Published:Updated:

``பிளாஸ்டிக் இல்லா தமிழ்நாட்டை உருவாக்குவோம்!” - கோவில்பட்டியில் மாணவர்கள் எடுத்துக்கொண்ட உறுதிமொழி

கோவில்பட்டி நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டது குறித்து பள்ளி மாணவ, மாணவியருக்கான விழிப்பு உணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாணவ மாணவிகள் பிளாஸ்டிக் இல்லா தமிழ்நாட்டை உருவாக்கி, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பேன் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, புனித ஓம் கான்வென்ட் பள்ளியில் கோவில்பட்டி நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டது குறித்தும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்தும் பள்ளி மாணவ, மாணவியருக்கான விழிப்பு உணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நகராட்சி சுகாதார ஆய்வாளர் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்  கிருஷ்ணவேணி,  பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவ, மாணவியர்களிடம் எடுத்துரைத்தார். தொடர்ந்து,  ``நான் எனது வீட்டிலோ, பள்ளி வளாகத்திலோ  ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய மக்காத பிளாஸ்டிக் பொருள்களான பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் குவளைகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல் மற்றும் பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் கொடிகள் போன்ற பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்டவற்றைப் பயன்படுத்த மாட்டேன்.  

பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாக உணவுப் பொருள்கள் மற்றும் குடிநீர் எடுத்து வர,  துருப்பிடிக்காத எஃகு பாத்திரங்கள், பராம்பர்யமாக சாப்பாட்டுக் கடைகளில் பார்சல் கட்டப் பயன்படும் வாழை இலைகள், பாக்கு மட்டை தட்டுகள், துணிப்பைகள் மற்றும் சணல் பைகள் ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்துவேன். பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்திவிட்டு அவற்றை தூக்கி எரிவதால் மண்ணில் மட்காமல் நிலத்தை பாழாக்குவது, பயிர்களை வளரவிடாமல் தடுத்து நிற்பது, தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் தாள்கள், டம்ளர்களில் கழிவு நீர் தேங்கி பலவித தொற்று நோய்களை ஏற்படுத்தும் கொசுக்கள் வளர இடம் அளிப்பது போன்ற சுகாதாரக் கேடுகள் மற்றும் தீமைகள் குறித்து என் வீட்டின் அருகில் உள்ளவர்களுக்கும், உறவினர்களுக்கும் எடுத்துச் சொல்லி விழிப்பு உணர்வு ஏற்படுத்துவேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிளாஸ்டிக் பொருள்களின் மீதான தமிழ்நாடு அரசின் தடைக்கு முழுமையான ஒத்துழைப்பை அளிப்பேன். ``பிளாஸ்டிக் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கி, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பேன்” என, மாணவ, மாணவியர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பின்னர், இது தொடர்பான உறுதிமொழிப் படிவங்களில் அனைத்து மாணவ, மாணவியரும் கையெழுத்திட்டனர். தொடர்ந்து, தெருக்களுக்கு வரும் நகராட்சி குப்பை வண்டிகளில் வீடுகளிலிருந்து குப்பைகளை வழங்கும்போது மட்கும் குப்பை, மட்காத குப்பை என பிரித்து வழங்க வேண்டும் எனவும் மாணவ, மாணவிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism