Published:Updated:

காலநிலை மாற்றத்தைத் தடுக்க நியூயார்க்கில் குவியும் உலகத் தலைவர்கள்

கடந்த புதன்கிழமை உலகத் தலைவர்கள் பலரும் உலகளாவிய காலநிலைமாற்றம் பாரீஸ் உடன்படிக்கை (Paris global climate accord) மீதான செயல்பாடுகளுக்காகக் கூடியுள்ளனர்.

காலநிலை மாற்றத்தைத் தடுக்க நியூயார்க்கில் குவியும் உலகத் தலைவர்கள்
காலநிலை மாற்றத்தைத் தடுக்க நியூயார்க்கில் குவியும் உலகத் தலைவர்கள்

உலகத் தலைவர்கள் பலரும் உலகளாவிய காலநிலைமாற்றம் பாரீஸ் உடன்படிக்கை (Paris global climate accord) மீதான செயல்பாடுகளுக்காகக் கடந்த புதன்கிழமை கூடியுள்ளனர். 2015-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பாரிஸ் உடன்படிக்கையை இன்னும் அதிகமாகச் செயல்பட வைக்கும் விதமாகக் கடந்த வருடம் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன் (Emmanuel Macron) `ஓர் உலக உச்சி மாநாடு’ என்ற ஒன்றை அறிமுகப்படுத்தினார். ``நான் இங்கே வெறுமனே பேச வரவில்லை, நமது பொறுப்புகளை உணர்ந்துகொள்ள வேண்டும்" என உலகத் தலைவர்கள் மத்தியில் பேசிய இம்மானுவேல். கடந்த வருடம் காலநிலை மாற்றத்துக்கெதிரான போரில் நாம் தோற்று வருகிறோம் என்றும் குறிப்பிட்டிருந்தார். காலநிலை மாற்றத்துக்கெதிராகப் பல்வேறு திட்டங்களையும் வழிகளையும் முன்னெடுத்திருந்தாலும் அதைப் பெரிதாகச் செயல்படுத்தாமல் இருப்பது பாரிஸ் உடன்படிக்கையின் தேவையை மேலும் அதிகரிக்கிறது. 

பசுமை இல்ல வாயுக்களைக் குறைப்பதற்கான இலக்குகளை ட்ரம்ப் கைவிட்டுவிட்டார். அவருக்கு முன்பு பராக் ஒபாமா செய்ததைக்கூட அவர் செய்யவில்லை. சுற்றுச்சூழலுக்கு உகந்த சட்டங்களையும் அவர் புறந்தள்ளியுள்ளார். பசுமை இல்ல வாயுக்களை மிக மோசமாக வெளியேற்றக்கூடிய நாடுகளில் ஆஸ்திரேலியா மிக முக்கியமானது. பசுமை இல்ல வாயுக்களைக் குறைப்பதற்கான வழிமுறைகளை அந்நாடு மேற்கொள்ளவில்லை. பாரீஸ் உடன்படிக்கையின்படி காலநிலை மாற்றத்தைச் சமாளிக்கப் புவி வெப்பமயமாதலைக் குறைக்க வளரும் நாடுகளுக்கு வளர்ந்த பணக்கார நாடுகள் ஒன்றுசேர்ந்து ஆண்டுக்கு 100 பில்லியின் டாலர் வரை கொடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தது. ஆனால், ஆண்டுக்கு 10 பில்லியின் டாலர்கள்தான் கொடுக்கப்பட்டது. 

அடுத்த காலநிலை மாற்றத்துக்கான மாநாடு, COP24 இந்த ஆண்டு டிசம்பர் மாதம் போலந்தில் நடக்க இருக்கிறது. அதற்கான தயாரிப்புக் கூட்டங்களும் விவாதங்களும் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே நடைபெற்று வருகிறது. நியூயார்க்கில் நடந்த இந்தக் கூட்டத்தில் பல்வேறு நாடுகளிலிருந்து 30 தலைவர்கள் கலந்துகொண்டனர். மேலும், காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதற்கான விவாதங்களும் ஆய்வறிக்கைகளும் கூட்டத்தில் பேசப்பட்டது.