநிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு இதற்கான அரசியல் கொள்கை முடிவுகளில் உலக அமைப்புகளும் அரசு அதிகாரங்களும் ஈடுபடுமா என்பது கேள்வியாகத்தான் உள்ளது.