Published:Updated:

கார்ப்பரேட்டை எதிர்த்து 17 ஆண்டாக நடக்கும் விம்பிப் பழங்குடி மக்கள் போராட்டம் எதற்காக?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கார்ப்பரேட்டை எதிர்த்து 17 ஆண்டாக நடக்கும் விம்பிப் பழங்குடி மக்கள் போராட்டம் எதற்காக?
கார்ப்பரேட்டை எதிர்த்து 17 ஆண்டாக நடக்கும் விம்பிப் பழங்குடி மக்கள் போராட்டம் எதற்காக?

அவர்களில் ஒருவர்தான் யெஸெனியா படிலா (Yessenia Padilla). தனது விவசாயப் பயிர்களை யாரோ நாசமாக்குகிறார்கள் என்று கேட்டுத் தலைதெறிக்க ஓடினார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

உங்களுக்கென்று இருக்கும் தொழில், உங்களுடைய வீடு அனைத்தும் திடீரென்று இல்லையென்றால், யாரேனும் அதைக் கைப்பற்றிக் கொண்டால்!

துடித்துப்போவோம்; கேட்டுப் பார்ப்போம்; போராடிப் பார்ப்போம்; இருந்தும் நியாயம் கிடைக்கவில்லையெனில்! ஆம், கோபம் வரும். கோபம் வந்தும் ஒன்றும் செய்யமுடியாமல் போகும் அந்தக் கையறு நிலையில் என்ன தோன்றும், இதயம் வெடித்துக் கதறி அழத் தோன்றும்.

அப்படித்தானிருக்கிறது அவர்களின் நிலை. அவர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து ஈக்வடாருக்குக் குடிபெயர்ந்த விம்பி (Wimbi) என்ற பழங்குடியினம். பழங்குடிகளென்றால் பல நூற்றாண்டுகள் தங்கள் தாய்நிலத்தைப் பாதுகாத்து வாழ்பவர்கள்தானே. குடிபெயர்ந்த இவர்கள் எப்படிப் பழங்குடிகளாவார்கள் என்ற கேள்வி எழலாம். நிச்சயமாக இவர்கள் பழங்குடிகள்தாம். 19-ம் நூற்றாண்டில் ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைத் தொழில் செய்வதற்காகக் கடத்தி வரப்பட்டவர்கள். அடிமைச் சந்தைகளில் விற்கும் மனிதக் கடத்தல் கும்பல்களிடம் சிக்கியதன் மூலமாக ஈக்வடாருக்குக் குடிபெயர்ந்தவர்கள்.

பிறகு அடிமைத் தளையிலிருந்து தப்பித்து எஸ்மெரால்டஸ் (Esmeraldas) பகுதியிலிருந்த அடர்ந்த காடுகளுக்குள் மறைந்து வாழத்தொடங்கினார்கள். காட்டுக்குள்ளேயே பல ஆண்டுகளாக வாழ்ந்துகொண்டிருந்தார்கள். அடிமைத்தனம் ஒழிக்கப்பட்ட பிறகும்கூட வெளியுலகத்தோடு தொடர்பு வைக்க அவர்கள் தயங்கினார்கள். எஸ்மெரால்டஸிலேயே வீடுகள் அமைத்து வாழத் தொடங்கினார்கள். சட்டதிட்டங்களைப் பற்றியெல்லாம் அவர்கள் சிந்திக்கவில்லை. மீண்டும் அடிமைத்தனத்தில் சிக்கிவிடக் கூடாதென்பதே விம்பி இன மக்களின் தலையாய சிந்தனையாக இருந்தது. 

அவர்களில் ஒருவர்தான் யெஸெனியா படிலா (Yessenia Padilla). தனது விவசாயப் பயிர்களை யாரோ நாசமாக்குகிறார்கள் என்று கேட்டுத் தலைதெறிக்க ஓடினார். அன்று அவரோடு மேலும் 70 விம்பி இனத்தவர்களும் ஓடினர். ஏனென்றால் அவர்களின் நிலங்களும் நாசமாகிக் கொண்டிருந்தன. கட்டைகள், வெட்டுக் கத்திகள் என்று கண்ணில் பட்டதையெல்லாம் எடுத்துக்கொண்டு கிளம்பினார்கள். அங்கு சென்று பார்த்தபோது அந்தப் பனை எண்ணெய் நிறுவனத்தின் பணியாளர்கள் பெரிய எக்ஸ்கவேட்டர் (Excavator) இயந்திரத்தை வைத்துத் தங்கள் நிலங்களை அழித்துக்கொண்டிருந்தனர். அதற்கு முப்பதுக்கும் மேற்பட்ட போலீஸார் காவலிருந்தனர். இதைச் செய்துகொண்டிருந்தது எனெர்ஜி அண்டு பால்மா (Energy & Palma) என்ற பனை எண்ணெய் நிறுவனம்.

பல நாள்களாக உழைத்து உருவாக்கிய பயிர்கள் அவர்களின் கண் முன்னாலேயே அழிந்துகொண்டிருந்தன. அவர்கள் நினைத்திருந்தால் தங்கள் நிலத்தில் நின்றிருந்த நிறுவன ஆட்களை அடித்துத் துவம்சம் செய்திருக்க முடியும். அதைச் செய்யவில்லை. ஆத்திரம் கொண்ட மக்கள் அனைவரையும் வெளியேறுமாறு கோஷமிடவும் போராடவும் தொடங்கினார்கள். மக்களின் போராட்டத்தால் அங்கிருந்த பணியாளர்களும், போலீஸாரும் கிளம்பிவிட்டனர். அவர்களின் எக்ஸ்கவேட்டர் இயந்திரத்தை மக்கள் சிறைப்பிடித்தனர். பாழ்படுத்திய நிலத்தை மீண்டும் சரிசெய்து கொடுத்துவிட்டு எடுத்துச் செல்லுமாறு கெடு விதித்தனர். இந்தச் சம்பவம் நடந்தது 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம். பின்னர் 2017-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அதைத் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். 

இந்தச் சம்பவம் விம்பி இன மக்களுக்கும் பனை எண்ணெய் நிறுவனத்துக்கும் இடையே நடந்து வரும் 17 வருடப் போராட்டத்தின் ஒரு துளி மட்டுமே. அது அவர்களின் தாத்தாக்கள் வாழ்ந்த நிலம். அவர்களின் பாட்டன்கள், முப்பாட்டன்களுக்கு அடைக்கலம் தந்த நிலம்.
2000-ம் ஆண்டு முதல் எனெர்ஜி அண்டு பால்மா நிறுவனம் எஸ்மெரால்டஸில் வாழும் விம்பி மக்களின் நிலங்களைச் சிறிது சிறிதாக வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களே நேரடியாகவோ, அல்லது இடைத் தரகர்களை வைத்தோ, மிரட்டியோ, வன்முறையைப் பிரயோகித்தோ ஏதாவதொரு வகையில் அவர்களின் நிலங்களைத் தங்கள் பனை எண்ணெய் உற்பத்திக்காக வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், விம்பி இன மக்கள் சட்டபூர்வமாக நேர்மையாகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். தங்கள் நிலத்தை மீட்பதற்காக. ஆனால், நீதிமன்றமும் அவர்களை ஏமாற்றிவிட்டது. 2015-ம் ஆண்டு விம்பி மக்கள் போட்ட வழக்குக்குக் கடந்த ஆண்டு வெளியான தீர்ப்பு நிறுவனத்துக்கு ஆதரவாக வந்துவிட்டது.

சான் லோரென்ஸோ (San Lorenzo). அந்த மாவட்டத்தில் ஆப்பிரிக்கப் பாரம்பர்யத்தோடு வாழும் ஈக்வடாரியப் பழங்குடிகளான விம்பி மக்கள் அதன் வடக்கு கிராமமான எஸ்மெரால்டஸில் வாழ்கிறார்கள். அந்நாட்டின் மக்கள் தொகையில் அவர்கள் 7% உள்ளனர். அதில் 70% மக்கள் இந்தப் பகுதியில்தான் வாழ்கிறார்கள்.

1990-களில் அவர்கள் தங்களுக்கான நில உரிமை கேட்டுப் போராடினார்கள். அதுவரை அவர்களுக்கு முறையான நில உரிமைச் சட்டங்கள் விதிக்கப்படவில்லை. 1994-ம் ஆண்டு நடந்த விவசாயப் புரட்சி அவர்கள் வாழும் பகுதிகளை ``மூதாதையர்களின் பிரதேசங்கள்" என்று அறிவித்தது. அதன்மூலம் அவர்களுக்கான நில உரிமை நிலைநிறுத்தப்பட்டது. 1998-ம் ஆண்டும் அதன்பிறகு 2008-ம் ஆண்டும் அவர்களின் நிலங்களை வாங்குவதோ விற்பதோ சட்டப்படி செல்லாதென்று அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டன. அப்படியிருந்தும் அவர்களது நிலங்களை அந்நிறுவனம் அதற்குச் சொந்தமாக்கிக் கொண்டுள்ளது. அதை நீதிமன்றமும் ஆதரித்துத் தீர்ப்பு வழங்கியுள்ளது அநீதியின் உச்சம்.

அந்த மக்களுக்கு அடிப்படை வசதிகள் எதையும் அரசாங்கம் முறையாக வழங்கவில்லை. அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் வழங்கப் போவதாக ஆசைகாட்டியுள்ளது எனெர்ஜி அண்டு பால்மா நிறுவனம். அதுவும் நேரடியாக அவர்களே ஆசைகாட்டவில்லை. இடைத்தரகர்களின் மூலமாக. அம்மக்களுக்கு அவர்கள் உறுதியளித்ததற்கான ஆதாரங்களே இல்லை. இறுதியில் பெரும்பாலான மக்களிடமிருந்து ஒரு ஹெக்டேர் நிலத்தை வெறும் 15, 20 டாலர்களுக்கு என்று வாங்கியுள்ளார்கள். விம்பி இன மக்களின் 30,000 ஹெக்டேர் நிலப்பகுதியை அவர்கள் இதுவரை வாங்கியுள்ளார்கள். அனைத்தும் சட்டபூர்வமாக நிறுவனத்தின் பெயருக்கு மாற்றப்பட்டுவிட்டது. இது தெரியவரவே எதிர்வினையாகப் பல எதிர்ப்புகள் கிளம்பத் தொடங்கின. எதிர்ப்பவர்கள் தவிர்க்கப்படுகிறார்கள் அல்லது அழிக்கப்படுகிறார்கள். காலப்போக்கில் அங்கு வன்முறைக் கும்பல்களை இறக்கி மக்களை மிரட்டிப் பிடுங்கத் தொடங்கினார்கள். சான் லொரென்ஸோவில் எமெர்ஜென்ஸி அமல்படுத்தப் பட்டது. போலீஸார் குவிக்கப்பட்டனர். இந்தப் பிரச்னை தொடர்பாகப் பேசிக் கொண்டிருந்த மூன்று முக்கியப் பத்திரிகையாளர்கள் கடத்தப்பட்டுள்ளார்கள். பிரச்னை அதிகமான பிறகுதான் அது சர்வதேச அளவில் வெளியாகத் தொடங்கியிருக்கிறது. ஆனால், இது பல வருடங்களாக நாங்கள் அனுபவித்து வருவதே என்கிறார்கள் உள்ளூர்வாசிகள்.

பனை எண்ணெய் உற்பத்தி நாட்டின் பொருளாதாரத்துக்கு முக்கியமென்பதால் அதில் முதலீடுகளை 1200 கோடி அதிகப்படுத்தியுள்ளது அரசாங்கம். பனை எண்ணெய் தொழிற்சாலைகளுக்கு வரிச் சலுகைகளும் வரி விலக்குகளும் வழங்கப்படுகின்றன.

தென்னமெரிக்காவில் பனை எண்ணெய் உற்பத்தி செய்வதில் இரண்டாவது பெரிய நாடு ஈக்வடார். அதனால், அத்தொழிற்சாலைகளுக்கு அந்த அரசு அதிகச் சலுகைகளை வழங்கிக்கொண்டிருக்கிறது. அதில் 45% சான் லொரென்ஸோவில்தான் உற்பத்தியாகிறது. அங்கு அதிக மக்களுக்கு அவர்கள் வேலைவாய்ப்பு வழங்குவதாகவும், வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதாகவும் பேசுகிறார்கள். ஆனால், அங்கு வறுமைக்கோட்டுக்குக் கீழே 85% மக்கள் வாழ்கிறார்கள். நாட்டின் மொத்த மக்கள் தொகையில்கூட வறுமைக்கோட்டுக்குக் கீழிருப்பவர்கள் 51%பேர். அதைவிடவே சான் லொரென்ஸோவில் அதிகம். அங்கு 23% மக்களுக்கு மட்டுமே மின்சக்தி வசதி, தண்ணீர் வசதி, கழிப்பறை மற்றும் கழிவு மேலாண்மை வசதிகள் இருக்கின்றன.

Photo Courtesy: Jonatan Roses

மக்கள் வேலை வேண்டுமென்று கேட்கும்போது அது தரப்படுகிறது. அதற்கு விலையாக அவர்களின் வீட்டையே பிடுங்கி அதிலேயே அவர்களுக்கு வேலை கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலை கொடுத்திருப்பதாகச் சொல்லுகிறார்கள். அந்த வேலைக்கு எவ்வளவு சம்பளம் தருகிறார்கள், அதை எந்த ரூபத்தில் தருகிறார்கள்?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு