Election bannerElection banner
Published:Updated:

23 கிராமங்கள்... 95.52 கிலோமீட்டர்... 14,394 ஏக்கர்... பாசனம் பெற புதிய திட்டம்!

23 கிராமங்கள்... 95.52 கிலோமீட்டர்... 14,394 ஏக்கர்... பாசனம் பெற புதிய திட்டம்!
23 கிராமங்கள்... 95.52 கிலோமீட்டர்... 14,394 ஏக்கர்... பாசனம் பெற புதிய திட்டம்!

23 கிராமங்கள்... 95.52 கிலோமீட்டர்... 14,394 ஏக்கர்... பாசனம் பெற புதிய திட்டம்!


கரூர் மாவட்டத்தில், குளித்தலை வட்டம், நல்லூர் பனைவாரி வாய்க்கால் பகுதியில் தூர் வாரப்பட்ட பணி, மாயனூர் கதவணை மதகுகள் கண்காணிப்பு அலுவலர்/மாநில சுகாதாரக் குழும இயக்குநர் டாக்டர் தாரேஸ் அகமது, மாவட்ட ஆட்சியர் அன்பழகன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


 

இந்த ஆய்வின்போது பேசிய கண்காணிப்பு அலுவலர் டாக்டர் தாரேஸ் அகமது, "கரூர் மாவட்டத்தில், திருச்சி ஆற்றுப் பாதுகாப்பு கோட்ட கட்டுப்பாட்டில் உள்ள பாசன வாய்க்கால்கள், வடிகால் வாய்க்கால்கள் மற்றும் ஏரிகள் ஆகியவை குடிமராமத்து திட்டத்தின்மூலம் இந்த ஆண்டு ரூ.2.32 கோடி மதிப்பில் தூர் வாரும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இப்பணிகள் அனைத்தும், விவசாய சங்கங்களின் பங்களிப்புடன் 23 கிராமங்களில் 95.52 கிலோ மீட்டர் தொலைவுக்கு, 14,394 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் பணிகள் நடைபெற்றுவருகிறது. மேலும், குளித்தலை வட்டத்தில், காட்டுவாரி வாய்க்கால், பனையூர் வாய்க்கால், வளையபட்டிவாரி வாய்க்கால், வதியம் தடுப்பு மதகு பணி ஆகிய பணிகளும், மண்மங்கலம் வட்டத்தில் வாங்கல் வாய்க்கால், நெரூர் வாய்க்கால், புகளூர் வாய்க்கால் தூர்வாரும் பணிகளும், கரூர் வட்டத்தில் உப்பிடமங்கலம் ஏரி,கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் பிள்ளபாளையம் வாய்க்கால், மருதாண்டான் வாய்க்கால் என மொத்தம் 10 தூர் வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இப்பணிகளைக் கண்காணிக்க, தமிழக அரசால் கரூர் மாவட்டத்துக்கு நான் நியமிக்கப்பட்டுள்ளேன்" என்றார்.

இந்த ஆய்வின்போது, வாய்க்காலின் இரு கரைகளிலும் ஆக்கிரமிப்பை அகற்ற வருவாய்த்துறையின்மூலம் அளவிட்டு, எல்லைக்கல் நட வேண்டுமென்றும், பனைவாரி வாய்க்கால் மற்றும் மாயனூர் தடுப்பணையைப் பார்வையிட்டு, அப்பகுதியிலுள்ள மதகுகளில் பழுதிருந்தால் மழைக் காலத்துக்கு முன்னதாக சீர்செய்யுமாறும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்கள். மேலும், விவசாயிகளிடம் குடிமராமத்துப் பணிகள்குறித்த குறைகளையும் கேட்டறிந்தார்கள்.
 
 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு