Published:Updated:

``தடயமே இல்லாமல் காணாமல் போன கிராமம்!” - கர்நாடகத்தையும் விட்டுவைக்காத பெருமழை

``தடயமே இல்லாமல் காணாமல் போன கிராமம்!” - கர்நாடகத்தையும் விட்டுவைக்காத பெருமழை

மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ராணுவ வீரர்கள், தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினர் முழு வீச்சில் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

``தடயமே இல்லாமல் காணாமல் போன கிராமம்!” - கர்நாடகத்தையும் விட்டுவைக்காத பெருமழை

மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ராணுவ வீரர்கள், தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினர் முழு வீச்சில் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

Published:Updated:
``தடயமே இல்லாமல் காணாமல் போன கிராமம்!” - கர்நாடகத்தையும் விட்டுவைக்காத பெருமழை

`கடவுளின் தேசம்' என்று அழைக்கப்படும் கேரளாவில் கடந்த சிலநாள்களாகப் பெய்த மழை அம்மாநிலத்தையே புரட்டிப்போட்டுள்ளது.  மத்திய அரசு சார்பில் முதற்கட்டமாகக் கேரளாவுக்கு 500 கோடி ரூபாய் நிவாரண நிதி ஒதுக்கி `அதி தீவிர இயற்கை பேரிடராக' அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தென்மேற்குப் பருவமழை கர்நாடகத்திலுள்ள குடகு மலையையும் விட்டுவைக்கவில்லை. 

கடந்த மே மாதத்தின் இறுதியில் கர்நாடகத்தில் தென்மேற்குப் பருவமழை ஆரம்பித்தது. அப்போது முதலே மழை கொட்டித் தீர்த்தாலும் கடந்த ஆகஸ்ட் மாதம் 8 - ம் தேதியிலிருந்து குடகு மாவட்டத்தில் பெய்த மழை அந்த மாவட்டத்தையே புரட்டிப் போட்டுள்ளது. பல இடங்களில் பாதை துண்டிக்கப்பட்டு போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளது. மடிகேரி, சோமவார்பேட்டை, விராஜ்பேட்டை தாலுகாக்களில் மலை அடிவாரங்களில் உள்ள வீடுகள் மண்சரிவில் சிக்கியுள்ளன. கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து வரும் கனமழை இன்னும் ஓயவில்லை. கடந்த 19-ம் தேதி பெய்த மழையால் மடிகேரியில் தொடர்ந்து பலத்த மழை கொட்டியது. மடிகேரி, நாபொக்லு, சுண்டிகொப்பா, பாகமண்டலா, காவிரி ஆறு உற்பத்தியாகும் தலைக்காவிரி உள்ளிட்ட பல பகுதிகளில் கடுமையான வெள்ளம் சூழ்ந்துள்ளது.

குடகு மாவட்டத்தில் உற்பத்தியாகும் காவிரி, அட்டிஒலே உள்ளிட்ட ஆறுகளில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டு தண்ணீர் தறிகெட்டு ஓடிக் கொண்டிருக்கிறது. ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளம் மடிகேரி - பெங்களூரு சாலையிலும் ஓடுகிறது. இதனால் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, மடிகேரி–சம்பாஜே ரோடு, மடிகேரி – மாதாபுரா ரோடு, குசால்நகர்–ஹாசன் சாலை, விராஜ்பேட்டை–வயநாடு சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதிகளிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இப்போதைக்கு தனித் தீவாக மாறியுள்ளது குடகு மாவட்டம். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சம்பாஜே, ஆலேறி, காட்டக்கேரி, முக்கொட்லு, மக்கந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கிய ஆயிரக்கணக்கான மக்களை மீட்க ராணுவம், தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினர், கடலோரக் காவல் படையினர், தீயணைப்புப் படையினர், வருவாய்த் துறை அதிகாரிகள் என மொத்தம் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுடன் தன்னார்வலர்களும் சேர்ந்து, பொதுமக்களை மீட்டு வருகின்றனர். கடந்த 18-ம் தேதி தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினர், 3,500 பேரை மீட்டிருக்கின்றனர். மீட்கப்பட்ட அனைவரும் குடகில் பல்வேறு பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். உணவு, உடை, மருந்து பொருள்கள் என அனைத்தும் வழங்கப்பட்டு வருகின்றன. வெள்ளம் இன்னும் அதிகமானதைத் தொடர்ந்து 19-ம் தேதியும் மீட்புப் பணி தொடர்ந்தது. மாதாபுரா, முக்கொட்லு, மக்கநந்தூர் ஆகிய பகுதிகளிலிருந்து சுமார் 2 ஆயிரம் மக்கள் மீட்கப்பட்டனர். மொத்தமாக இதுவரை குடகு மாவட்டத்தில் 5,500 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் பெரும்பாலான வீடுகளில் மக்கள் முடங்கிக் கிடக்கிறார்கள்.

குடகு மாவட்டம், மடிகேரி தாலுகாவில் காண்டானாகொள்ளி என்ற கிராமமே நிலச்சரிவு மற்றும் மழை வெள்ளத்தால் முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டிருக்கிறது. காண்டானாகொள்ளி கிராமம் இருந்ததற்கான தடயமே அங்கில்லை. கர்நாடக முதல்வர் குமாரசாமி மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டுள்ளனர். 1994-ம் ஆண்டுக்குப் பின்னர் இப்போதுதான் பெரு வெள்ளம் கர்நாடகாவில் ஏற்பட்டுள்ளது. 

அதிகமான வெள்ள பாதிப்புக்கு, வீடு கட்ட அனுமதி வாங்கிவிட்டு சொகுசு பங்களாக்கள் கட்டியதும் முக்கியமான காரணம். மேலும், குறிப்பிட்ட இடங்களில் சொகுசு பங்களாக்கள் கட்ட அனுமதி வழங்கினால், அவை அங்கு கட்டப்படாமல் வேளாண் நிலங்களிலும் தோட்டங்களிலும் அதிகமாகக் கட்டப்படுகின்றன. இவற்றால் நிலத்தடி நீர் அதிகமாக உறிஞ்சப்படுகிறது. இதுபோன்ற செயல்களால் நிலம் உறுதி தன்மையை இழந்துவிடுகிறது. புவியியல் அமைப்பில் மனிதர்கள் செய்த தவறுகளே இதற்குக் காரணம். மேலும் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமானதால், காட்டுக்குள் கட்டடங்கள் கட்டப்பட்டதும் முக்கியமான காரணம். குடகு மலைப்பாதையைக் குடைந்து ரயில் பாதை அமைக்கும் பணியும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஆனாலும், மலைப்பகுதியைச் சுத்தம் செய்து விவசாயப் பயிர்களை பயிர் செய்ய அதிக அளவில் அரசு ஊக்குவித்ததே முக்கியமான காரணம். 

இயற்கையை நாம் துரத்தலாம். அது ஓடும். ஆனால், ஒரே ஒரு முறை அது நின்று திரும்பிப் பார்த்தால் போதும்.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism